|
அத்தியாயம்-37 ஸ_ரத்து
ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 37:1. அணிவகுத்து
நிற்பவர்கள்
மீது சத்தியமாக, 37:2. பலமாக
விரட்டுபவர்கள்
மீது சத்தியமாக, 37:3. (நினைவூட்டும்)
வேதத்தை ஓதுவோர்
மீது சத்தியமாக, 37:4. நிச்சயமாக
உங்களுடைய நாயன்
ஒருவனே. 37:5. வானங்களுக்கும்,
பூமிக்கும், இவ்விரண்டிற்கும்
இடையே உள்ளவற்றுக்கும்
(அவனே) இறைவன்; கீழ்திசைகளின்
இறைவன். 37:6. நிச்சயமாக
நாமே (பூமிக்கு)
சமீபமாக இருக்கும்
வானத்தை நட்சத்திரங்களின்
அழகைக் கொண்டு
அழகுபடுத்தியிருக்கிறோம். 37:7. (அதைத்)
தீய ஷைத்தான்கள்
அனைவருக்கும்
தடையாகவும் (ஆக்கினோம்). 37:8. (அதனால்)
அவர்கள் மேலான
கூட்டத்தார்
(பேச்சை ஒளிந்து)
கேட்க முடியாது
இன்னும், அவர்கள்
ஒவ்வோர் திசையிலிருந்தும்
வீசி எறியப்படுகிறார்கள். 37:9. (அவர்கள்)
துரத்தப்படுகிறார்கள்;
அவர்களுக்கு
நிலையான வேதனையுமுண்டு. 37:10. (ஏதேனும்
செய்தியை) இறைஞ்சிச்
செல்ல முற்பட்டால்,
அப்பொழுது அவனைப்
பிரகாச தீப்பந்தம்
பின்தொடரும். 37:11. ஆகவே,
''படைப்பால் அவர்கள்
வலியவர்களா அல்லது
நாம் படைத்திருக்கும்
(வானம், பூமி போன்றவையா)
என்று (நிராகரிப்போரிடம்
நபியே!) நீர் கேட்பீராக!
நிச்சயமாக நாம்
அவர்களைப் பிசுபிசுப்பன
களிமண்ணால்தான்
படைத்திருக்கின்றோம். 37:12. (நபியே!
அல்லாஹ்வின்
வல்லமையைக் கண்டு)
நீர் ஆச்சரியப்படுகிறீர்;
(ஆனால்) அவர்கள்
பரிகாசம் செய்கின்றனர். 37:13. அன்றியும்,
அவர்களுக்கு
நினைவூட்டப்பட்டாலும்,
(அதனை) அவர்கள்
நினைவிலிறுத்திக்
கொள்வதில்லை. 37:14. அவர்கள்
(ஏதேனும்) ஓர் அத்தாட்சியைக்
கண்டாலும், (அதை)
மெத்தப்பரிகாசம்
செய்கின்றனர். 37:15. ''இது பகிரங்கமான
சூனியமேயன்றி
வேறில்லை"" என்றும்
அவர்கள் கூறுகின்றனர். 37:16. ''நாங்கள்
இறந்து, மண்ணாகவும்
எலும்புகளாகவும்
நாங்கள் ஆகிவிட்டாலும்,
மெய்யாகவே (நாங்கள்
மீண்டும் உயிர்ப்பித்து)
எழுப்பப்படுபவர்களா?
(என்றும் கேட்கின்றனர்.) 37:17. ''அவ்வாறே,
முந்தைய நம் தந்தையர்களுமா?
(எழுப்பப்படுவார்கள்?
என்றும் கேட்கின்றனர்.) 37:18. ''ஆம்! (உங்கள்
செயல்களின் காரணமாக)
நீங்கள் சிறுமையடைந்தவர்களா(கவும்
எழுப்பப்படு)வீர்கள்""
என்று (நபியே!) நீர்
கூறும். 37:19. ஒரே சப்தம்
தான்! உடனே அவர்கள்
(திடுக்கிட்டு
எழுந்து) பார்ப்பார்கள்.
37:20. (அவ்வேளை)
''எங்களுடைய கேடே!
இது கூலி கொடுக்கும்
நாளாயிற்றே""
என்று அவர்கள்
கூறுவர். 37:21. ''நீங்கள்
பொய்ப்பிக்க
முற்பட்டுக்
கொண்டிருந்தீர்களே
அந்தத் தீர்ப்பு
நாள் இதுதான்!""
(என்று அவர்களுக்குக்
கூறப்படும்.) 37:22. ''அநியாயம்
செய்தார்களே
அவர்களையும்
அவர்களுடைய துணைகளையும்,
அவர்கள் வணங்கிக்
கொண்டிருந்தவற்றையும்
ஒன்று சேருங்கள்.
37:23. ''அல்லாஹ்வையன்றி
(அவர்கள் வழிபட்டவை
அவை) பின்னர் அவர்களை,
நரகத்தின் பாதைக்கு
கொண்டு செல்லுங்கள்.
37:24. ''இன்னும்,
அவர்களை (அங்கே)
நிறுத்தி வையுங்கள்;
அவர்கள் நிச்சயமாகக்
(கேள்வி கணக்குக்)
கேட்கப்பட வேண்டியவர்கள்""
(என்று மலக்குகளுக்குக்
கூறப்படும்) 37:25. ''உங்களுக்கு
என்ன நேர்ந்தது?
நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர்
(உலகில் செய்தது
போன்று) உதவி செய்து
கொள்ளவில்லை?""
(என்று கேட்கப்படும்).
37:26. ஆனால்
அவர்கள் அந்நாளில்
(எதுவும் செய்ய
இயலாது தலை குனிந்து)
கீழ்படிந்தவர்களாக
இருப்பார்கள்.
37:27. அவர்களில்
சிலர் சிலரை முன்னோக்கி,
ஒருவரை ஒருவர்
கேள்வி கேட்டு(த்
தர்க்கித்துக்)
கொண்டும் இருப்பார்கள்.
37:28. (தம் தலைவர்களை
நோக்கி) ''நிச்சயமாக
நீங்கள் வலப்புறத்திலிருந்து
(சக்தியுடன்) எங்களிடம்
வருகிறவர்களாக
இருந்தீர்கள்""
என்று கூறுவார்கள்.
37:29. (''அப்படியல்ல!)
நீங்கள் தாம்
முஃமின்களாக
- நம்பிக்கை கொண்டோராய்
- இருக்கவில்லை!""
என்று அ(த்தலை)வர்கள்
கூறுவர். 37:30. ''அன்றியும்
உங்கள் மீது எங்களுக்கு
எவ்வித அதிகாரமும்
இருக்கவில்லை
எனினும் நீங்கள்
தாம் வரம்பு கடந்து
பாவம் செய்யும்
கூட்டத்தாராக
இருந்தீர்கள்.""
37:31. ''ஆகையால்,
எங்கள் இறைவனுடைய
வாக்கு எங்கள்
மீது உண்மையாகி
விட்டது நிச்சயமாக
நாம் (யாவரும்
வேதனையைச்) சுவைப்பவர்கள்
தாம்! 37:32. ''(ஆம்) நாங்கள்
உங்களை வழிகெடுத்தோம்;
நிச்சயமாக நாங்களே
வழிகெட்டுத்தான்
இருந்தோம்."" 37:33. ஆகவே,
அந்நாளில் நிச்சயமாக
அவர்கள் வேதனையில்
கூட்டானவர்களாகவே
இருப்பார்கள்.
37:34. குற்றவாளிகளை
இவ்வாறு தான்
நாம் நிச்சயமாக
நடத்துவோம். 37:35. ''அல்லாஹ்வைத்தவிர
நாயன் இல்லை""
என்று அவர்களுக்குக்
கூறப்பட்டால்,
மெய்யாகவே அவர்கள்
பெருமையடித்தவர்களாக
இருந்தனர். 37:36. ''ஒரு பைத்தியக்காரப்
புலவருக்காக
நாங்கள் மெய்யாக
எங்கள் தெய்வங்களைக்
கைவிட்டு விடுகிறவர்களா?""
என்றும் அவர்கள்
கூறுகிறார்கள்.
37:37. அப்படியல்ல!
அவர் சத்தியத்தையே
கொண்டு வந்திருக்கிறார்;
அன்றியும் (தமக்கு
முன்னர் வந்த)
தூதர்களையும்
உண்மைப்படுத்துகிறார்.
37:38. (இதை நிராகரிப்போராயின்)
நிச்சயமாக நீங்கள்
நோவினை தரும்
வேதனையை அனுபவிப்பவர்கள்
தாம். 37:39. ஆனால்,
நீங்கள் செய்து
கொண்டிருந்தவற்றுக்கன்றி
(வேறு) எதற்கும்
நீங்கள் கூலி
கொடுக்கப்படமாட்டீர்கள்.
37:40. அல்லாஹ்வுடைய
அந்தரங்க சுத்தியான
அடியார்களோ (எனின்)-
37:41. அவர்களுக்கு
அறியப்பட்டுள்ள
உணவு அவர்களுக்கு
இருக்கிறது. 37:42. கனி வகைகள்
(அளிக்கப்படும்),
இன்னும் அவர்கள்
கண்ணியப்படுத்தப்படுவார்கள்;
37:43. இன்பம்
அளிக்கும் சுவர்க்கங்களில்
- 37:44. ஒருவரையொருவர்
முன்னோக்கியவாறு
கட்டில்கள் மீது
(அமர்ந்திருப்பார்கள்).
37:45. தெளிவான
பானம் நிறைந்த
குவளைகள் அவர்களசை;
சுற்றி கொண்டுவரும்.
37:46. (அது) மிக்க
வெண்மையானது
அருந்துவோருக்கு
மதுரமானது. 37:47. அதில்
கெடுதியும் இராது
அதனால் அவர்கள்
புத்தி தடுமாறுபவர்களும்
அல்லர். 37:48. இன்னும்,
அவர்களிடத்தில்
அடக்கமான பார்வையும்,
நெடிய கண்களும்
கொண்ட (அமர கன்னியரும்)
இருப்பார்கள்.
37:49. (தூய்மையில்
அவர்கள் சிப்பிகளில்)
மறைக்கப்பட்ட
முத்துக்களைப்
போல் இருப்பார்கள்.
37:50. (அப்பொழுது)
அவர்களில் ஒரு
சிலர் சிலரை முன்னோக்கியவாறு
பேசிக் கொண்டிருப்பார்கள்.
37:51. அவர்களில்
ஒருவர்; எனக்கு
(இம்மையில்) உற்ற
நண்பன் ஒருவன்
இருந்தான் எனக்
கூறுவார். 37:52. (மரணத்திற்குப்
பின் உயிர்ப்பிக்கப்
படுவோம் என்பதை)
உண்மையென ஏற்பவர்களில்
நிச்சயமாக நீயும்
ஒருவனா எனக் கேட்டான்.
37:53. ''நாம்
இறந்து மண்ணாகவும்,
எலும்புகளாகவுமாகி
விட்டபின், (மீண்டும்
நாம் உயிர்ப்பிக்கப்பட்டு)
கூலி வழங்கப்பெறுவோமா?""
என்றும் கேட்டான். 37:54. (அவ்வாறு
கூறியவனை) ''நீங்கள்
பார்க்(க விரும்பு)கிறீர்களா?""
என்றும் கூறுவார்.
37:55. அவர்
(கீழே) நோக்கினார்;
அவனை நரகத்தின்
நடுவில் பார்த்தார்.
37:56. (அவனிடம்)
''அல்லாஹ்வின்
மீது சத்தியமாக!
நீ என்னை அழித்துவிட
முற்பட்டாயே!
37:57. ''என் இறைவனுடைய
அருள் இல்லாதிருந்தால்,
நானும் (நரகத்திற்குக்)
கொண்டு வரப்பட்டவர்களில்
ஒருவனாகியிருப்பேன்.
37:58. ''(மற்றொருமுறையும்)
நாம் இறந்து விடுவோமா?
37:59. ''(இல்லை)
நமக்கு முந்திய
மரணத்தைத் தவிர
வேறில்லை அன்றியும்,
நாம் வேதனை செய்யப்படுபவர்களும்
அல்லர்"" என்று
கூறுவார். 37:60. நிச்சயமாக
இதுதான் மகத்தான
வெற்றியாகும்.
37:61. எனவே
பாடுபடுபவர்கள்
இது போன்றதற்காகவே
பாடுபடவேண்டும்.
37:62. அது சிறப்பான
விருந்தா? அல்லது
(நரகத்திலிருக்கும்
கள்ளி) 'ஜக்கூம்"
என்ற மரமா? 37:63. நிச்சயமாக
நாம் அதை அநியாயக்காரர்களுக்கு
ஒரு சோதனையாகவே
செய்திருக்கிறோம்.
37:64. மெய்யாகவே
அது நரகத்தின்
அடித்தளத்திலிருந்து
வளரும் மரமாகும்.
37:65. அதன்
பாளைகள் ஷைத்தான்களின்
தலைகளைப் போலிருக்கும்.
37:66. நிச்சயமாக,
அவர்கள் அதிலிருந்தே
புசிப்பார்கள்;
அதைக்கொண்டு
தங்களுடைய வயிறுகளை
நிரப்பிக் கொள்வார்கள்.
37:67. பின்னர்,
நிச்சயமாக அவர்களுக்குக்
குடிக்க, கொதிக்கும்
நீர் கொடுக்கப்படும்.
37:68. அதன்
பின்னர் அவர்கள்
மீளும் தலம் நிச்சயமாக
நரகம்தான். 37:69. நிச்சயமாக
அவர்கள் தம் மூதாதையர்களை
வழி கேட்டிலேயே
கண்டார்கள். 37:70. ஆகையால்,
அவர்களுடைய அடிச்சுவடுகள்மீதே
இவர்களும் விரைந்தார்கள்.
37:71. இன்னும்,
இவர்களுக்கு
முன்னரும் அப்பண்டைய
மக்களில் பெரும்பாலோர்
வழி கெட்டிருந்தனர்.
37:72. மேலும்,
நிச்சயமாக நாம்
அவர்களிடையே
அச்சமூட்டி எச்சரிப்பவர்களை
அனுப்பினோம்.
37:73. பிறகு,
அவ்வாறு அச்சமூட்டி
எச்சரிக்கப்பட்டவர்களின்
முடிவு என்னவாயிற்றென்று
(நபியே!) நீர் பாரும்.
37:74. அல்லாஹ்வுடைய
அந்தரங்க சுத்தியான
அடியார்களைத்
தவிர. 37:75. அன்றியும்
நூஹ் நம்மைப்
பிரார்த்தித்தார்;
பிரார்த்தனைக்கு
பதிலளிப்பதில்
நாமே சிறந்தோர்
ஆவோம். 37:76. ஆகவே,
நாம் அவரையும்
அவருடைய குடும்பத்தாரையும்
மிகப்பெருங்
கஷ்டத்திலிருந்து
பாதுகாத்தோம்.
37:77. மேலும்,
அவர்களுடைய சந்ததியரை
(பிரளயத்திலிருந்து
காப்பாற்றி பிற்காலம்)
நிலைத்திருக்கும்படி
செய்தோம். 37:78. மேலும்,
அவருக்காகப்
பிற்காலத்தவர்க்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை)
விட்டு வைத்தோம்.
37:79. ''ஸலாமுன்
அலாநூஹ்"" - அகிலங்கள்
எங்கும் நூஹ்
மீது ஸலாம் உண்டாவதாக.
37:80. இவ்வாறே,
நன்மை செய்வோருக்கு
நிச்யமாக நாம்
கூலி கொடுக்கிறோம்.
37:81. நிச்சயமாக
அவர் (நூஹ்) முஃமின்களான
நம் நல்லடியார்களில்
நின்றுமுள்ளவர்.
37:82. பிறகு
நாம் மற்றவர்களை
(வெள்ளத்தில்)
மூழ்கடித்தோம்.
37:83. நிச்சயமாக,
இப்ராஹீமும்
அவருடைய வழியைப்
பின்பற்றியவர்களில்
ஒருவர்தாம். 37:84. அவர்
தூய நெஞ்சத்துடன்
தம்முடைய இறைவனிடம்
வந்தபோது (நபியே!
நீர் நினைவு கூர்வீராக).
37:85. அவர்
தம் தந்தையையும்,
தம் சமூகத்தாரையும்
நோக்கி ''நீங்கள்
எதனை வணங்குகிறீர்கள்?
எனக் கேட்ட போது,
37:86. ''அல்லாஹ்வையன்றி
பொய்யான தெய்வங்களையா
நீங்கள் விரும்புகிறீர்கள்?""
37:87. ''அவ்வாறாயின்
அகிலங்களுக்கெல்லாம்
இறைவன் பற்றி
உங்கள் எண்ணம்
தான் என்ன?"" (என்று
கேட்டார்.) 37:88. பின்னர்
அவர் நட்சத்திரங்களை
ஒரு பார்வை பார்த்தார்.
37:89. ''நிச்சயமாக
நாம் நோயாளியாக
இருக்கிறேன்""
என்றும் கூறினார்.
37:90. எனவே
அவரை விட்டும்
அ(வருடைய சமூகத்த)வர்கள்
திரும்பிச் சென்றனர்.
37:91. அப்பால்
அவர்களுடைய தெய்வங்களின்
பால் அவர் சென்று
''(உங்களுக்கு முன்
படைக்கப்பட்டுள்ள
உணவுகளை) நீங்கள்
உண்ணமாட்டீர்களா?""
என்று கூறினார்.
37:92. ''உங்களுக்கு
என்ன (நேர்ந்தது)?
நீங்கள் ஏன் பேசுகிறீர்களில்லை?""
(என்றும் கேட்டார்.)
37:93. பின்
அவர் அவற்றின்
பக்கம் திரும்பி
தம் வலக்கையால்
அவற்றை அடித்து
(உடைத்து) விட்டார்.
37:94. (அவற்றை
வணங்குபவர்கள்)
அவர்பால் விரைந்து
வந்தார்கள். 37:95. அவர்
கூறினார்! ''நீங்களே
செதுக்கிய இவற்றையா
வணங்குகிறீர்கள்?""
37:96. ''உங்களையும்,
நீங்கள் செய்த(இ)வற்றையும்,
அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்.""
37:97. அவர்கள்
கூறினார்கள்;
''இவருக்காக(ப்
பெரியதொரு நெருப்புக்)
கிடங்கை அமைத்து
எரிநெருப்பில்
அவரை எறிந்து
விடுங்கள்."" 37:98. (இவ்வாறாக)
அவர்கள் அவருக்குச்
சதி செய்ய நாடினார்கள்;
ஆனால், நாம் அவர்களையே
இழிவுபடுத்தி
விட்டோம். 37:99. மேலும்,
அவர் கூறினார்;
''நிச்சயமாக நான்
என்னுடைய இறைவனிடம்
செல்பவன்; திட்டமாக
அவன் எனக்கு நேர்
வழியைக் காண்பிப்பான்.""
37:100. ''என்னுடைய
இறைவா! நீ எனக்கு
ஸாலிஹான ஒரு நன்மகனைத்
தந்தருள்வாயாக""
(என்று பிரார்த்தித்தார்).
37:101. எனவே,
நாம் அவருக்கு
பொறுமைசாலியான
ஒரு மகனைக் கொண்டு
நன்மாராயங் கூறினோம்.
37:102. பின்
(அம்மகன்) அவருடன்
நடமாடக்கூடிய
(வயதை அடைந்த) போது
அவர் கூறினார்;
''என்னருமை மகனே!
நான் உன்னை அறுத்து
பலியிடுவதாக
நிச்சயமாகக்
கனவு கண்டேன்.
இதைப்பற்றி உம்
கருத்து என்ன
என்பதைச் சிந்திப்பீராக!""
(மகன்) கூறினான்;
''என்னருமைத் தந்தையே!
நீங்கள் ஏவப்பட்டபடியே
செய்யுங்கள்.
அல்லாஹ் நாடினால்
- என்னை நீங்கள்
பொறுமையாளர்களில்
நின்றுமுள்ளவனாகவே
காண்பீர்கள்.""
37:103. ஆகவே,
அவ்விருவரும்
(இறைவன் கட்டளைக்கு)
முற்றிலும் வழிப்பட்டு,
(இப்றாஹீம்) மகனைப்
பலியிட முகம்
குப்புறக்கிடத்திய
போது 37:104. நாம்
அவரை ''யா இப்றாஹீம்!""
என்றழைத்தோம்.
37:105. ''திடமாக
நீர் (கண்ட) கனவை
மெய்ப்படுத்தினீர்.
நிச்சயமாக நன்மை
செய்வோருக்கு
நாம் இவ்வாறே
கூலி கொடுத்திருக்கிறோம்.
37:106. ''நிச்சயமாக
இது தெளிவான ஒரு
பெருஞ் சோதனையாகும்.""
37:107. ஆயினும்,
நாம் ஒரு மகத்தான்
பலியைக் கொண்டு
அவருக்குப்ப
பகரமாக்கினோம்.
37:108. இன்னும்
அவருக்காகப்
பிற்காலத்தவருக்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை)
விட்டு வைத்தோம்;
37:109. ''ஸலாமுன்
அலா இப்ராஹீம்""
(இப்ராஹீம் மீது
ஸலாம் உண்டாவதாக)!
37:110. இவ்வாறே,
நன்மை செய்வோருக்கு,
நாம் கூலி கொடுக்கிறோம்.
37:111. நிச்சயமாக
அவர் முஃமின்களான
நம் (நல்)லடியார்களில்
நின்றுமுள்ளவர்.
37:112. ஸாலிஹானவர்களிலுள்ளவரான
நபி இஸ்ஹாக்கை
அவருக்கு இன்னும்
(மகனாகத் தருவதாக)
நாம் நன்மாராயம்
கூறினோம். 37:113. இன்னும்
நாம் அவர் மீதும்
இஸ்ஹாக் மீதும்
பாக்கியங்கள்
பொழிந்தோம்; மேலும்
அவ்விருவருடைய
சந்ததியரில்
நன்மை செய்பவர்களும்
இருக்கின்றார்கள்;
அன்றியும் தமக்குத்
தாமே பகிரங்கமாக
அநியாயம் செய்து
கொள்வோரும் இருக்கின்றனர்.
37:114. மேலும்,
மூஸா, ஹாரூன் ஆகியவர்கள்
மீதும் நாம் நிச்சயமாக
அருள் புரிந்தோம்.
37:115. அவ்விருவரையும்,
அவ்விருவருடைய
சமூகத்தாரையும்
மிகப்பெரும்
துன்பத்திருந்து
இரட்சித்தோம்.
37:116. மேலும்,
நாம் அவர்களுக்கு
உதவி செய்தோம்;
எனவே அவர்கள்
தாம் வெற்றி பெற்றோரானார்கள்.
37:117. அவ்விருவருக்கும்
நாம் துலக்கமான
வேதத்தைக் கொடுத்தோம்.
37:118. இன்னும்,
நாம் அவ்விருவருக்கும்
நேர்வழியைக்
காண்பித்தோம்.
37:119. இன்னும்
அவ்விருவருக்குமாகப்
பிற்காலத்தவருக்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை)
விட்டு வைத்தோம்;
37:120. ''ஸலாமுன்
அலா மூஸா வ ஹாரூன்""
மூஸாவுக்கும்,
ஹாரூனுக்கும்
ஸலாம் உண்டாவதாக.
37:121. இவ்வாறே
நன்மை செய்வோருக்கு
நாம் கூலி கொடுக்கிறொம்.
37:122. நிச்சயமாக
அவ்விருவரும்
முஃமின்களான
நம் (நல்)லடியார்களில்
நின்றுமுள்ளவர்கள்.
37:123. மேலும்,
நிச்சயமாக இல்யாஸ{ம்
முர்ஸல்(களில்
- தூதராக அனுப்பப்பட்டவர்)களில்
ஒருவர் தாம். 37:124. அவர்
தம் சமூகத்தவரிடம்;
''நீங்கள் (இறைவனை)
அஞ்ச மாட்டீர்களா?""
என்று (போதித்துச்)
சொல்லியதை (நினைவு
கூர்வீராக). 37:125. ''நீங்கள்
படைப்பவர்களில்
மிகச் சிறப்பானவனை
விட்டு விட்டு
'பஃலு" (எனும் சிலையை)
வணங்குகிறீர்களா?
37:126. ''அல்லாஹ்தான்
- உங்களுடைய இறைவனும்,
உங்களுடை முன்
சென்ற மூதாதையர்களின்
இறைவனும் ஆவான்.""
37:127. ஆனால்
அவர்கள் அவரைப்
பொய்ப்பித்தார்கள்;
ஆகையால், அவர்கள்
(மறுமையில் இறைவன்
முன்னே தண்டனைக்காக)
நிச்சயமாக கொண்டு
வரப்படுவார்கள்.
37:128. அல்லாஹ்வுடைய
தூய அடியார்களைத்
தவிர. (இவர்களுக்கு
நற்கூலியுண்டு.)
37:129. மேலும்,
நாம் அவருக்காகப்
பிற்காலத்தவருக்கு
(ஒரு ஞாபகார்த்தத்தை)
விட்டு வைத்தோம்;
37:130. ''ஸலாமுன்
அலா இல்யாஸீன்""
இல்யாஸீன் மீது
ஸலாமுண்டாவதாக.
37:131. இவ்வாறே
நன்மை செய்வோருக்கு
நிச்சயமாக நாம்
கூலி கொடுக்கிறோம்.
37:132. நிச்சயமாக
அவர் முஃமின்களான
நம் (நல்) அடியார்களில்
நின்றுமுள்ளவர்.
37:133. மேலும்,
லூத்தும் நிச்சயமாக
முர்ஸல்களில்
- அனுப்பப்பட்டவர்களில்
நின்றுமுள்ளவர்.
37:134. அவரையும்
அவருடைய குடும்பத்தார்
யாவரையும் காத்துக்
கொண்டோம் - 37:135. பின்னால்
தங்கிவிட்டவர்களிடையே
இருந்துவிட்ட
(லூத்தின் மனைவியான)
கிழவியைத் தவிர்த்து.
37:136. பின்னர்
நாம் மற்றவர்களை
அழித்து விட்டோம்.
37:137. இன்னும்,
நீங்கள் காலை
வேலைகளில் அவர்களின்
(அழிந்து போன ஊர்களின்)
மீதே நடந்து செல்கிறீர்கள்.
37:138. இன்னும்
இரவிலும் கூட(ச்
செல்கிறீர்கள்.
இதைக்கொண்டு)
நீங்கள் நல்லறிவு
பெற மாட்டீர்களா?
37:139. மேலும்,
யூனுஸ{ம் நிச்சயமாக
முர்ஸல்களில்
- அனுப்பப்பட்டவர்களில்
நின்றுமுள்ளவர்.
37:140. நிரப்பப்பட்ட
கப்பலின் பால்
அவர் ஒளித்தோடிய
போது - 37:141. அ(க்கப்பலிலுள்ள)வர்கள்
சீட்டுக்குலுக்கிப்
போட்டுப் பார்த்தனர்
- இவர் தாம் குற்றமுள்ளவர்
(என்று தீர்மானித்தனர்).
37:142. ஆகவே,
(அவர்களுடைய) பழிப்புக்கிடமான
நிலையில் (கடலில்)
எறியப்பட வேண்டியவரானார்
ஒரு மீன் விழுங்கிற்று.
37:143. ஆனால்
அவர் (மீன் வயிற்றினுள்)
இறைவனைத் துதிசெய்து
- தஸ்பீஹ{ செய்து
- கொண்டிராவிட்டால்
- 37:144. (மறுமையில்
அவர்) எழுப்பப்படும்
நாள்வரை, அதன்
வயிற்றிலேயே
தங்கியிருந்திருப்பார்.
37:145. ஆனால்,
அவர் நோயுற்றிருந்த
நிலையில், நாம்
அவரை (மீன் வயிற்றிலிருந்து
வெளியெற்றி) வெட்ட
வெளியில் போட்டோம்.
37:146. அன்றியும்
நாம் அவருக்கு
மேல் ஒரு சுரைக்கொடியை
முளைப்பித்(து
நிழலிடுமாறு
செய்)தோம். 37:147. மேலும்,
நாம் அவரை ஒரு
நூறாயிரம் அல்லது
அதற்கதிகமானவர்களிடம்
அனுப்பி வைத்தோம்.
37:148. ஆகவே
அவர்கள் ஈமான்
கொண்டார்கள்.
ஆகையால் அவர்களை
ஒரு காலம்வரை
சுகிக்;கச்செய்தோம். 37:149. (நபியே!)
அவர்களிடம் கேளும்;
உம் இறைவனுக்குப்
பெண் மக்களையும்
அவர்களுக்கு
ஆண்மக்களையுமா
(கற்பனை செய்கிறார்கள்)
என்று. 37:150. அல்லது
நாம் மலக்குகளைப்
பெண்களாகவா படைத்தோம்?
(அதற்கு) அவர்கள்
சாட்சிகளா? 37:151. ''அறிந்து
கொள்க! நிச்சயமாக
இவர்கள் தங்கள்
கற்பனையில் தான்
கூறுகின்றனர்.""
37:152. ''அல்லாஹ்
பிள்ளைகளைப்
பெற்றான்"" (என்று
கூறுபவர்கள்)
நிச்சயமாகப்
பொய்யர்களே! 37:153. (அன்றியும்,
அல்லாஹ்) அவன்
ஆண்மக்களை விட்டுப்
பெண்மக்களைத்
தேர்ந்தெடுத்துக்
கொண்டானா? 37:154. உங்களுக்கு
என்ன (நேர்ந்து
விட்டது)? எவ்வாறு
நீங்கள் தீர்மானிக்கிறீர்கள்?
37:155. நீங்கள்
சிந்தித்துணர
மாட்டீர்களா?
37:156. அல்லது
உங்களிடம் தெளிவான
ஆதாரம் எதுவும்
இருக்கிறதா? 37:157. நீங்கள்
உண்மையாளர்களாயிருப்பின்,
உங்கள் வேத (ஆதார)த்தைக்
கொண்டு வாருங்கள்.
37:158. அன்றியும்
இவர்கள் அல்லாஹ்வுக்கும்
ஜின்களுக்குமிடையில்
(வம்சாவளி) உறவை
(கற்பனையாக) ஏற்படுத்துகின்றனர்
ஆனால் ஜின்களும்
(மறுமையில் இறைவன்
முன்) நிச்சயமாகக்
கொண்டுவரப்படுவார்கள்
என்பதை அறிந்தேயிருக்கிறார்கள்.
37:159. எனவே,
அவர்கள் இவ்வாறு
வர்ணிப்பதை விட்டும்
அல்லாஹ் மிகவும்
பரிசுத்தமானவன்.
37:160. அந்தரங்க
சுத்தியான அல்லாஹ்வின்
அடியார்களைத்
தவிர்த்து. 37:161. ஆகையால்,
நிச்சயமாக நீங்களும்
நீங்கள் வணங்குபவையும்.
37:162. (எவரையும்
அல்லாஹ்வுக்கு)
எதிராக நீங்கள்
வழிகெடுத்து
விடமுடியாது.
37:163. நரகைச்
சென்றடைபவர்களைத்
தவிர. 37:164. (மேலும்
மலக்குகள் கூறுகிறார்கள்;)
''குறிப்பிடப்பட்ட
ஓர் இடம் இல்லாதவராக
திடமாக எங்களில்
எவருமில்லை.""
37:165. ''நிச்சயமாக,
நாங்கள் (அல்லாஹ்வின்
ஏவலை எதிர்பார்த்து)
அணிவகுத்தவர்களாகவே
(நிற்கின்றோம்).
37:166. ''மேலும்,
நிச்சயமாக நாங்கள்
(அல்லாஹ்வைத்
துதி செய்து) தஸ்பீஹ{
செய்பவர்களாக
இருக்கிறோம்.""
37:167. (நபியே!
மக்காவாசிகள்
முன்னர்) கூறிக்கொண்டிருந்தார்கள்;
37:168. ''முன்னோர்களிடமிருந்து,
(எங்களுக்கு இறை
நினைவூட்டும்)
ஏதேனும் ஒரு வேதத்தை
நாங்கள் பெற்றிருந்தால்
- 37:169. ''அல்லாஹ்வுடைய
தூய அடியார்களாக
நாங்கள் நிச்சயமாக
ஆகியிருப்போம்""
என்று. 37:170. ஆனால்
(திருக் குர்ஆன்
வந்தபோது) அவர்கள்
அதை நிராகரிக்கிறார்கள்
- (இதன் பலனை) விரைவிலேயே
அவர்கள் அறிந்து
கொள்வார்கள்!
37:171. தூதர்களாகிய
நம் அடியார்களிடம்,
முன்னரே திடமாக
நம்வாக்குச்
சென்றிருக்கிறது.
37:172. (அதாவது)
நிச்சயமாக அவர்கள்
உதவி செய்யப்படுவார்கள்
- 37:173. மேலும்,
நம் படைகளே நிச்சயமாக
அவர்களே வெற்றி
பெறுவார்கள்.
37:174. (ஆகவே, நபியே!) சிறிது
காலம் வரையில்
நீர் அவர்களை
விட்டும் விலகியிருப்பீராக!
37:175. (அவர்களின்
நிலை என்னவாகிறது
என்பதை) நீர் கவனிப்பீராக!
(தங்களுக்கு நேரப்போவதை)
அவர்களும் கவனிப்பார்கள்.
37:176. நம்(மிடமிருந்து
வரும்) வேதனைக்காகவா
அவர்கள் அவசரப்படுகிறார்கள்?
37:177. (அவ்வேதனை)
அவர்களுடைய முற்றத்தில்
இறங்கும்போது
அச்சமூட்டி எச்சரிக்கப்பட்ட
அவர்களின் விடியல்
மிகக் கெட்டதாக
இருக்கும். 37:178. ஆகவே,
சிறிது காலம்
வரை நீர் அவர்களை
விட்டும் விலகியிருப்பீராக.
37:179. (அவர்களின்
நிலை என்னவாகிறது
என்பதை) நீர் கவனிப்பீராக!
(தங்களுக்கு நேரப்
போவதை) அவர்களும்
கவனிப்பார்கள்.
37:180. அவர்கள்
வர்ணிப்பதை விட்டும்,
கண்ணியத்தின்
இறைவனான உம்முடைய
இறைவன் தூயவன்.
37:181. மேலும்
முர்ஸல்(களான
அவன் தூதர்)கள்
மீது ஸலாம் உண்டாவதாக.
37:182. வல்ஹம்து
லில்லாஹி ரப்பில்
ஆலமீம் (இன்னும்
புகழ் அனைத்தும்
அகிலங்களின்
இறைவனாகிய அல்லாஹ்வுக்கே
உரித்தாகும்).
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |