|
அத்தியாயம்-1 அலஃபாத்திஹா
- தோற்றுவாய் அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:1. அனைத்துப்புகழும்அகிலங்கள்
எல்லாவற்றையும்
படைத்து வளர்த்துப்
பரிபக்குவப்படுத்தும்
(நாயனான) அல்லாஹ்வுக்கே
ஆகும். 1:2. (அவன்) அளவற்ற
அருளாளன் நிகரற்ற
அன்புடையோன்.
1:3. (அவனே நியாயத்)
தீர்ப்பு நாளின்
அதிபதி(யும் ஆவான்).
1:4. (இறைவா!)
உன்னையே நாங்கள்
வணங்குகிறோம் உன்னிடமே
நாங்கள் உதவியும்
தேடுகிறோம். 1;:5. நீ எங்களை
நேர் வழியில்
நடத்துவாயாக!
1:6. (அது) நீ
எவர்களுக்கு
அருள் புரிந்தாயோ
அவ்வழி. 1:7. (அது) உன்
கோபத்துக்கு
ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர்
வழியுமல்ல. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |