|
அத்தியாயம்-41 ஸ_ரத்துல்
முஃமின் அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 40:1. ஹா, மீம். 40:2. (யாவரையும்)
மிகைத்தோனும்,
மிக அறிந்தோனுமாகிய
அல்லாஹ்விடமிருந்து
இறக்கியருளப்பட்டதே
இவ்வேதம். 40:3. பாவத்தை
மன்னிப்பவனும்,
தவ்பாவை - மன்னிப்புக்
கேட்பதை - அங்கீகரிப்பவனும்,
தண்டிப்பதில்
கடுமையானவனும்,
தயை மிக்கவனும்
ஆவான், அவனைத்
தவிர நாயன் இல்லை
அவனிடமே (யாவரும்)
மீள வேண்டியதிருக்கிறது. 40:4. நிராகரிப்பவர்களைத்
தவிர(வேறு எவரும்)
அல்லாஹ்வின்
வசனங்களைப் பற்றி
தர்க்கம் செய்ய
மாட்டார்கள்.
ஆகவே, பட்டணங்களில்
அவர்களுடைய (ஆடம்பர)
நடமாட்டம் உம்மை
ஏமாற்றி விட வேண்டாம். 40:5. இவர்களுக்கு
முன்னரே நூஹின்
சமூகத்தாரும்,
அவர்களுக்குப்
பிந்திய கூட்டங்களும்
(நபிமார்களைப்)
பொய்ப்பித்தார்கள்;
அன்றியும் ஒவ்வொரு
சமுதாயமும் தம்மிடம்
வந்த தூதரைப்
பிடிக்கக் கருதி,
உண்மையை அழித்து
விடுவதற்காகப்
பொய்யைக் கொண்டும்
தர்க்கம் செய்தது.
ஆனால் நான் அவர்களைப்
பிடித்தேன்; (இதற்காக
அவர்கள் மீது
விதிக்கப் பெற்ற)
என் தண்டனை எவ்வாறு
இருந்தது? 40:6. இவ்வாறே,
நிராகரிப்பவர்கள்
நிச்சயமாக நரகவாசிகள்தாம்
என்ற உம்முடைய
இறைவனின் வாக்கு
அவர்கள் மீது
உறுதியாகிவிட்டது. 40:7. அர்ஷை
சுமந்து கொண்டிருப்பவர்களும்,
அதைச் சுற்றியுள்ளவர்களும்
தங்கள் இறைவனின்
புகழைக் கொண்டு
அவனைத் தஸ்பீஹ{
செய்து கொண்டும்
இருக்கிறார்கள்;
அவன் மேல் ஈமான்
கொண்டவர்களாக
மற்ற ஈமான் கொண்டவர்களுக்காக
மன்னிப்புக்
கோருகின்றனர்;
''எங்கள் இறைவனே!
நீ ரஹ்மத்தாலும்,
ஞானத்தாலும்,
எல்லாப் பொருட்களையும்
சூழந்து இருக்கிறாய்!
எனவே, பாவமீட்சி
கோரி, உன் வழியைப்
பின்பற்றுபவர்களுக்கு,
நீ மன்னிப்பளிப்பாயாக.
இன்னும் அவர்களை
நரக வேதனையிலிருந்தும்
காத்தருள்வாயாக! 40:8. ''எங்கள்
இறைவனே! நீ அவர்களுக்கு
வாக்களித்திருக்கும்,
நிலையான சுவர்க்கத்தில்,
அவர்களையும்,
அவர்கள் மூதாதையர்களிலும்,
அவர்கள் மனைவியர்களிலும்,
அவர்கள் சந்ததியார்களிலும்
நன்மை செய்தோரையும்
பிரவேசிக்கச்
செய்வாயாக. நிச்சயமாக
நீ தான் (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம்
மிக்கவன். 40:9. ''இன்னும்,
அவர்களைத் தீமைகளிலிருந்து
காப்பாயாக! அந்நாளில்
நீ யாரை தீமைகளிலிருந்து
காத்துக் கொள்கிறாயோ,
அவர்களுக்கு
நிச்சயமாக நீ
அருள் புரிந்து
விட்டாய் - அதுவே
மகத்தான வெற்றியாகும்""
(என்றும் கூறுவர்). 40:10. நிச்சயமாக
நிராகரிப்பவர்களிடம்;
''இன்னு நீங்கள்
உங்கள் ஆன்மாக்களைக்
கோபித்துக் கொள்வதைவிட
அல்லாஹ்வுடைய
கோபம் மிகப் பெரியதாகும்;
ஏனென்றால் நீங்கள்
நம்பிக்கையின்
பால் அழைக்கப்பட்ட
போது (அதை) நிராகரித்து
விட்டீர்களே""
என்று அவர்களிடம்
கூறப்படும். 40:11. அதற்கவர்கள்;
''எங்கள் இறைவனே!
நீ எங்களை இருமறை
மரணமடையச் செய்தாய்;
இருமறை நீ எங்களை
உயிர்ப்பித்தாய்;
ஆகையால் நாங்கள்
(இப்பொழுது) எங்கள்
பாவங்களை ஒப்புக்
கொண்டோம் - எனவே
(இதிலிருந்து
தப்பி) வெளியேர
ஏதும் வழியுண்டா?""
எனக் கூறுவர். 40:12. (பதில்
கூறப்படும்;) ''அதற்குக்
காரணம் அல்லாஹ்
ஒருவனே (வணக்கத்திற்குரியவன்;
எனவே அவனை வணங்குங்கள்)
என்று அழைக்கப்பட்ட
போது நீங்கள்
நிராகரித்தீர்கள்;
ஆனால், அவனுக்கு
(எதையும்) இணையாக்கப்பட்டால்
(அதன் மீது) நீங்கள்
நம்பிக்கை கொண்டீர்கள்;
ஆகவே இத்தீர்ப்பு
மிக்க மேலானவனும்,
மகாப் பெரியவனுமான
அல்லாஹ்வுக்கே
உரியது."" 40:13. அவனே
தன் அத்தாட்சிகளை
உங்களுக்குக்
காண்பிக்கிறான்;
உங்களுக்கு வானத்திலிருந்து
உணவையும் இறக்கிவைக்கிறான்
- எனவே அவனையே முன்னோக்கி
நிற்பவர்களைத்
தவிர (வேறு யாரும்)
நல்லுணர்வு பெறமாட்டார்கள். 40:14. ஆகவே,
காஃபிர்கள் வெறுத்த
போதிலும், நீங்கள்
முற்றிலும் அவனுக்கே
வழிபட்டு மார்க்கத்தில்
பரிசுத்தத்துடன்
அல்லாஹ் ஒருவனையே
(பிரார்த்தித்து)
அழையுங்கள். 40:15. (அவனே)
அந்தஸ்துகளை
உயர்த்துபவன்;
அர்ஷ{க்குரியவன்;
சந்திப்புக்குரிய
(இறுதி) நாளைப்பற்றி
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வதற்காக
தன் அடியார்களில்
தான் நாடியவர்கள்
மீது கட்டளையை
வஹீ மூலம் இறக்கி
வைக்கிறான். 40:16. அந்நாளில்
அவர்கள் வெளிப்பட்டு
வருவார்கள்; அவர்களுடைய
எந்த விஷயமும்
அல்லாஹ்வுக்கு
மறைந்ததாக இருக்காது
அந்நாளில் ஆட்சி
யாருக்குடையதாக
இருக்கும் - ஏகனாகிய,
அடக்கியாளும்
வல்லமை மிக்க
அல்லாஹ்வுக்கே
யாகும். 40:17. அந்நாளில்
ஒவ்வோர் ஆத்மாவும்,
அது சம்பாதித்ததற்குக்
கூலி கொடுக்கப்படும்;
அந்நாளில் எந்த
அநியாயமும் இல்லை.
நிச்சயமாக, அல்லாஹ்
கேள்வி கணக்குக்
கேட்பதில் மிகவும்
தீவிரமானவன். 40:18. (நபியே!)
அண்மையில் வரும்
(கியாம) நாளைப்பற்றி
அவர்களுக்கு
அச்சமூட்டி எச்சரிக்கை
செய்வீராக இருதயங்கள்
விசனத்தால் நிரம்பி
தொண்டைக்குழிகளுக்கு
வரும் (அவ்)வேளையில்,
அநியாயக்காரர்களுக்கு
இரக்கப்படும்
நண்பனோ, அல்லது
ஏற்றுக்கொள்ளப்படும்
சிபாரிசு செய்பவனோ
இருக்கமாட்டான்.
40:19. கண்கள்
செய்யும் மோசத்தையும்,
உள்ளங்கள் மறைத்து
வைப்பதையும்
அவன் நன்கு அறிகிறான்.
40:20. மேலும்,
அல்லாஹ் உண்மையைக்
கொண்டே தீர்ப்பளிப்பவன்.
அன்றியும், அவனையன்றி
அவர்கள் (வேறு)
எவர்களை அழைத்(துப்
பிரார்த்தித்)தார்களோ,
அவர்கள் யாதொரு
விஷயத்தைப் பற்றியும்
தீர்ப்புச் செய்ய
மாட்டார்கள்
- நிச்சயமாக அல்லாஹ்
(யாவற்றையும்)
செவியெற்பவனாகவும்,
தீர்க்கமாகப்
பார்ப்பவனாகவும்
இருக்கின்றான்.
40:21. இவர்கள்
பூமியில் பிரயாணம்
செய்து இவர்களுக்கு
முன் இருந்தவர்களின்
முடிவு எப்படியிருந்தது
என்பதைப் பார்க்க
வில்லையா? அவர்கள்,
பலத்தாலும், பூமியில்
(விட்டுச் சென்ற
பூர்வ)சின்னங்களாலும்
இவர்களைவிட வலிமையுடையவர்களாகவே
இருந்தார்கள்
- ஆனால் அவர்களின்
பாவங்களின் காரணமாக
அவர்களை அல்லாஹ்
பிடித்துக் கொண்டான்;
இன்னும் அல்லாஹ்விடமிருந்து
அவர்களைக் காப்பாற்ற
எவரும் இல்லை.
40:22. அது (ஏனெனில்)
நிச்சயமாக அவர்களிடம்
அவர்களின் தூதர்கள்
தெளிவான அத்தாட்சிகளுடன்
வந்தார்கள்; ஆனால்,
அவர்கள் நிராகரித்தனர்.
ஆகவே, அல்லாஹ்
அவர்களைப் பிடித்தான்
- நிச்சயமாக (அல்லாஹ்)
வலிமை மிக்கவன்;
தண்டிப்பதில்
கடுமையானவன்.
40:23. மெய்யாகவே
நாம் மூஸாவுக்கு
நம்முடைய அத்தாட்சிகளையும்,
தெளிவான சான்றையும்
கொடுத்தனுப்பினோம்-
40:24. ஃபிர்அவ்ன்,
ஹாமான், ஃகாரூன்
ஆகியவர்களிடம்;
ஆனால் அவர்களோ
''(இவர்) பொய்யுiரைப்பவர்,
சூனியக்காரர்""
என்று கூறினர்.
40:25. ஆகவே,
அவர் நம்மிடமிருந்து
சத்தியத்தை அவர்களிடம்
கொண்டு வந்த போது,
அவர்கள்; ''இவருடன்
ஈமான் கொண்டிருப்போரின்
ஆண் குழந்தைகளை
கொன்று, அவர்களின்
பெண் குழந்தைகளை
உயிருடன் விட்டு
விடுங்கள்"" என்று
கூறினார்கள்;
மேலும் காஃபிர்களின்
சதி வழிகேட்டிலன்றி
வேறில்லை. 40:26. மேலும்
ஃபிர்அவ்ன் கூறினான்;
''மூஸாவை கொலை செய்ய
என்னை விட்டு
விடுங்கள்! இன்னும்
இவர் தம்முடைய
இறைவனை அழை(த்துப்
பிரார்த்தி)க்கட்டும்;
நிச்சயமாக இவர்
உங்கள் மார்க்கத்தை
மாற்றிவிடுவார்;
அல்லது இப்பூமியில்
குழப்பத்தை வெளியாக்குவார்
என்று நான் அஞ்சுகிறேன்""
என்று. 40:27. மூஸா
கூறினார்; ''கேள்வி
கணக்குக் கேட்கப்படும்
நாள் மீது நம்பிக்கை
கொள்ளாத, பெருமையடிக்கும்
எல்லோரையும்
விட்டு, என்னுடைய
இறைவனாகவும்,
உங்களுடைய இறைவனாகவும்
இருப்பவனிடம்
நிச்சயமாக நான்
பாதுகாவல் தேடுகிறேன்.""
40:28. ஃபிர்அவ்னின்
குடும்பத்தாரில்
தம் ஈமானை மறைத்து
வைத்திருந்த
ஒரு நம்பிக்கை
கொண்டவர் கூறினார்;
''என் இறைவன் அல்லாஹ்வே
தான்!"" என்று
ஒரு மனிதர் கூறுவதற்காக
அவரை நீங்கள்
கொன்று விடுவீர்களா?
மேலும் அவர் மெய்யாகவே
உங்கள் இறைவனிடமிருந்து
தெளிவான அத்தாட்சிகளை
உங்களிடம் கொண்டு
வந்துள்ளார்.
எனவே அவர் பொய்யராக
இருந்தால், அப்பொய்
அவருக்கே (கேடு)
ஆகும்; ஆனால் அவர்
உண்மையாளராக
இருந்தால், அவர்
உங்களுக்கு வாக்களிக்கும்
சில (வேதனைகள்)
உங்களை வந்தடையுமே!
நிச்சயமாக அல்லாஹ்
வரம்பு மீறிய
பொய்யரை நேர்வழியில்
செலுத்தமாட்டான்.""
40:29. ''என்னுடைய
சமூகத்தார்களே!
இன்று ஆட்சி உங்களிடம்தான்
இருக்கிறது நீங்கள்
தாம் (எகிப்து)
பூமியில் மிகைத்தவர்களாகவும்
இருக்கின்றீர்கள்;
ஆயினும் அல்லாஹ்வின்
தண்டனை நமக்கு
வந்து விட்டால்,
நமக்கு உதவி செய்பவர்
யார்?"" என்றும்
கூறினார்) அதற்கு
''நான் (உண்மை எனக்)
காண்பதையே உங்களுக்கு
நான் காண்பிக்கிறேன்;
நேரான பாதையல்லாது
(வேறு) எதையும்
நான் உங்களுக்கு
காண்பிக்கவில்லை""
என ஃபிர்அவ்ன்
கூறினான். 40:30. நம்பிக்கை
கொண்டிருந்த
அவர் இன்னும்
கூறினார்; ''என்னுடைய
சமூகத்தாரே! (அழிந்து
போன மற்ற) கூட்டத்தினர்களின்
நாட்களைப் போன்றவை
உங்கள் மீது வந்து
விடுமே என்று
நான் நிச்சயமாக
பயப்படுகிறேன்.""
40:31. ''நூஹ{டைய
சமூகத்திற்கும்,
இன்னும் 'ஆது",
'ஸமூது"டைய சமூகத்திற்கும்,
அவர்களுக்குப்
பின்னுள்ளவர்களுக்கும்
உண்டான நிலையைப்
போன்று (உங்களுக்கு
நிகழ்ந்து விடுமோ
எனப் பயப்படுகிறேன்);
ஆனால் அல்லாஹ்
(தன்) அடியார்களுக்கு
அநியாயம் செய்ய
நாடமாட்டான்
(என்றும்). 40:32. ''என்னுடைய
சமூகத்தாரே! உங்கள்
மீது அழைக்கப்படும்
(தீர்ப்பு) நாளைப்
பற்றியும் நான்
பயப்படுகிறேன்.
40:33. ''அல்லாஹ்வை
விட்டும் உங்களைக்
காப்பாற்றுபவர்
எவருமில்லாத
நிலையில் நீங்கள்
பின் வாங்கும்
நாள் (அது) அன்றியும்
அல்லாஹ் யாரைத்
தவறான வழியில்
விட்டுவிடுகின்றானோ,
அவனுக்கு நேர்வழி
காட்டுவோர் எவருமில்லை.
40:34. ''மேலும்,
முற்காலத்தில்
திட்டமாக யூஸ{ஃப்
தெளிவான அத்தாட்சிகளுடன்
உங்களிடம் வந்தார்,
எனினும் அவர்
இறந்து விடும்
வரையில், அவர்
உங்களிடம் கொண்டு
வந்ததைப் பற்றி
நீங்கள் சந்தேகத்திலேயே
இருந்தீர்கள்;
இறுதியில் (அவர்
இறந்தபின்) ''அவருக்குப்
பின் எந்த ரஸ_லையும்
(தூதரையும்) அல்லாஹ்
அனுப்பவே மாட்டான்""
என்றும் கூறினீர்கள்;
இவ்வாறே, எவர்
வரம்பு மீறிச்
சந்தேகிக்கிறாரோ
அவரை அல்லாஹ்
வழிகேட்டில்
விட்டு விடுகிறான்.
40:35. ''(இறைவனிடமிருந்து)
தங்களுக்கு வந்த
யாதோர் ஆதாரமுமின்றி,
அல்லாஹ்வின்
வசனங்களைப் பற்றித்
தர்க்கம் செய்வது,
அல்லாஹ்விடத்திலும்
ஈமான் கொண்டவர்களிடத்திலும்
மிகவும் வெறுக்கப்பட்டதாகும்;
இவ்வாறே, பெருமையடித்து
ஆணவம் கொள்ளும்
ஒவ்வோர் இருதயத்தின்
மீதும் அல்லாஹ்
முத்திரையிட்டு
விடுகிறான்""
(என்றும் அவர்
கூறினார்). 40:36. (இவ்வளவு
உபதேசித்த பின்னரும்;)
''ஹாமானே உயரமான
ஒரு கோபுரத்தை
எனக்காக நீ கட்டுவாயாக
- நான் (மேலே செல்வதற்கான)
பாதைகளைப் பெறும்
பொருட்டு! 40:37. ''(ஆம்) வானங்களின்
பாதைகளை அடைந்து
மூஸாவுடைய ஆண்டவனை
நான் காண வேண்டும்;
எனினும் அவர்
பொய் சொல்லுகிறார்
என்றே நிச்சயமாக
நான் எண்ணுகிறேன்;""
என ஃபிர்அவ்ன்
கூறினான். இவ்வாறே
ஃபிர்அவ்னுக்கு
அவனுடைய தீய செயல்கள்
அழகாக்கப்பட்டன
இன்னும் (நேர்)
வழியிலிருந்து
அவன் தடுக்கப்பட்டான்;
ஃபிர்அவ்னுடைய
சதி அழிவில்லாமல்
(வேறு எவ்விதமாகவும்)
முடிய வில்லை.
40:38. ஈமான்
கொண்டிருந்த
அம்மனிதர் மேலும்
கூறினார்; ''என்னுடைய
சமூகத்தாரே! என்னைப்
பின்பற்றுங்கள்;
நான் உங்களுக்கு
நேர்மையுடைய
பாதையைக் காண்பிக்கிறேன்.
40:39. ''என்னுடைய
சமூகத்தாரே! இவ்வுலக
வாழ்க்கையெல்லாம்
அற்ப சுகம்தான்;
அன்றியும் நிச்சயமாக,
மறுமையோ - அதுதான்
(என்றென்றுமிருக்கும்)
நிலையான வீடு.
40:40. ''எவர்
தீமை செய்கிறாரோ,
அவர் அதைப் போன்றதையே
கூலியாகக் கொடுக்கப்படுவார்;
எவர் ஒருவர், ஆணோ
அல்லது பெண்ணோ
முஃமினான நிலையில்
ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்கிறாரோ
அவர்கள் சுவர்க்கத்தில்
பிரவேசிப்பார்;
அதில் கணக்கில்லாது
அவர்கள் உணவளிக்கப்படுவார்கள்.
40:41. ''என்னுடைய
சமூகத்தாரே! எனக்கென்ன?
நான் உங்களை ஈடேற்றத்தின்பால்
அழைக்கிறேன்;
ஆனால் நீங்களோ
என்னை (நரக) நெருப்பினால்
அழைக்கிறீர்கள்.
40:42. ''நான்
அல்லாஹ்வுக்கு
(மாறு செய்து அவனை)
நிராகரிக்க வேண்டுமென்றும்,
எனக்கு எதைப்பற்றி
அறிவு இல்லையோ
அதை நான் அவனுக்கு
இணைவைக்க வேண்டுமென்றும்
என்னை அழைக்கின்றீர்கள்.
ஆனால் நானோ யாவரையும்
மிகைத்தவனும்,
மிக மன்னிப்பவனுமாகியவனிடம்
அழைக்கின்றேன்.
40:43. ''என்னை
நீங்கள் எதன்
பக்கம் அழைக்கின்றீர்களோ,
அது நிச்சயமாக
இவ்வுலகிலும்
மறுமையிலும்
(நாயன் என) அழைப்பதற்கு
சிறிதும் தகுதியில்லாதது
மேலும் நிச்சயமாக
நாம் அல்லாஹ்விடமே
திரும்பச் செல்வோம்.
இன்னும் நிச்சயமாக
வரம்பு மீறியவர்கள்
நரக வாசிகளாகவே
இருக்கிறார்கள்.
40:44. ''எனவே,
நான் உங்களுக்குச்
சொல்வதை நீங்கள்
விரைவில் உணர்வீர்கள்;
மேலும், நான் என்
காரியத்தை அல்லாஹ்விடம்
ஒப்படைத்து விடுகிறேன்
- நிச்சயமாக அல்லாஹ்
அடியார்களைக்
கண்ணுற்றவனாகவே
இருக்கின்றான்""
(என்றும் அவர்
கூறினார்). 40:45. ஆகவே,
அவர்கள் திட்டமிட்ட
தீமைகளை விட்டும்
அல்லாஹ் அவரைக்
காத்துக் கொண்டான்.
மேலும் வேதனையின்
கேடு ஃபிர்அவ்னின்
கூட்டத்தாரைச்
சூழ்ந்து கொண்டது.
40:46. காலையிலும்,
மாலையிலும் அவர்கள்
நரக நெருப்பின்
முன் கொண்டுவரப்படுவார்கள்;
மேலும் நியாயத்
தீர்ப்பு காலம்
நிலைபெற்றிருக்கும்
நாளில் ''ஃபிர்அவ்னுடைய
கூட்டத்தாரைக்
கடினமான வேதனையில்
புகுத்துங்கள்""
(என்று கூறப்படும்).
40:47. அவர்கள்
நரக நெருப்பில்
தர்க்கம் செய்து
கொண்டு, பலஹீனர்கள்
பெருமை அடித்துக்
கொண்டிருந்தோரை
நோக்கி; ''நிச்சயமாக
நாங்கள் உங்களைப்
பின்பற்றுபவர்களாக
இருந்தோம் - எனவே,
எங்களை விட்டும்
இந்நெருப்பிலிருந்து
ஒரு பகுதியையாவது
விலக்கி வைப்பீர்களாக?""
என்று அவர்கள்
சொல்லும் வேளையை
(நினைவுட்டுவீராக!).
40:48. (அப்போது)
''நிச்சயமாக நாம்
எல்லோருமே இதிலிருக்கிறோம்;
நிச்சயமாக அல்லாஹ்
(தன்) அடியார்களுக்கிடையில்
தீர்ப்புச் செய்து
விட்டான்"" என்று
பெருமை அடித்துக்
கொண்டிருந்தவர்கள்
கூறுவார்கள்.
40:49. ''இவ்வேதனையை
ஒரு நாளைக்கு
(மட்டுமாவது) எங்களுக்கு
இலேசாக்கும்படி
உங்கள் இறைவனிடத்தில்
பிரார்த்தனை
செய்யுங்கள்""
என்று (நரக) நெருப்பில்
இருப்பவர்கள்
நரகத்தின் காவலாளிகளை
நோக்கி கூறுவார்கள்.
40:50. ''உங்கள்
ரஸ_ல்கள் (தூதர்கள்)
உங்களிடம் தெளிவான
அத்தாட்சிகளுடன்
வரவில்லையா?""
என (அக்காவலாளிகள்)
கேட்பார்கள்.
''ஆம்! நிச்சயமாக""
என அவர்கள் பதில்
கூறுவார்கள்.
''அவ்வாறாயின்
நீங்களே பிரார்த்தனை
செய்து கொள்ளுங்கள்""
என்று அவர்கள்
கூறுவர். ஆனால்
காஃபிர்களின்
பிரார்த்தனை
வழி கேட்டிலில்லாமல்
இல்லை. 40:51. நிச்சயமாக,
நாம் நம்முடைய
ரஸ_ல்(தூதர்)களுக்கும்,
ஈமான் கொண்டவர்களுக்கும்,
இவ்வுலக வாழ்க்கையிலும்,
சாட்சிகள் நிலைபெறும்
நாளிலும் உதவி
செய்வோம். 40:52. அந்நாளில்,
அநியாயக்காரர்களுக்கு
அவர்கள் புகழ்
கூறுதல் பயனளிக்காது
- அவர்களுக்கு
லஃனத்தும் (சாபமும்)
உண்டு தீய இருப்பிடமும்
அவர்களுக்குண்டு.
40:53. நிச்சயமாக
மூஸாவுக்கு நேர்வழி
(காட்டும் வேதத்தை)
நாம் அளித்தோம்
- அன்றியும் இஸ்ராயீலின்
சந்ததியினரை
வேதத்திற்கு
வாரிசாக்கினோம்.
40:54. (அது) நேரான
வழிகாட்டியாகவும்
அறிவுடையோருக்கு
நல்லுபதேசமாகவும்
இருந்தது. 40:55. ஆகவே,
நீர் பொறுமையுடன்
இருப்பீராக. நிச்சயமாக
அல்லாஹ்வின்
வாக்குறுதி உறுதியுடையதாகும்.
உம் பாவத்திற்காக
மன்னிப்புக்
கோருவீராக மாலையிலும்
காலையிலும் உம்
இறைவனைப் புகழ்ந்து,
தஸ்பீஹ் (துதி)
செய்து கொண்டு
இருப்பீராக! 40:56. நிச்சயமாக
எவர்கள் தங்களிடம்
வந்த அல்லாஹ்வுடைய
வசனங்களைப்பற்றி
எந்த ஆதாரமுமின்றித்
தர்க்கம் செய்கின்றார்களோ,
அவர்களுடைய இருதயங்களில்
பெருமை தவிர (வேறு
எதுவும்) இல்லை
ஆனால் அ(ப் பெருமையான)தை
அவர்கள் அடையவும்
மாட்டார்கள்;
ஆகவே (நபியே!) நீர்
அல்லாஹ்விடமே
பாதுகாவல் தேடுவீராக!
நிச்சயமாக அவன்,
யாவற்றையும்
செவியேற்பவன்,
பார்ப்பவன். 40:57. நிச்சயமாக
வானங்களையும்,
பூமியையும் படைப்பது,
மனிதர்களைப்
படைப்பதை விட
மிகவும் பெரிதாகும்
- எனினும் மனிதர்களில்
பெரும்பாலோர்
அறிய மாட்டார்கள்.
40:58. குருடரும்,
பார்வையுடையோரும்
சமமாகார் அவ்வாறே,
ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல)
அமல்கள் செய்வோரும்,
தீயோரும் சமமாக
மாட்டார்கள்;
உங்களில் சொற்பமானவர்களே
(இதைக் கொண்டு)
நல்லுபதேசம்
பெறுகிறீர்கள்.
40:59. (விசாரணைக்குரிய)
காலம் நிச்சயமாக
வந்தே தீரும்;
அதில் சந்தேகமே
இல்லை - எனினும்
மனிதர்களில்
பெரும்பாலோர்
இதில் ஈமான் கொள்ளவில்லை.
40:60. உங்கள்
இறைவன் கூறுகிறான்;
''என்னையே நீங்கள்
பிரார்த்தியுங்கள்;
நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு
பதிலளிக்கிறேன்;
எவர்கள் என்னை
வணங்குவதை விட்டும்
பெருமையடித்துக்
கொண்டிருக்கிறார்களோ,
அவர்கள் சிறுமையடைந்தவர்களாக
நரகத்தில் நுழைவார்கள்.""
40:61. நீங்கள்
இளைப்பாறுவதற்காக
இரவையும், நீங்கள்
பார்ப்பதற்காக
பகலையும் அல்லாஹ்தான்
படைத்தான்; நிச்சயமாக
அல்லாஹ் மனிதர்கள்
மீது அருள் பொழிகின்றான்;
ஆயினும் மனிதர்களில்
பெரும்பாலோர்
நன்றி செலுத்துவதில்லை.
40:62. அவன்
தான் உங்கள் அல்லாஹ்
- உங்கள் இறைவன்
- எல்லாப் பொருட்களையும்
படைப்பவன் - அவனைத்
தவிர வேறு நாயனில்லை
எனவே நீங்கள்
(சத்தியத்தை விட்டும்)
எங்கு திருப்பப்படுகிறீர்கள்?
40:63. அல்லாஹ்வின்
வசனங்களை நிராகரித்துக்
கொண்டிருந்தார்களே
அவர்களும் இவ்வாறே
திருப்பப்பட்டனர்.
40:64. அல்லாஹ்தான்
உங்களுக்கு இப்பூமியைத்
தங்குமிடமாகவும்,
வானத்தை ஒரு விதானமாகவும்
உண்டாக்கியிருக்கிறான்;
மேலும், அவன் தான்
உங்களை உருவாக்கி,
உங்கள் உருவங்களை
அழகாக்கி, சிறந்த
ஆகார வசதிகளையும்
அளித்தான்; அவன்தான்
அல்லாஹ்; உங்களுடைய
இறைவன்; அகிலதாருக்கெல்லாம்
இறைவனாகிய அல்லாஹ்
மிக பாக்கியமுடையவன்.
40:65. அவனே
(என்றென்றும்)
உயிரோடிருப்பவன்;
அவனையன்றி (வேறு)
நாயனில்லை - ஆகவே
நீங்கள் அவனுக்கே
முற்றிலும் வழிபட்டு
தூய உள்ளத்தோடு
அவனை அழையுங்கள்;
அல்ஹம்து லில்லாஹி
ரப்பில் ஆலமீன்
- அனைத்துப் புகழும்
அகிலங்கள் எல்லாவற்றையும்
படைத்துக் காத்துப்
பரிபக்குவப்படுத்தும்
நாயனான அல்லாஹ்வுக்கே
ஆகும். 40:66. (நபியே!)
கூறுவீராக ''என்னுடைய
இறைவனிடமிருந்து
தெளிவான அத்தாட்சிகள்
எனக்கு வந்த பொழுது,
அல்லாஹ்வையன்றி
நீங்கள் அழைப்பவற்றை
வணங்குவதை விட்டும்
நிச்சயமாக நான்
தடுக்கப்பட்டுள்ளேன்
- அன்றியும் - அகிலத்தின்
இறைவனுக்கே அடிபணிய
வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டிருக்கின்றேன்.""
40:67. அவன்தான்
உங்களை மண்ணிலிருந்து
படைத்தான்; பின்
இந்திரியத்திலிருந்தும்
பின் அலக் என்னும்
நிலையிலிருந்தும்
(உருவாக்கி) உங்களைக்
குழந்தையாக வெளியாக்குகிறான்;
பின் நீங்கள்
உங்கள் வாலிபத்தை
அடைந்து , பின்னர்
முதியோராகுகிறீர்கள்;
இதற்கு முன்னர்
இறந்து விடுவோரும்
உங்களில் இருக்கின்றனர்
- இன்னும் நீங்கள்
ஒரு குறிப்பிட்ட
தவணையை அடைவீர்கள்;
(இதிலிருந்து)
நீங்கள் உணர்வு
பெறும் பொருட்டு
(இதை அறிந்து கொள்ளுங்கள்).
40:68. அவனே
உயிர்ப்பிக்கிறான்;
அவனே மரிக்கச்
செய்கிறான். ஆகவே
அவன் ஒரு காரியத்தை(ச்
செய்ய)த் தீர்மானித்தால்;
'ஆகுக!" என்று அதற்குக்
கூறுகிறான். உடன்
அது ஆகிவிடுகிறது.
40:69. அல்லாஹ்வின்
வசனங்களைப் பற்றித்
தர்க்கம் செய்பவர்களை
நீங்கள் பார்க்கவில்லையா?
எவ்வாறு அவர்கள்
(சத்தியத்தை விட்டும்)
திருப்பப்படுகின்றனர்?
40:70. எவர்
இவ்வேதத்தையும்,
நம்முடைய (மற்ற)
தூதர்கள் கொண்டு
வந்ததையும் பொய்ப்பிக்கிறார்களோ
அவர்கள் விரைவிலேயே
(உண்மையை) அறிவார்கள்.
40:71. அவர்களுடைய
கழுத்துகளில்
மோவாய்க்கட்டைகள்
வரை அரிகண்டங்களுடன்
விலங்குகளுடனும்
இழுத்துக் கொண்டு
வரப்பட்டு 40:72. கொதிக்கும்
நீரிலும், பிறகு
(நரக)த் தீயிலும்
கரிக்கப்படுவார்கள்.
40:73. பிறகு
அவர்களுக்குச்
சொல்லப் படும்;
''(அல்லாஹ்வையன்றி,)
நீங்கள் (அவனுக்கு)
இணைவைத்துக்
கொண்டிருந்தவை
எங்கே?"" என்று.
40:74. ''அல்லாஹ்வையன்றி""
(நீங்கள் இணைவைத்துக்
கொண்டிருந்தவை
எங்கே என்று கேட்கப்படும்);
''அவை எங்களை விட்டும்
மறைந்து விட்டன
அன்றியும் முன்னர்
நாங்கள் (அல்லாஹ்வைத்
தவிர எதையும்)
அழைத்துக் கொண்டிருக்கவில்லையே!""
என்று கூறுவார்கள்.
இவ்வாறுதான்
காஃபிர்களை அல்லாஹ்
வழி கெடச் செய்கிறான்.
40:75. ''இது, நீங்கள்
பூமியில் நியாயமின்றிப்
(பெருமையடித்து)
மகிழ்ந்து பூரித்துக்
கொண்டிருந்தீர்களே
(அதற்கான தண்டனையாகும்).
40:76. ''நீங்கள்
நரகத்தின் வாயில்களுள்
அதில் என்றென்றும்
தங்குபவர்களாக
- பிரவேசியுங்கள்'"
(என்று கூறப்படும்)
. எனவே, பெருமையடித்துக்
கொண்டிருந்தவர்களின்
தங்குமிடம் மிகவும்
கெட்டது. 40:77. ஆகவே,
(நபியே!) நீர் பொறுமையுடன்
இருப்பீராக நிச்சயமாக
அல்லாஹ்வின்
வாக்குறுதி உண்மையானது;
அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
சிலவற்றை, நாம்
உமக்குக் காண்பித்தாலும்
அல்லது அதற்கு
முன்னரே நிச்சயமாக
நாம் உம்மை மரணமடையச்
செய்தாலும், அவர்கள்
நம்மிடமே கொண்டுவரப்படுவார்கள்.
40:78. திட்டமாக
நாம் உமக்கு முன்னர்
தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்;
அவர்களில் சிலருடைய
வரலாற்றை உமக்குக்
கூறியுள்ளோம்;
இன்னும் எவர்களுடைய
வரலாற்றை உமக்குக்
கூறவில்லையோ
(அவர்களும்) அத்தூதர்களில்
இருக்கின்றனர்
(இவ்விருசாராரில்)
எந்தத் தூதரும்
அல்லாஹ்வின்
அனுமதியின்றி
எந்த அத்தாட்சியையும்
கொண்டு வருவதற்கு
(அதிகாரமும்) இல்லை
ஆகவே அல்லாஹ்வுடைய
கட்டளைவரும்
போது, (அனைவருக்கும்)
நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும்;
அன்றியும், அந்த
இடத்தில் பொய்யர்கள்
தாம் நஷ்டமடைவார்கள்.
40:79. அல்லாஹ்தான்
கால் நடைகளை உங்களுக்காக
உண்டாக்கியிருக்கிறான்
- அவற்றில் சிலவற்றின்
மீது நீங்கள்
சவாரி செய்கிறீர்கள்
- இன்னும் அவற்றி(ல்
சிலவற்றி)லிருந்து
நீங்கள் புசிக்கிறீர்கள்.
40:80. இன்னும்,
அவற்றில் உங்களுக்கு
(வேறு பல) பயன்களும்
இருக்கின்றன
மேலும் உங்கள்
உள்ளங்களிலுள்ள
விருப்பங்களை
அதனால் நீங்கள்
நிறைவேற்றிக்
கொள்ளும் பொருட்டு,
அவற்றின் மீதும்
கப்பல்கள் மீதும்
நீங்கள் சுமந்து
செல்லப்படுகிறீர்கள்.
40:81. இன்னும்,
அவன் தன் அத்தாட்சிகளை
உங்களுக்குக்
காண்பிக்கிறான்;
ஆகவே அல்லாஹ்வின்
அத்தாட்சிகளில்
எதை நீங்கள் மறுப்பீர்கள்?
40:82. இவர்கள்
பூமியில் பிரயாணம்
செய்து தங்களுக்கு
முன்னர் இருந்தவர்களின்
முடிவு எப்படியிருந்தது
என்பதைப் பார்க்க
வில்லையா? அவர்கள்
இவர்களை விட (எண்ணிக்கையில்)
அதிகமாகவும்,
பலத்திலும், பூமியில்
விட்டுச் சென்ற
சின்னங்களிலும்
மிகைத்தவர்களாகவும்
இருந்தார்கள்
- எனினும், அவர்கள்
சம்பாதித்தது
(எதுவும்) அவர்களுக்குப்
பயனளிக்கவில்லை.
40:83. ஆகவே,
அவர்களுடைய தூதர்கள்
அவர்களிடம் தெளிவான
அத்தாட்சிகளுடன்
வந்த போது, அவர்கள்
தங்களிடமிருந்த
கல்வியைக் கொண்டு
பெரும் மகிழ்ச்சி
அடைந்திருந்தார்கள்,
எனினும், அவர்கள்
பரிகாசம் செய்து
கொண்டிருந்ததுவே
அவர்களை சூழ்ந்து
கொண்டது. 40:84. எனவே
அவர்கள் நம்(கட்டளையால்
உண்டான) வேதனையை
கண்டபோது, ''நாங்கள்
அல்லாஹ் ஒருவன்
மீதே ஈமான் கொள்கிறோம்;
நாங்கள் (அவனுடன்)
இணைவைத்தவற்றை
நிராகரிக்கிறோம்""
என்று கூறினார்கள்.
40:85. ஆயினும்,
நம் (கட்டளையால்
உண்டான) வேதனையைக்
கண்டபோது, அவர்கள்
கொண்ட நம்பிக்கை
அவர்களுக்குப்
பயனளிக்கவில்லை.
(இதுவே) அல்லாஹ்வுடைய
வழியாகும்; அவனுடைய
அடியார்களுக்கு
(முன்னரும் இவ்வாறே)
நிகழ்ந்திருக்கின்றது.
ஆதலால், அந்நேரத்தில்
காஃபிர்கள் நஷ்டத்தையே
அடைந்தார்கள்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |