|
அத்தியாயம்-19 ஸ_ரத்து
மர்யம் அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 19:1.
காஃப், ஹா, யா, ஐன்,
ஸாத் 19:2.
(நபியே! இது) உம்முடைய
இறைவன் தன் அடியாராகிய
ஜகரிய்யாவுக்கு
அருளிய ரஹ்மத்தைப்
பற்றியதாகும். 19:3.
அவர் தம் இறைவனிடம்
தாழ்ந்த குரலில்
பிரார்த்தித்த
போது (இவ்வாறு
ரஹ்மத்தை அருளினான்). 19:4.
(அவர்) கூறினார்;
''என் இறைவனே! நிச்சயமாக
என் எலும்புகள்
பலஹீனமடைந்து
விட்டன என் தலையும்
நரையால் (வெண்மையாய்)
இலங்குகிறது.
என் இறைவனே! (இதுவரையில்)
நான் உன்னிடம்
செய்த பிரார்த்தனையில்
பாக்கியம் இல்லாதவனாகப்
போய்விடவில்லை. 19:5.
''இன்னும், எனக்குப்
பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி
நிச்சயமாக நான்
அஞ்சகிறேன்; மேலும்,
என் மனைவியோ மலடாக
இருக்கிறாள்;
ஆகவே, நீ உன் புறத்திலிருந்து
எனக்கு ஒரு வாரிசை
அளிப்பாயாக! 19:6.
''அவர் எனக்கு வாரிசாகவும்
இருப்பார், யஃகூபுடைய
சந்ததியினருக்கு
வாரிசாகவும்
இருப்பார்; என்
இறைவனே!
அவரை (உன்னால்)
பொருந்திக்கொள்ளப்
பட்டவராகவும்
நீ ஆக்கி வைப்பாயாக!"" 19:7.
''ஜகரிய்யாவே! யஹ்யா
என்ற பெயர் கொண்ட
ஒரு புதல்வனை(த்
தருவது) பற்றி
நிச்சயமாக நாம்
உமக்கு நற்செய்தி
கூறுகிறோம். இதற்கு
முன்னர் இப்பெயர்
கொண்டவரை நாம்
ஆக்கவில்லை""
(என்று இறைவன்
கூறினான்). 19:8.
(அதற்கு அவர்) ''என்
இறைவனே! என் மனைவியோ
மலடாகவும், முதுமையின்
தள்ளாத பருவத்தை
நான் அடைந்தும்
இருக்கும் நிலையில்
எனக்கு எவ்வாறு
ஒரு புதல்வன்
உண்டாகுவான்?""
எனக் கூறினார். 19:9.
''(அது) அவ்வாறே (நடைபெரும்)
என்று கூறினான்.
இது எனக்கு மிகவும்
சுலபமானதே! முன்னர்
நீர் ஒரு பொருளாகவும்
இல்லாதிருந்த
காலத்து, நானே
உம்மை படைத்தேன்""
என்று இறைவன்
கூறினான். 19:10.
(அதற்கவர்) ''என்
இறைவனே! நீ எனக்கு
ஓர் அத்தாட்சியை
(இதற்காக) ஏற்படுத்துவாயாக!""
என்று வேண்டினார்;
''நீர் சவுக்கியத்துடன்
இருக்கும் நிலையிலேயே
மூன்று இரவு(பகல்)கள்
நீர் மக்களுடன்
பேச முடியாமலிருப்பீர்;
(அதுவே) உமக்கு
அத்தாட்சியாகும்""
என்று கூறினான். 19:11.
ஆகவே அவர் மிஹ்ராபை
(தொழும் இடம்) விட்டு
வெளியே தம் சமூகத்தாரிடம்
வந்தார்; பின்னர்
அவர்களிடம் (பேச
முடியாத நிலையில்
சயிக்கினையாக)
அவர், ''காலையிலும்,
மாலையிலும் (அல்லாஹ்வைத்
துதித்து) தஸ்பீஹீ
செய்யுங்கள்""
என்று உணர்த்தினார். 19:12.
(அதன் பின்னர்)
''யஹ்யாவே! நீர்
இவ்வேதத்தைப்
பலமாகப் பற்றிப்
பிடித்துக் கொள்ளும்""
(எனக் கூறினோம்)
இன்னும் அவர்
குழந்தையாக இருக்கும்
போதே அவருக்கு
நாம் ஞானத்தை
அளித்தோம். 19:13.
அன்றியும் நாம்
நம்மிடமிருந்து
இரக்க சிந்தனையும்,
பரிசுத்தத் தன்மையையும்
(அவருக்குக் கொடுத்தோம்)
இன்னும் அவர்
மிகவும் பயபக்தியுடையவராக
இருந்தார். 19:14.
மேலும், தம் பெற்றோருக்கு
நன்றி செய்பவராகவும்
இருந்தார்; அவர்
பெருமை அடிப்பவராகவோ,
(அல்லாஹ்வுக்கு)
மாறு செய்பவராகவோ
இருக்கவில்லை. 19:15.
ஆகவே, அவர் பிறந்த
நாளிலும், அவர்
இறக்கும் நாளிலும்,
(மறுமையில்) அவர்
உயிர் பெற்றெழும்
நாளிலும் அவர்
மீது ஸலாம் (சாந்தி)
நிலைத்திருக்கும். 19:16.
(நபியே!) இவ்வேதத்தில்
மர்யமைப் பற்றியும்
நினைவு கூர்வீராக
அவர் தம் குடும்பத்தினரை
விட்டும் நீங்கி,
கிழக்குப் பக்கமுள்ள
இடத்தில் இருக்கும்போது, 19:17.
அவர் (தம்மை) அவர்களிடமிருந்து
(மறைத்துக் கொள்வதற்காக)
ஒரு திரையை அமைத்துக்
கொண்டார்; அப்போது
நாம் அவரிடத்தில்
நம் ரூஹை (ஜிப்ரயீலை)
அனுப்பி வைத்தோம்;
(மர்யமிடம்) சரியான
மனித உருவில்
தோன்றினார். 19:18.
(அப்படி அவரைக்
கண்டதும்,) ''நிச்சயமாக
நாம் உம்மை விட்டும்
ரஹ்மானிடம் காவல்
தேடுகிறேன்; நீர்
பயபக்தியுடையவராக
இருந்தால் (நெருங்காதீர்)""
என்றார். 19:19.
''நிச்சயமாக நான்
உம்முடைய இறைவனின்
தூதன்; பரிசுத்தமான
புதல்வரை உமக்கு
அளிக்க (வந்துள்ளேன்"")
என்று கூறினார். 19:20.
அதற்கு அவர் (மர்யம்),
''எந்த ஆடவனும்
என்னைத் தீண்டாமலும்,
நான் நடத்தை பிசகியவளாக
இல்லாதிருக்கும்
நிலையிலும் எனக்கு
எவ்வாறு புதல்வன்
உண்டாக முடியும்?""
என்று கூறினார். 19:21.
''அவ்வாறேயாகும்;
'இது எனக்கு மிகவும்
சுலபமானதே மனிதர்களுக்கு
ஓர் அத்தாட்சியாகவும்,
நம்மிடமிருந்து
ஒரு ரஹ்மத்தாகவும்
நாம் அவரை ஆக்குவோம்;
இது விதிக்கப்பட்ட
விஷயமாகும்" என்று
உம் இறைவன் கூறுகிறான்""
எனக் கூறினார். 19:22.
அப்பால், மர்யம்
ஈஸாவை கருக்கொண்டார்
பின்னர் கர்ப்பத்துடன்
தொலைவிலுள்ள
ஓரிடத்தை சென்றடைந்தார். 19:23.
பின்பு (அவருக்கு
ஏற்பட்ட) பிரசவ
வேதனை அவரை ஒரு
போPத்த மரத்தின்பால்
கொண்டு வந்தது
''இதற்கு முன்பே
நான் இறந்து, முற்றிலும்
மறக்கப் பட்டவளாகி
இருக்கக் கூடாதா""
என்று கூறி(அரற்றி)னார். 19:24.
(அப்போது ஜிப்ரயீல்)
அவருக்குக் கீழிருந்து
''(மர்யமே!) கவலைப்படாதீர்கள்!
உம்முடைய இறைவன்
நிச்சயமாக உமக்கு
கீழாலேயே ஒரு
சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்""
என்று அழைத்து
கூறினான். 19:25.
''இன்னும், இந்த
போPச்ச மரத்தின்
கிளையைப் பிடித்து
உம் அருகில் இழுத்துக்
குலுக்கும்; (கொய்வதற்குப்)
பக்குவமான பழங்களை
உம் மீது அது உதிர்க்கும். 19:26.
''ஆகவே, (அவற்றை) உண்டு,
(ஆற்று நீரைப்)
பருகி கண் குளிர்ந்து
இருப்பீராக! பின்னர்
எந்த மனிதரையேனும்
நீர் பார்க்க
நேரிட்டால், 'மெய்யாகவே
அர்ரஹ்மானுக்காக
நான் நோன்பிருப்பதாக
நேர்ந்திருக்கின்றேன்;
ஆதலின் இன்றைய
தினம் எந்த மனிதருடனும்
பேச மாட்டேன்""
என்று கூறும். 19:27.
பின்னர் (மர்யம்)
அக்குழந்தையைச்
சுமந்து கொண்டு
தம் சமூகத்தாரிடம்
வந்தார்; அவர்கள்
கூறினார்கள்;
''மர்யமே! நிச்சயமாக
நீர் ஒரு விபாPதமான
பொருளைக் கொண்டு
வந்திருக்கிறீர்!"" 19:28.
''ஹாரூனின் சகோதரியே!
உம் தந்தை கெட்ட
மனிதராக இருக்கவில்லை
உம் தாயாரும்
நடத்தை பிசகியவராக
இருக்கவில்லை""
(என்று பழித்துக்
கூறினார்கள்). 19:29.
(ஆனால், தம் குழந்தையிடமே
கேட்கும் படி)
அதன் பால் சுட்டிக்
காட்டினார்; ''நாங்கள்
தொட்டிலில் இருக்கும்
குழந்தையுடன்
எப்படிப் பேசுவோம்?""
என்று கூறினார்கள். 19:30.
''நிச்சயமாக நான்
அல்லாஹ்வுடைய
அடியானாக இருக்கின்றேன்;
அவன் எனக்கு வேதத்தைக்
கொடுத்திருக்கின்றான்;
இன்னும், என்னை
நபியாக ஆக்கியிருக்கின்றான். 19:31.
''இன்னும், நான்
எங்கிருந்தாலும்,
அவன் என்னை முபாரக்கினாவனாக
(நற்பாக்கியமுடையவனாக)
ஆக்கியிருக்கின்றான்;
மேலும், நான் உயிருடன்
இருக்கும் காலமெல்லாம்
தொழுகையையும்,
ஜகாத்தையும்
(நிறைவேற்ற) எனக்கு
வஸீயத் செய்து
(கட்டளையிட்டு)
இருக்கின்றான். 19:32.
''என் தாயாருக்கு
நன்றி செய்பவனாக
(என்னை ஏவியிருக்கின்றான்;)
நற்பேறு கெட்ட
பெருமைக்காரனாக
என்னை அவன் ஆக்கவில்லை. 19:33.
''இன்னும், நான்
பிறந்த நாளிலும்,
நான் இறக்கும்
நாளிலும் (மறுமையில்)
நான் உயிர் பெற்று
எழும் நாளிலும்
என் மீது சாந்தி
நிலைத்திருக்கும்""
என்று (அக்குழந்தை)
கூறியது. 19:34.
இ(த்தகைய)வர் தாம்
மர்யமுடைய புதல்வர்
ஈஸா (ஆவார்) எதைக்
குறித்து அவர்கள்
சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ
அதுபற்றிய உண்மையான
சொல் (இதுவே ஆகும்). 19:35.
அல்லாஹ்வுக்கு
எந்த ஒரு புதல்வனையும்
ஏற்படுத்திக்
கொள்ள வேண்டியதில்லை
அவன் தூயவன்; அவன்
ஒரு காரியத்தைத்
தீர்மானித்தால்,
''ஆகுக!"" என்று
தான் கூறுவான்;
(உடனே) அது ஆகிவிடுகிறது. 19:36.
''நிச்சயமாக அல்லாஹ்வே
(படைத்துப் பரிபக்குவப்படுத்தும்)
என்னுடைய இறைவனாகவும்,
உங்களுடைய இறைவனாகவும்
இருக்கின்றான்;
ஆகையால், அவனையே
நீங்கள் வணங்குங்கள்;
இதுவே நேரான வழியாகும்""
(என்று நபியே! நீர்
கூறும்). 19:37.
ஆனாலும், அவர்களிடையே
இருந்த கூட்டத்தார்
இது பற்றி(த் தங்களுக்குள்ளே)
அபிப்பிராய பேதங்
கொண்டனர். (சத்தியத்தை)
நிராகரித்துக்
கொண்டிருப்பவர்களுக்கு,
அவர்கள் யாவரும்
ஒன்று சேர்க்கப்படும்
வலுப்பமான நாளில்
கேடுதான்! 19:38.
அவர்கள் நம்மிடத்தில்
வரும் நாளில்
எவ்வளவு தெளிவாகக்
கேட்பார்கள்,
பார்ப்பார்கள்!
எனினும் அந்த
அக்கிரமக்காரர்கள்
பகிரங்கமான வழிகேட்டிலேயே
இன்று இருக்கிறார்கள். 19:39.
மேலும், (நபியே!)
தீர்ப்பு அளிக்கப்படும்
அந்த கைசேதப்படக்கூடிய
நாளைக் குறித்து,
நீங்கள் அவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வீராக! எனினும்
அவர்கள் அதைப்பற்றிக்
கவலைப்படாதவர்களாகவும்,
நம்பாதவர்களாகவும்
இருக்கின்றார்கள். 19:40.
நிச்சயமாக நாமே,
பூமியையும் அதன்
மீதுள்ளவர்களையும்
வாரிசாகக் கொள்வோம்;
இன்னும் நம்மிடமே
(அனைவரும்) மீட்கப்படுவார்கள். 19:41.
(நபியே!) இவ்வேதத்தில்
இப்ராஹீமைப்பற்றியும்
நினைவு கூர்வீராக!
நிச்சயமாக அவர்
மிக்க உண்மையாளராகவும்
- நபியாகவும் - இருந்தார். 19:42.
''என் அருமைத் தந்தையே!
(யாதொன்றையும்)
கேட்க இயலாத, பார்க்க
இயலாத உங்களுக்கு
எந்த தேவையையும்
பூர்த்தி செய்ய
இயலாததுமான ஒன்றை
ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?""
என்று அவர் தம்
தந்தையிடம் கூறியதை
நினைவுபடுத்தும். 19:43.
''என் அருமைத் தந்தையே!
மெய்யாகவே உங்களிடம்
வந்திராத கல்வி
ஞானம் நிச்சயமாக
எனக்கு வந்திருக்கிறது
ஆகவே, நீங்கள்
என்னைப் பின்பற்றுங்கள்;
நான் உங்களைச்
செவ்வையான நேர்வழியில்
நடத்துகிறேன். 19:44.
''என் அருமைத் தந்தையே!
நீங்கள் ஷைத்தானை
வணங்காதீர்கள்;
நிச்சயமாக ஷைத்தான்,
அர்ரஹ்மானுக்கு
(அருள் மிக்க நாயனுக்கு)
மாறு செய்பவன். 19:45.
''என் அருமைத் தந்தையே!
நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள
வேதனைவந்து உங்களைத்
தொட்டு, நீங்கள்
ஷைத்தானின் கூட்டாளியாகி
விடுவதைப் பற்றி
நான் அஞ்சுகிறேன்""
(என்றார்). 19:46.
(அதற்கு அவர்) ''இப்றாஹீமே!
நீர் என் தெய்வங்களை
புறக்கணிக்கிறீரா?
நீர் (இதை விட்டும்)
விலகிக் கொள்ளாவிட்டால்
உம்மைக் கல்லெறிந்து
கொல்வேன்; இனி
நீர் என்னைவிட்டு
நெடுங்காலத்திற்கு
விலகிப் போய்விடும்""
என்றார். 19:47.
(அதற்கு இப்ராஹீம்)
''உம்மீது ஸலாம்
உண்டாவதாக! மேலும்
என் இறைவனிடம்
உமக்காகப் பிழை
பொறுக்கத் தேடுவேன்;
நிச்சயமாக அவன்
என் மீது கிருபையுடையவனாகவே
இருக்கின்றான்""
என்று கூறினார். 19:48.
நான் உங்களை விட்டும்,
அல்லாஹ்வையன்றி
நீங்கள் பிரார்த்திப்பவற்றை
விட்டும் விலகிக்
கொள்கிறேன்; மேலும்
நான் என் இறைவனை
பிரார்த்தித்துக்
கொண்டே இருப்பேன்;
என் இறைவனைப்
பிரார்த்திப்பது
கொண்டு நான் நிர்ப்பாக்கியவானாகாமல்
இருக்கப் போதும்""
(என்றார்). 19:49.
(இவ்வாறு) அவர்,
அவர்களை விட்டும்,
அவர்கள் வணங்கிக்
கொண்டிருந்த
அல்லாஹ் அல்லாதவற்றை
விட்டும் விலகிக்
கொண்டபோது, இஸ்ஹாக்கையும்,
யஃகூபையும் அவருக்கு
நாம் நன்கொடையளித்தோம்;
இன்னும் (அவர்கள்)
ஒவ்வொருவரையும்
நபியாக ஆக்கினோம். 19:50.
மேலும் நாம் அவர்களுக்கு
நம் ரஹ்மத்திலிருந்தும்
நன்கொடைகளையளித்தோம்;
அவர்களுக்கு
உயர்ந்த நற்பெயரை
நாம் ஏற்படுத்தினோம். 19:51.
(நபியே!) இவ்வேதத்தில்
மூஸாவைப் பற்றியும்
நினைவு கூர்வீராக!
நிச்சயமாக அவர்
மாசில்லாத (தூயவராக)
இருந்தார். அவர்
ரஸ_லாகவும் நபியாகவும்
இருந்தார். 19:52.
இன்னும், நாம்
அவரை தூர் (ஸினாய்)
மலையின் வலப்புறத்திலிருந்து
கூப்பிட்டோம்;
மேலும் இரகசியத்தில்
பேச நாம் அவரை
நம்மிடம் நெருங்கி
வரச் செய்தோம். 19:53.
மேலும், நம்முடைய
ரஹ்மத்தில் நின்றும்
அவருடைய சகோதரர்
ஹாரூனையும் நபியாக
அவருக்கு நன்கொடையளித்தோம். 19:54.
(நபியே!) இவ்வேதத்தில்
இஸ்மாயீலைப்
பற்றியும் நினைவு
கூர்வீராக! நிச்சயமாக
அவர் வாக்குறுதியில்
உண்மையாளராக
இருந்தார்; இன்னும்
அவர் தூதராகவும்,
நபியாகவும் இருந்தார். 19:55.
அவர் தம் குடும்பத்தினரைத்
தொழுகையைக் கடைப்பிடிக்கவும்,
ஜகாத்து கொடுத்து
வரும்படியும்
ஏவுபவராக இருந்தார்
தம் இறைவனிடத்தில்
மிகவும் விரும்பப்பட்டவராகவும்
அவர் இருந்தார். 19:56.
(நபியே!) இவ்வேதத்தில்
இத்hPஸைப் பற்றியும்
நினைவு கூர்வீராக!
நிச்சயமாக அவர்
ஸித்தீக்காக
(மிக்க சத்தியவானாக)
நபியாக இருந்தார். 19:57.
மேலும், நாம் அவரை
ஓர் உயரிய இடத்தில்
உயர்த்தினோம். 19:58.
இவர்கள் ஆதமுடைய
சந்ததியிலும்,
நூஹ்வுடன் (கப்பலில்)
நாம் ஏற்றிக்
கொண்டவர்களி(ன்
சந்ததியி)லும்,
இப்ராஹீமுடையவும்,
இஸ்ராயீல் (யஃகூபின்)
சந்ததியிலும்,
இன்னும் நாம்
தேர்ந்தெடுத்து
நேர்வழியில்
நடத்தியவர்களிலுமுள்ள
நபிமார்களாவார்கள்
- இவர்கள் மீது
அல்லாஹ் அருளைப்
பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய
வசனங்கள் அவர்களின்
மீது ஓதப்பட்டால்,
அவர்கள் அழுதவர்களாகவும்,
ஸ{ஜூது செய்தவர்களாகவும்
விழுவார்கள். 19:59.
ஆனால், இவர்களுக்குப்
பின் (வழி கெட்ட)
சந்ததியினர்
இவர்களுடைய இடத்திற்கு
வந்தார்கள்; அவர்கள்
தொழுகையை வீணாக்கினார்கள்;
(இழிவான மன)இச்சைகளைப்
பின்பற்றினார்கள்;
(மறுமையில்) அவர்கள்
(நரகத்தின்) கேட்டைச்
சந்திப்பார்கள். 19:60.
தவ்பா செய்து,
(பாவங்களிலிருந்து
விலகி) ஈமான் கொண்டு,
(ஸாலிஹான) - நல்ல
- செயல்களைச் செய்கிறார்களே
அவர்களைத் தவிர
அத்தகைய (ஸாலிஹான)வர்கள்;
(ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில்
பிரவேசிப்பார்கள்;
(அவர்கள் அடைய
வேண்டிய நற்பயன்)
எதிலும் அவர்களுக்குக்
குறைவு செய்யப்பட
மாட்டாது. 19:61.
அத்னு என்னும்
அந்தச் சுவனபதிகளை
அர்ரஹ்மான் தன்
நல்லடியார்களுக்கு
- அவற்றை அவர்கள்
காண முடியாத போதே
- வாக்களித்தான்;
நிச்சயமாக அவனுடைய
வாக்குறுதி நிறைவேறும். 19:62.
ஸலாம் (சாந்தி)
என்பதைச் (செவியுறுவார்களே)
தவிர அச்சுவனபதிகளில்
அவர்கள் வீணான
எதையும் செவியுற
மாட்டார்கள்;
இன்னும் அங்கே
அவர்களுக்குக்
காலையிலும், மாலையிலும்
அவர்களுடைய உணவு
இருக்கிறது. 19:63.
இத்தகைய சுவர்க்கத்திற்கு
நம் அடியார்களில்
தக்வா - பயபக்தி
- உடையவர்களை நாம்
வாரிசாக்கிவிடுவோம். 19:64.
(மலக்குகள் கூறுகிறார்கள்;
நபியே!) ''உமது இறைவனின்
கட்டளையில்லாமல்
நாம் இறங்க மாட்டோம்;
எங்களுக்கு முன்னிருப்பதும்,
எங்களுக்கு பின்னிருப்பதும்,
இவ்விரண்டிற்குமிடையில்
இருப்பது அவனுக்கே
(சொந்தமாக) இருக்கின்றன
உமது இறைவன் ஒரு
பொழுதும் மறப்பவனல்லன்."" 19:65.
''(அவனே) வானங்களுக்கும்,
பூமிக்கும், அவை
இரண்டிற்குமிடையே
உள்ளவற்றிற்கும்
இறைவனாக இருக்கின்றான்.
ஆகையினால் அவ(ன்
ஒருவ)னையே வணங்குவீராக!
மேலும், அவனை வணங்குவதில்
(கஷ்டங்களையேற்றுப்)
பொறுமையுடன்
இருப்பீராக! (பெயரில்,
வல்லமையில், மற்றும்
தன்மைகளில் அல்லாஹ்வுக்கு)
நிகரானவனை நீர்
அறிவீரா?"" 19:66.
(எனினும்) மனிதன்
கேட்கிறான்; ''நான்
இறந்து போனால்,
உயிருள்ளவனாக
மேலும் எழுப்பப்படுவேனா?
என்று. 19:67.
யாதொரு பொருளுமாக
இல்லாதிருந்த
அவனை நிச்சயமாக
நாம் முன்னர்
படைத்தோம் என்பதை
மனிதன் நினைத்துப்
பார்க்க வேண்டாமா? 19:68.
ஆகவே, (நபியே!) உம்
இறைவன் மீது சத்தியமாக
நாம் அவர்களையும்,
(அவர்களுடைய) ஷைத்தான்களையும்
நிச்சயமாக (உயிர்ப்பித்து)
ஒன்று சேர்ப்போம்;
பின்னர் அவர்களை(யெல்லாம்)
நரகத்தினைச்
சூழ முழந்தாளிட்டவர்களாக
ஆஜராக்குவோம். 19:69.
பின்னர், நாம்
ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும்
அர்ரஹ்மானுக்கு
மாறு செய்வதில்
கடினமாக - தீவிரமாக
- இருந்தவர்கள்
யாவற்றையும்
நிச்சயமாக வேறு
பிரிப்போம். 19:70.
பின்னர், அ(ந் நரகத்)தில்
புகுவதற்கு அவர்களில்
(தங்கள் பாவத்தால்)
முதல் தகுதிவுடையவர்கள்
யார் என்பதை நிச்சயமாக
நாம் அறிவோம். 19:71.
மேலும், அதனைக்
கடக்காமல் உங்களில்
யாரும் (போக) முடியாது
இது உம்முடைய
இறைவனின் முடிவான
தீர்மானமாகும். 19:72.
அதன் பின்னர்,
தக்வாவுடன் - பயபக்தியுடன்
இருந்தார்களே
அவர்களை நாம்
ஈடேற்றுவோம்;
ஆனால், அநியாயம்
செய்தவர்களை
அ(ந் நரகத்)தில்
முழந்தாளிட்டவர்களாக
விட்டு விடுவோம். 19:73.
இன்னும் நம்முடைய
தெளிவான வசனங்கள்
அவர்கள்முன்
ஓதப்பெறும்போது
முஃமின்களிடத்தில்,
(அவற்றை) நிராகரிக்க
முயலும் காஃபிர்கள்;
''நம் இரு வகுப்பாரில்
இப்பொழுது யாருடைய
வீடு மேலானதாகவும்,
யாருடை சபை மிக
அழகானதாகவும்
இருக்கிறது?""
என்று கேட்கின்றனர். 19:74.
இன்னும், இவர்களைவிட
மிக்க அழகான தளவாடங்களையும்,
தோற்றத்தையும்
பெற்றிருந்த
எத்தனையோ தலைமுறைகளை
இவர்களுக்கு
முன் நாம் அழித்திருக்கிறோம். 19:75.
''யார் வழிகேட்டில்
இருக்கிறார்களோ
அவர்கள் வாக்களிக்கப்பட்ட
(இவ்வுலக) வேதனையை
அல்லது மறுமையை
காணும்வரை அர்ரஹ்மான
அவர்களுக்கு
அவகாசம் கொடுக்கிறான்;
(அவ்வாறு காணும்
போது) எவருடைய
வீடு கெட்டது
எவருடைய கூட்டம்
பலஹீனமானது என்பதை
திட்டமாக அவர்கள்
அறிந்து கொள்வார்கள்""
என்று (நபியே!) நீர்
கூறுவீராக. 19:76.
''மேலும், எவர் நேர்வழியில்
செல்கிறார்களோ
அவர்களை அல்லாஹ்
மேலும் மேலும்
நேர்வழியில்
செலுத்துகிறான்;
இன்னும் நிலைத்திருக்கக்
கூடிய நற்கருமங்கள்
உம்முடைய இறைவனிடத்திலே
சிறந்த கூலியாகவும்
சிறந்த தங்குமிடமாகவும்
அமையும்."" 19:77.
''நம்முடைய வசனங்களை
நிராகரித்துக்
கொண்டு, (மறுமையிலும்)
நான் நிச்சயமாக,
செல்வமும், பிள்ளையும்
கொடுக்கப்படுவேன்""
என்று கூறினானே
அவனை (நபியே!) நீர்
பார்த்தீரா? 19:78.
(பின்னர் நடக்கவிருக்கும்)
மறைவான விஷயத்தை
அவன் எட்டிப்
பார்த்துத் தெரிந்து
கொண்டானா அல்லது
அர்ரஹ்மானிடத்திலிருந்து
உறுதிமொழி (ஏதேனும்)
பெற்றிருக்கிறானா? 19:79.
அப்படியல்ல! அவன்
சொல்வதை நாம்
எழுதி வருவோம்;
இன்னும் நாம்
அவனுடைய வேதனையை
மேலும் மேலும்
அதிகமாக்குவோம். 19:80.
இன்னும் (தன் சொத்துக்கள்
என்று அவன் பெருமையடித்துப்)
பேசிக் கொண்டிருப்பவற்றையும்
நாம் அனந்தரங்
கொள்வோம்; (இவற்றையெல்லாம்
விட்டு) அவன் நம்மிடத்தில்
தன்னந்தனியாகவே
வருவான். 19:81.
(முஷ்ரிக்குகள்)
தங்களுக்காக
(அல்லாஹ்விடம்
மன்றாடுவதற்கு)
வல்லமையுடையவையென்று
அல்லாஹ்வையன்றி
(வேறு) தெய்வங்களை
எடுத்துக் கொண்டுள்ளார்கள்! 19:82.
அப்படியல்ல! தங்களை
இவர்கள் வணங்கியதையும்
நிராகரித்து
இவர்களுக்கு
விரோதமாக மாறிவிடுவீர். 19:83.
காஃபிர்களை (வழி
கேட்டில் செல்லும்படித்)
தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே
நிச்சயமாக ஷைத்தான்களை
நாம் அனுப்பியிருக்கிறோம்
என்பதை நீர் பார்க்க
வில்லையா? 19:84.
எனவே அவர்களுக்காக
நீர் அவசரப்படாதீர்!
அவர்களுக்கு
(வேதனைக்குரிய
தவணையின்) கணக்கை
நாம் கணக்கிட்டுக்
கொண்டுதானிக்கிறோம். 19:85.
அர்ரஹ்மானாகிய
நம்மிடத்தில்
பயபக்தியுடையவர்களை
நாம் கூட்டமாக
ஒன்று சேர்க்கும்
நாளில்; 19:86.
குற்றவாளிகளை
(அவர்கள்) தாகம்
தீர்த்துக் கொள்வதற்காக
நரகை நோக்கி நாம்
விரட்டுவோம். 19:87.
அர்ரஹ்மானிடம்
உடன்படிக்கை
செய்து கொண்டோரைத்
தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு
- மன்றாட்டத்திற்கு
- அதிகாரம் பெற
மாட்டார்கள். 19:88.
இன்னும், ''அர்ரஹ்மான்
(தனக்கென) ஒரு குமாரனை
எடுத்துக் கொண்டுள்ளான்""
என்று அவர்கள்
கூறுகிறார்கள். 19:89.
''நிச்சயமாக நீங்கள்
அபாண்டமான (ஒரு
கூற்றைக்) கொண்டு
வந்திருக்கிறீர்கள். 19:90.
இவர்களின் இந்தக்
கூற்றினால் வானங்கள்
வெடித்து பூமி
பிளந்து மலைகள்
சிதறுண்டு விடும்
போதிலும். 19:91.
அவர்கள் அர்ரஹ்மானுக்கு
ஒரு குமாரன் உண்டென்று
தாவாச்செய்வதினால்- 19:92.
ஒரு குமாரனை எடுத்துக்
கொள்வது அல்லாஹ்வுக்குத்
தேவையில்லாதது. 19:93.
ஏனென்றால் வானங்களிலும்,
பூமியிலும் உள்ள
ஒவ்வொருவரும்
அர்ரஹ்மானிடம்
அடிமையாய் வருபவரேயன்றி
வேறில்லை. 19:94.
நிச்சயமாக அவற்றையெல்லாம்
அவன் சூழ்ந்தறிகிறான்;
இன்னும் அவற்றைத்
துல்லியமாகக்
கணக்கிட்டு வைத்திருக்கிறான். 19:95.
கியாம நாளில்
அவர்களில் ஒவ்வொருவரும்
தனித்தனியாக
அவனிடம் வருவர். 19:96.
நிச்சயமாக எவர்கள்
ஈமான் கொண்டு
(ஸாலிஹான-) நல்ல
செயல்களைச் செய்கின்றார்களோ
அவர்களுக்கு
அர்ரஹ்மான் (யாவரின்)
நேசத்தை ஏற்படுத்துவான். 19:97.
(நபியே!) நாம் இ(வ்
வேதத்)தை உம்முடைய
மொழியில் (அருளி)
எளிதாக்கியதெல்லாம்,
இதைக் கொண்டு
நீர் - பயபக்தியுடையவர்களுக்கு
நன்மாராயங் கூறவும்,
முரண்டாக வாதம்
செய்யும் மக்களுக்கு
இதைக் கொண்டு
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வதற்குமேயாகும். 19:98.
அவர்களுக்கு
முன்னர், எத்தனையோ
தலைமுறையினரை
நாம் அழித்திருக்கிறோம்;
அவர்களில் ஒருவரையேனும்
நீர் பார்க்கிறீரா?
அல்லது அவர்களுடைய
இலேசான சப்தத்தை
நீர் கேட்கிறீரா? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |