|
அத்தியாயம்-15 ஸ_ரத்துல்
ஹிஜ்ர் (மலைப்பாறை) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
15:1.
அலிஃப், லாம், றா.
(நபியே!) இவை வேதத்தினுடையவும்
தெளிவான திருக்குர்ஆனுடையவுமான
வசனங்களாகும்.
15:2.
தாங்களும் முஸ்லீம்களாக
இருந்திருக்க
வேண்டுமே, என்று
காஃபிர்கள் (மறுமையில்
பெரிதும்) ஆசைப்படுவார்கள்.
15:3.
(இம்மையில் தம்
விருப்பம் போல்)
புசித்துக் கொண்டும்,
சுகம் அனுபவித்துக்
கொண்டும் இருக்க
அவர்களை விட்டு
விடுவீராக அவர்களுடைய
வீணான ஆசைகள்
(மறுமையிலிருந்தும்)
அவர்களைப் பராக்காக்கி
விட்டன (இதன் பலனைப்
பின்னர்) அவர்கள்
நன்கறிந்து கொள்வார்கள்.
15:4.
எந்த ஊர்(வாசி)களையும்
(அவர்களுடைய பாவங்களின்
காரணமாக) அவர்களுக்கெனக்
குறிப்பிட்ட
காலத்தவணையிலன்றி
நாம் அழித்துவிடுவதுமில்லை.
15:5.
எந்த ஒரு சமுதாயமும்
தனக்குரிய தவணைக்கு
முந்தவும் மாட்டார்கள்;
பிந்தவும் மாட்டார்கள்.
15:6.
(நினைவூட்டும்)
வேதம் அருளப்
பட்ட(தாகக் கூறுப)வரே!
நிச்சயமாக நீர்
பைத்தியக்காரர்தான்
என்றும் கூறுகின்றனர்.
15:7.
''நீர் உண்மையாளரில்
ஒருவராக இருப்பின்
நீர் எங்களிடத்தில்
மலக்குகளைக்
கொண்டு வந்திருக்க
வேண்டாமா?"" (என்றும்
கூறுகின்றனர்.)
15:8.
நாம் மலக்குகளை
உண்மையான (தக்க
காரணத்தோடு அல்லாமல்
இறக்குவதில்லை
அப்(படி இறக்கப்படும்)
போது அ(ந் நிராகரிப்ப)வர்கள்
அவகாசம் கொடுக்கப்பட
மாட்டார்கள்.
15:9.
நிச்சயமாக நாம்
தான் (நினைவூட்டும்)
இவ்வேதத்தை (உம்மீது)
இறக்கி வைத்தோம்;
நிச்சயமாக நாமே
அதன் பாதுகாவலனாகவும்
இருக்கின்றோம்.
15:10.
(நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு முன்னால்
முந்திய பல கூட்டத்தாருக்கும்
நாம் (தூதர்களை)
அனுப்பிவைத்தோம்.
15:11.
எனினும் அவர்களிடம்
(நம்முடைய) எந்தத்
தூதர் வந்தாலும்
அவரை அந்த மக்கள்
ஏளனம் செய்யாமல்
இருந்ததில்லை.
15:12.
இவ்வாறே நாம்
குற்றவாளிகளின்
உள்ளங்களில்
இ(வ் விஷமத்)தைப்
புகுத்தி விடுகிறோம்.
15:13.
அவர்கள் இ(வ் வேதத்)தின்
மீது ஈமான் கொள்ள
மாட்டார்கள்;
அவர்களுக்கு
முன்னிருந்தவர்களின்
இந்நடை முறையும்
(இறுதியில் அவர்கள்
அழிவும்) நிகழ்ந்தே
வந்துள்ளன. 15:14.
இவர்களுக்காக
நாம் வசனத்திலிருந்து
ஒரு வாயிலைத்
திறந்து விட்டு,
அவர்கள் அதில்
(நாள் முழுதும்
தொடர்ந்து) ஏறிக்
கொண்டிருந்தாலும்
(அவர்கள் ஈமான்
கொள்ள மாட்டார்கள்).
15:15.
''நம் பார்வைகளெல்லாம்
மயக்கப்பட்டு
விட்டன இல்லை!
நாங்கள் சூனியம்
செய்யப்பட்ட
ஒரு கூட்டமாகி
விட்டோம்'' என்று
நிச்சயமாகக்
கூறுவார்கள்.
15:16.
வானத்தில் கிரகங்களுக்கான
பாதைகளை நிச்சயமாக
நாம் அமைத்து
பார்ப்போருக்கு
அவற்றை அலங்காரமாகவும்
ஆக்கினோம். 15:17.
விரட்டப்பட்ட
ஒவ்வொரு ஷைத்தானை
விட்டும் நாம்
அவற்றைப் பாதுகாத்தோம்.
15:18.
திருட்டுத்தனமாக
ஒட்டுக் கேட்கும்
ஷைத்தானைத்தவிர
(அப்போது) பிரகாசமான
தீப்பந்தம் அந்த
ஷைத்தானை (விரட்டிப்)
பின் பற்றும்.
15:19.
பூமியை நாம் விரித்து
அதில் உறுதியான,
(அசையா) மலைகளை
நிலைப் படுத்தினோம்;
ஒவ்வொரு பொருளையும்
அதற்குரிய அளிவின்
படி அதில் நாம்
முளைப்பித்தோம்.
15:20.
நாம் அதில் உங்களுக்கும்
நீங்கள் எவருக்கு
உணவளிக்கிறவர்களாக
இல்லையோ அவர்களுக்கும்
வாழ்க்கைக்குத்
தேவையான பொருட்களை
ஆக்கியுள்ளோம்.
15:21.
ஒவ்வொரு பொருளுக்குமான
பொக்கிஷங்கள்
நம்மிடமே இருக்கின்றன
அவற்றை நாம் ஒரு
குறிப்பிட்ட
அளவுப்படி அல்லாமல்
இறக்கிவைப்பதில்லை.
15:22.
இன்னும் காற்றுகளை
சூல் கொண்ட மேகங்களாக
நாமே அனுப்புகிறோம்;
பின்னர் வானத்திலிருந்து
நாம் மழை பொழிவித்து,
அதனை உங்களுக்கு
நாம் புகட்டுகிறோம்
- நீங்கள் அதனைச்
சேகரித்து வைப்பவர்களும்
இல்லை. 15:23.
நிச்சயமாக நாமே
உயிரும் கொடுக்கிறோம்,
நாமே மரிக்கவும்
வைக்கின்றோம்;
மேலும், எல்லாவற்றிற்கும்
வாரிஸாக (உரிமையாளனாக)
நாமே இருக்கின்றோம்.
15:24.
உங்களில் முந்தியவர்களையும்
நாம் நிச்சயமாக
அறிவோம்; பிந்தியவர்களையும்
நாம் நிச்சயமாக
அறிவோம். 15:25.
நிச்சயமாக உம்முடைய
இறைவன் (இறுதி
நாளில்) அவர்களை
ஒன்று திரட்டுவான்;
நிச்சயமாக அவன்
ஞானம் மிக்கவன்;
(யாவற்றையும்)
நன்கறிபவன். 15:26.
ஓசை தரக்கூடிய
கருப்பான களி
மண்ணால் மனிதனை
நிச்சயமாக நாமே
படைத்தோம். 15:27.
(அதற்கு) முன்னர்
ஜின்னை (ஜின்களின்
மூல பிதாவை) கடிய
சூடுள்ள நெருப்பிலிருந்து
நாம் படைத்தோம்.
15:28.
(நபியே!) உம்முடைய
இறைவன் மலக்குகளிடம்;
''ஓசை தரும் கருப்பான
களிமண்ணிலிருந்து,
மனிதனை நிச்சயமாக
நான் படைக்கப்போகிறேன்""
என்றும், 15:29.
அவரை நான் செவ்வையாக
உருவாக்கி, அவரில்
என் ஆவியிலிருந்து
ஊதியதும், ''அவருக்கு
சிரம் பணியுங்கள்""
என்றும் கூறியதை
(நினைவு கூர்வீராக)!
15:30.
அவ்வாறே மலக்குகள்
- அவர்கள் எல்லோரும்
- சிரம் பணிந்தார்கள்.
15:31.
இப்லீஸைத்தவிர
- அவன் சிரம் பணிந்தவர்களுடன்
இருப்பதை விட்டும்
விலகிக்கொண்டான்.
15:32.
''இப்லீஸே! சிரம்
பணிந்தவர்களுடனே
நீயும் சேராமல்
(விலகி) இருந்ததற்குக்
காரணம் என்ன?""
என்று (இறைவன்)
கேட்டான். 15:33.
அதற்கு இப்லீஸ்,
''ஓசை தரும் கருப்பான
களிமண்ணிலிருந்து,
நீ படைத்துள்ள
(ஒரு) மனிதனுக்கு
நான் சிரம் பணிவதற்கில்லை!""
என்று கூறினான்.
15:34.
''அவ்வாறாயின்,
நீ இங்கிருந்து
வெளியேறிவிடு
நிச்சயமாக நீ
விரட்டப்பட்டவனாக
இருக்கிறாய்.""
15:35.
''மேலும், நிச்சயமாக
நியாயத் தீர்ப்பு
நாள் வரை உன் மீது
சாபம் உண்டாவதாக!""
என்று (இறைவனும்)
கூறினான். 15:36.
''என்னுடைய இறைவனே!
இறந்தவர்கள்
எழுப்பப்படும்
நாள்வரை எனக்கு
அவகாசம் கொடுப்பாயாக!""
என்று இப்லீஸ்
கூறினான். 15:37.
''நிச்சயமாக, நீ
அவகாசம் அளிக்கப்பட்டோரில்
ஒருவானாவாய்;""
15:38.
''குறிப்பிட்ட
நேரத்தின் நாள்
வரும் வரையில்""
என்று அல்லாஹ்
கூறினான். 15:39.
(அதற்கு இப்லீஸ்,)
''என் இறைவனே! என்னை
நீ வழிகேட்டில்
விட்டுவிட்டதால்,
நான் இவ்வுலகில்
(வழி கேட்டைத்தரும்
அனைத்தையும்)
அவர்களுக்கு
அழகாகத் தோன்றும்படி
செய்து (அதன் மூலமாக)
அவர்கள் அனைவரையும்
வழிகெடுத்தும்
விடுவேன். 15:40.
''அவர்களில் அந்தரங்க
- சுத்தியுள்ள
(உன்னருள் பெற்ற)
உன் நல்லடியார்களைத்
தவிர"" என்று கூறினான்.
15:41.
(அதற்கு இறைவன்
''அந்தரங்க சுத்தியுள்ள
என் நல்லடியார்களின்)
இந்த வழி, என்னிடம்
(வருவதற்குரிய)
நேரான வழியாகும்.
15:42.
''நிச்சயமாக என்
அடியார்கள் மீது
உனக்கு எவ்வித
அதிகாரமும் இல்லை
- உன்னைப் பின்பற்றி
வழிகெட்டவர்களைத்
தவிர"" என்று கூறினான்.
15:43.
நிச்சயமாக (உன்மைப்
பின்பற்றும்)
அனைவருக்கும்
நரகம் வாக்களிக்கப்பட்ட
இடமாகும். 15:44.
அதற்கு ஏழு வாசல்கள்
உண்டு; அவ்வாசல்கள்
ஒவ்வொன்றும்
பங்கிடப்பட்ட
(தனித்தனிப்) பிரிவினருக்கு
உரியதாகும். 15:45.
நிச்சயமாக பயபக்தியுடையவர்கள்
சுவனபதிகளிலும்,
நீரூற்றுகளிலும்
(சுகம் பெற்று)
இருப்பார்கள்.
15:46.
(அவர்களை நோக்கி)
''சாந்தியுடனும்,
அச்சமற்றவர்களாகவும்
நீங்கள் இதில்
நுழையுங்கள்""
(என்று கூறப்படும்).
15:47.
மேலும், அவர்களுடைய
நெஞ்சங்களிலிருந்து
குரோதத்தை நாம்
நீக்கி விடுவோம்;
(எல்லோரும்) சகோதரர்களாக
ஒருவரையொருவர்
முன்னோக்கி அரியாசனங்களில்
(ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
15:48.
அவற்றில் அவர்களுக்கு
எவ்வித சிரமமும்
ஏற்படாது அவற்றிலிருந்து
அவர்கள் வெளியேற்றப்படுபவர்களுமல்லர்.
15:49.
(நபியே!) என் அடியார்களிடம்
அறிவிப்பீராக
''நிச்சயமாக நான்
மிக்க மன்னிப்போனாகவும்,
மிக்க அன்புடையவனாகவும்
இருக்கின்றேன்.""
15:50.
''(ஆயினும்) நிச்சயமாக
என்னுடைய வேதனையும்
நோவினைமிக்கதாகவே
இருக்கும்"" (என்றும்
சொல்லும்). 15:51.
இன்னும், இப்றாஹீமின்
விருந்தினர்களைப்
பற்றியும் அவர்களுக்கு
அறிவிப்பீராக!
15:52.
அவர்கள் அவரிடம்
வந்து, ''உங்களுக்குச்
சாந்தி (ஸலாமுன்)
உண்டாவதாக!"" என்று
சொன்ன போது அவர்,
''நாம் உங்களைப்பற்றி
பயப்படுகிறோம்""
என்று கூறினார்.
15:53.
அதற்கு அவர்கள்,
''பயப்படாதீர்!
நாம் உமக்கு மிக்க
ஞானமுள்ள ஒரு
மகனைப் பற்றி
நன்மாராயம் கூறு(வதற்காகவே
வந்திருக்)கின்றோம்""
என்று கூறினார்கள்.
15:54.
அதற்கவர், ''என்னை
முதுமை வந்தடைந்திருக்கும்போதா
எனக்கு நன்மாராயங்
கூறுகிறீர்கள்?
எந்த அடிப்படையில்
நீங்கள் நன்மாராயங்
கூறுகிறீர்கள்?
உங்கள் நற்செய்தி
எதைப்பற்றியது?""
எனக் கேட்டார்.
15:55.
அதற்கவர்கள்,
''மெய்யாகவே, நாங்கள்
உமக்கு நன்மாராயங்
கூறினோம்; ஆகவே
நீர் (அதுபற்றி)
நிராசை கொண்டோரில்
ஒருவராகி விடாதீர்!""
என்று கூறினார்கள்.
15:56.
''வழிகெட்டவர்களைத்
தவிர, வேறெவர்
தம் இறைவனுடைய
அருளைப்பற்றி
நிராசைக் கொள்வர்""
என்று (இப்ராஹீம்
பதில்) சொன்னார்,
15:57.
''(அல்லாஹ்வின்)
தூதர்களே! உங்களுடைய
காரியமென்ன?""
என்று (இப்றாஹீம்)
கேட்டார். 15:58.
அதற்கவர்கள்,
''குற்றவாளிகளான
ஒரு கூட்டத்தாரிடம்
நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்.
15:59.
''லூத்தின் கிளையாரைத்
தவிர, அவர்களனைவரையும்
நிச்சயமாக நாம்
காப்பாற்றுவோம்.
15:60.
ஆனால் அவர் (லூத்)
உடைய மனைவியைத்
தவிர - நிச்சயமாக
அவள் (காஃபிர்களின்
கூட்டத்தாரோடு)
பின்தங்கியிருப்பாள்
என்று நாம் நிர்ணயித்து
விட்டோம்"" என்று
(வானவர்கள்) கூறினார்கள்.
15:61.
(இறுதியில்) அத்தூதர்கள்
லூத்துடைய கிளையாரிடம்
வந்த போது. 15:62.
(அவர்களை நோக்கி
எனக்கு) அறிமுகமில்லாத
மக்களாக நீங்கள்
இருக்கிறீர்கள்""
என்று (லூத்) சொன்னார்,
15:63.
(அதற்கு அவர்கள்,)
''அல்ல, (உம் கூட்டதாராகிய)
இவர்கள் எதைச்
சந்தேகித்தார்களோ,
அதை நாம் உம்மிடம்
கொண்டு வந்திருக்கிறோம்;
15:64.
(உறுதியாக நிகழவிருக்கும்)
உண்மையையே உம்மிடம்
நாங்கள் கொண்டு
வந்திருக்கின்றோம்;
நிச்சயமாக நாங்கள்
உண்மையாளர்களாகவே
இருக்கிறோம்.
15:65.
ஆகவே இரவில் ஒரு
பகுதியில் உம்முடைய
குடும்பத்தினருடன்
நடந்து சென்று
விடும்; அன்றியும்
(அவர்களை முன்னால்
செல்ல விட்டு)
அவர்கள் பின்னே
நீர் தொடர்ந்து
செல்லும். உங்களில்
எவரும் திரும்பிப்
பார்க்க வேண்டாம்.
நீங்கள் ஏவப்படும்
இடத்திற்கு சென்று
விடுங்கள் என்று
அ(த் தூது)வர்கள்
கூறினார்கள்.
15:66.
மேலும், 'இவர்கள்
யாவரும் அதிகாலையிலேயே
நிச்சயமாக வேரறுக்கப்பட்டு
விடுவார்கள்
(என்னும்) அக்காரியத்தையும்
நாம் முடிவாக
அவருக்கு அறிவித்தோம்".
15:67.
(லூத்தின் விருந்தினர்களாக
வாலிபர்கள் வந்திருப்பதையறிந்து)
அந் நகரத்து மக்கள்
மிக்க மகிழ்ச்சியுடன்
வந்து சேர்ந்தார்கள்.
15:68.
(லூத் வந்தவர்களை
நோக்கி;) ''நிச்சயமாக
இவர்கள் என்னுடைய
விருந்தினர்கள்.
ஆகவே, (அவர்கள்
முன்) என்னை நீங்கள்
அவமானப்படுத்தி
விடாதீர்கள்;""
15:69.
''அல்லாஹ்வுக்கு
அஞ்சுங்கள். என்னைக்
கேவலப்படுத்தி
விடாதீர்கள்""
என்றும் கூறினார்.
15:70.
அதற்கவர்கள்,
''உலக மக்களைப்
பற்றியெல்லாம்
(எங்களிடம் பேசுவதை
விட்டும்) நாங்கள்
உம்மைத் தடுக்கவில்லையா?""
என்று கேட்டார்கள்.
15:71.
அதற்கவர், ''இதோ!
என் புதல்வியர்
இருக்கிறார்கள்.
நீங்கள் (ஏதும்)
செய்தே தீர வேண்டுமெனக்
கருதினால் (இவர்களை
திருமணம்) செய்து
கொள்ளலாம்"" என்று
கூறினார். 15:72.
(நபியே!) உம் உயிர்
மீது சத்தியமாக,
நிச்சயமாக அவர்கள்
தம் மதிமயக்கத்தில்
தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.
15:73.
ஆகவே, பொழுது உதிக்கும்
வேளையில், அவர்களை
பேரிடி முழக்கம்
பிடித்துக் கொண்டது.
15:74
பின்பு அவர்களுடைய
ஊரை மேல் கீழாகப்
புரட்டி விட்டோம்;
இன்னும், அவர்கள்
மேல் சுடப்பட்ட
களிமண்ணாலான
கற்களைப் பொழியச்
செய்தோம். 15:75.
நிச்சயமாக இதில்
சிந்தனையுடையோருக்குப்
பல அத்தாட்சிகள்
இருக்கின்றன.
15:76.
நிச்சயமாக அவ்வூர்
(நீங்கள் பயணத்தில்)
வரப்போகும் வழியில்தான்
இருக்கிறது. 15:77.
திடமாக முஃமின்களுக்கு
இதில் (தகுந்த)
அத்தாட்சி இருக்கிறது.
15:78.
இன்னும், அடர்ந்த
சோலைகளில் வசித்திருந்த
(ஷ{ஐபுடைய) சமூகத்தாரும்
அக்கிரமக்காரர்களாக
இருந்தனர். 15:79.
எனவே அவர்களிடம்
நாம் பழிவாங்கினோம்;
(அழிந்த) இவ்விரு
(மக்களின்) ஊர்களும்
பகிரங்கமான (போக்குவரத்து)
வழியில் தான்
இருக்கின்றன.
15:80.
(இவ்வாறே ஸமூது
சமூகத்தாரான)
மலைப்பாறை வாசிகளும்
(நம்) தூதர்களைப்
பொய்யாக்கிக்
கொண்டிருந்தனர்.
15:81.
அவர்களுக்கு
நாம் நம் அத்தாட்சிகளைக்
கொடுத்தோம்; அவர்கள்
அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே
இருந்தார்கள்.
15:82.
அச்சமற்றுப்
பாதுகாப்பாக
வாழலாம் எனக்கருதி,
அவர்கள் மலைகளைக்
குடைந்து வீடுகளை
அமைத்துக் கொண்டார்கள்.
15:83.
ஆனால், அவர்களையும்
அதிகாலையில்
பேரிடி முழக்கம்
பிடித்துக் கொண்டது,
15:84.
அப்போது அவர்கள்
(தம் பாதுகாப்புக்கென)
அமைத்துக் கொண்டிருந்தவை
எதுவும் அவர்களுக்கு
ஒரு பலனும் அளிக்கவில்லை.
15:85.
நாம் வானங்களையும்,
பூமியையும், இவை
இரண்டிற்குமிடையே
உள்ளவற்றையும்
உண்மையைக் கொண்டே
அல்லாது படைக்கவில்லை.
(நபியே! இவர்களுடைய
தண்டனைக்குரிய)
காலம் நிச்சயமாக
வருவதாகவே உள்ளது
ஆதலால் (இவர்களின்
தவறுகளை) முற்றாகப்
புறக்கணித்துவிடும்.
15:86.
நிச்சயமாக உம்முடைய
இறைவன் (எல்லாவற்றையும்)
படைத்தவனாகவும்,
அனைத்தையும்
அறிந்தவனாகவும்
இருக்கின்றான்.
15:87.
(நபியே!) நிச்சயமாக
நாம் உமக்கு திரும்பத்
திரும்ப ஓதக்
கூடிய (ஸ{ரத்துல்
ஃபாத்திஹாவின்)
ஏழு வசனங்களையும்,
மகத்தான (இந்த)
குர்ஆனையும்
வழங்கியிருக்கின்றோம்.
15:88.
அவர்களிலிருந்து,
சில வகுப்பினரை
இவ்வுலகில் எவற்றைக்
கொண்டு சுகம்
அனுபவிக்க நாம்
செய்திருக்கின்றோமோ
அவற்றின் பால்
நீர் உமது கண்களை
நீட்டாதீர்; அவர்களுக்காக
நீர் துக்கப்படவும்
வேண்டாம்; ஆனால்
உம் (அன்பென்னும்)
இறக்கையை முஃமின்கள்
மீது இறக்கும்.
15:89.
''பகிரங்கமாக அச்சமூட்டி
எச்சரிப்பவனாக
நிச்சயமாக நான்
இருக்கின்றேன்""
என்று நீர் கூறுவீராக 15:90.
(நபியே! முன் வேதங்களை)
பலவாறாகப் பிரித்தவர்கள்
மீது முன்னர்
நாம் (வேதனையை)
இறக்கியவாறே,
15:91.
இந்த குர்ஆனை
பலவாறாகப் பிரிப்போர்
மீதும் (வேதனையை
இறக்கி வைப்போம்).
15:92.
உம் இறைவன் மீது
ஆணையாக, நிச்சயமாக
நாம் அவர்களனைவரையும்
விசாரிப்போம்.
15:93.
அவர்கள் செய்து
கொண்டிருந்த
(எல்லாச்) செயல்களைப்
பற்றியும், (நாம்
விசாரிப்போம்).
15:94.
ஆதலால் உமக்குக்
கட்டளையிடப்
பட்டிருப்பதை
வெளிப்படையாக
அவர்களுக்கு
அறிவிப்பீராக
இணைவைத்து வணங்குபவர்களை
புறக்கணித்துவிடுவீராக!
15:95.
உம்மை ஏளனம் செய்பவர்கள்
சம்பந்தமாக நாமே
உமக்குப் போதுமாக
இருக்கின்றோம்.
15:96.
இவர்கள் எத்தகையோர்
என்றால் அல்லாஹ்வுடன்
வேறு தெய்வத்தையும்
(இணை) ஆக்கிக் கொள்கிறார்கள்;
(இதன் பலனை இவர்கள்)
பின்னர் அறிந்து
கொள்வார்கள்.
15:97.
(நபியே!) இவர்கள்
(இழிவாகப்) பேசுவது
உம் நெஞ்சத்தை
எப்படி நெருக்குகிறது
என்பதை நாம் அறிவோம்.
15:98.
நீர் (அப்பேச்சைப்
பொருட்படுத்தாது)
உம் இறைவனைப்
புகழ்ந்து துதிப்பீராக!
ஸ{ஜூது செய்(து
சிரம் பணி)வோர்களில்
நீரும் ஆகிவிடுவீராக!
15:99.
உமக்கு மரணம்
வரும்வரை உமது
இறைவனை வணங்குவீராக!
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |