|
அத்தியாயம்-42 ஸ_ரத்துஷ்
ஷ_றா (கலந்தாலோசித்தல்)
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
42:1. ஹா, மீம்.
42:2. ஐன், ஸீன்,
காஃப். 42:3. (நபியே!)
இது போன்றே அல்லாஹ்
உமக்கும், உமக்கு
முன் இருந்தவர்(களாகிய
நபிமார்)களுக்கும்
வஹீ அறிவிக்கின்றான்;
அவனே (யாவரையும்)
மிகைத்தவன்; ஞானம்
மிக்கோன். 42:4. வானங்களிலுள்ளவையும்,
பூமியிலுள்ளவையும்
அவனுக்கே (சொந்தமானவையாகும்!)
மேலும் அவன் மிகவும்
உயர்ந்தவன், மகத்தானவன்.
42:5. அவர்களுக்கு
மேலிருந்து வானங்கள்
பிளந்து விடலாம்;
ஆனால் மலக்குகள்
தங்களுடைய இறைவனின்
புகழைக் கொண்டு
தஸ்பீஹ{ செய்து,
உலகில் உள்ளவர்களுக்காக
மன்னிப்புத்
தேடுகின்றனர்
அறிந்து கொள்க!
நிச்சயமாக அல்லாஹ்வே
மிகவும் மன்னப்பவன்;
மிக்க கிருபையுடையவன்.
42:6. அவனையன்றி(த்
தங்களுக்கு வேறு)
பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களே
அவர்களை அல்லாஹ்
கவனித்தவனாகவே
இருக்கின்றான்;
நீர் அவர்கள்
மேல் பொறுப்பாளர்
அல்லர். 42:7. அவ்வாறே
நகரங்களின் தாய்க்கும்,
(மக்காவுக்கும்
அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும்
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும்,
எவ்வித சந்தேகமுமின்றி
(யாவரும்) ஒன்று
சேர்க்கப்படும்
நாளைப்பற்றி
அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும்,
அரபி பொழியிலான
இந்த குர்ஆனை
நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்;
ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும்
ஒரு கூட்டம் நரகிலும்
இருக்கும். 42:8. அல்லாஹ்
நாடியிருந்தால்,
நிச்சயமாக அவர்கள்
(யாவரையும்) அவன்
ஒரே உம்மத்தாக
- சமுதாயமாக ஆக்கியிருப்பான்;
எனினும் அவன்
தான் நாடியவர்களைத்
தன்னுடைய ரஹ்மத்தில்
- கிருபையில் - நுழைவிப்பான்;
அநியாயக்காரர்களுக்குப்
பாதுகாவலர்களோ,
உதவிபுரிபவர்களோ
இல்லை. 42:9. (நபியே!)
அவர்கள் அல்லாஹ்வை
அன்றி (வேறு) பாதுகாவலர்களை
எடுத்துக் கொண்டார்களா?
ஆனால் அல்லாஹ்வோ
அவன் தான் பாதுகாவலனாக
இருக்கின்றான்,
அவனே இறந்தோரை
உயிர்ப்பிக்கிறான்
- அவனே எல்லாவற்றின்
மீதும் ஆற்றலுடையவன்.
42:10. நீங்கள்
எந்த விஷயத்தில்
கருத்து வேற்றுமை
கொண்டிருக்கிறீர்களோ,
அதன் தீர்ப்பு
அல்லாஹ்விடமே
இருக்கிறது - அ(த்தகைய
தீர்ப்பு வழங்குப)வன்
தான் அல்லாஹ்
- என்னுடைய இறைவன்;
அவன் மீதே நான்
முற்றும் நம்பிக்கை
வைக்கிறேன்; அன்றியும்
அவன் பக்கமே நான்
திரும்புகிறேன்.
42:11. வானங்களையும்,
பூமியையும் படைத்தவன்
அவனே உங்களுக்காக
உங்களில் இருந்தே
ஜோடிகளையும்
கால் நடைகளிலிருந்து
ஜோடிகளையும்
படைத்து, அதைக்
கொண்டு உங்களை(ப்
பல இடங்களிலும்)
பல்கி பரவச் செய்கிறான்,
அவனைப் போன்று
எப்பொருளும்
இல்லை அலன் தான்
(யாவற்றையும்)
செவியேற்பவன்,
பார்ப்பவன். 42:12. வானங்களுடையவும்,
பூமியுடையவும்
சாவிகள் அவனிடமே
இருக்கின்றன
தான் நாடியவர்களுக்கு
அவனே உணவு வசதிகளைப்
பெருகும் படி
செய்கிறான், (தான்
நாடியவர்களுக்கு
அவனே அளவு படுத்திச்)
சுருக்கிவிடுகிறான்
- நிச்சயமாக அவன்
எல்லாப் பொருட்களையும்
நன்கறிந்தவன்.
42:13. நூஹ{க்கு
எதனை அவன் உபதேசித்தானோ,
அதனையே உங்களுக்கும்
அவன் மார்க்கமாக்கியிருக்கின்றான்.
ஆகவே (நபியே) நாம்
உமக்கு வஹீ மூலம்
அறிவிப்பதும்,
இப்றாஹீமுக்கும்,
மூஸாவுக்கும்
, ஈஸாவுக்கும்
நாம் உபதேசித்ததும்
என்னவென்றால்;
''நீங்கள் (அனைவரும்)
சன்மார்க்கத்தை
நிலை நிறுத்துங்கள்,
நீங்கள் அதில்
பிரிந்து விடாதீர்கள்"
என்பதே - இணைவைப்போரை
நீங்கள் எதன்
பக்கம் அழைக்கின்றீர்களோ,
அது அவர்களுக்குப்
பெரும் சுமையாகத்
தெரிகிறது - தான்
நாடியவர்களை
அல்லாஹ் தன் பால்
தேர்ந்தெடுத்துக்
கொள்கிறான் - (அவனை)
முன்னோக்குபவரை
அவன் தன்பால்
நேர்வழி காட்டுகிறான்.
42:14. அவர்கள்,
தங்களிடம் ஞானம்
(வேதம்) வந்த பின்னர்,
தங்களுக்கிடையேயுள்ள
பொறாமையின் காரணமாகவே
யன்றி அவர்கள்
பிரிந்து போகவில்லை
(அவர்கள் பற்றிய
தீர்ப்பு) ஒரு
குறிப்பிட்ட
தவணையில் என்று
உம்முடைய இறைவனின்
வாக்கு முன்னரே
ஏற்பட்டடிருக்காவிடில்,
அவர்களிடையே
(இதற்குள்) நிச்சயமாக
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்;
அன்றியும், அவர்களுக்கு
பின்னர் யார்
வேதத்திற்கு
வாரிசாக்கப்பட்டார்களோ
நிச்சயமாக அவர்களும்
இதில் பெரும்
சந்தேகத்தில்
இருக்கின்றனர்.
42:15. எனவே,
(நபியே! நேர்வழியின்
பக்கம் அவர்களை)
நீர் அழைத்துக்
கொண்டே இருப்பீராக
மேலும், நீர் ஏவப்பட்ட
பிரகாரம் உறுதியுடன்
நிற்பீராக! அவர்களுடைய
(இழிவான) மனோ இச்சைகளை
நீர் பின்பற்றாதீர்;
இன்னும், ''அல்லாஹ்
இறக்கி வைத்த
வேதங்களை நான்
நம்புகிறேன்;
அன்றியும் உங்களிடையே
நீதி வழங்கும்படியும்
நான் ஏவப்பட்டுள்ளேன்.
அல்லாஹ்வே எங்கள்
இறைவனாவான்; அவனே
உங்களுடைய இறைவனும்
ஆவான். எங்கள்
செயல்கள் எங்களுக்கு
உங்கள் செயல்கள்
உங்களுக்கு எங்களுக்கும்
உங்களுக்குமிடையே
தர்க்கம் வேண்டாம்
- அல்லாஹ் நம்மிடையே
(மறுமையில்) ஒன்று
சேர்ப்பன், அவன்
பாலே நாம் மீண்டு
செல்ல வேண்டியிருக்கிறது""
என்றும் கூறுவீராக.
42:16. எவர்கள்
அல்லாஹ்வை ஒப்புக்
கொண்டபின், அவனைப்பற்றி
தர்க்கித்துக்
கொண்டிருக்கிறார்களோ,
அவர்களுடைய தர்க்கம்
அவர்களுடைய இறைவனிடத்தில்
பயனற்றதாகும்;
அதனால் அவர்கள்
மீது (அவனுடைய)
கோபம் ஏற்பட்டு,
கடினமான வேதனையும்
அவர்களுக்கு
உண்டாகும். 42:17. அல்லாஹ்தான்
இந்த வேதத்தையும்
நீதியையும் உண்மையையும்
கொண்டு இறக்கி
அருளினான்; இன்னும்
(நபியே! தீர்ப்புக்குரிய)
அவ்வேளை சமீபமாக
இருக்கிறது என்பதை
நீர் அறிவீரா?
42:18. அதன்
மேல் நம்பிக்கை
கொள்ளாதவர்கள்,
அதைப்பற்றி அவசரப்படுகின்றனர்
ஆனால் நம்பிக்கை
கொண்டவர்கள்
அதனை (நினைத்து)
பயப்படுகிறார்கள்;
நிச்சயமாக அது
உண்மையே என்பதை
அவர்கள் அறிகிறார்கள்;
அறிந்து கொள்க
அவ்வேளை குறித்து
எவர்கள் வீண்வாதம்
செய்து கொண்டிருக்கிறார்களோ
அவர்கள் நெடிய
வழிகேட்டிலேயே
இருக்கிறார்கள்.
42:19. அல்லாஹ்
தன் அடியார்கள்
பால் அன்பு மிக்கவனாக
இருக்கிறான்;
தான் நாடியவர்களுக்கு
(வேண்டிய) உணவளிக்கிறான்;
அவனே வலிமை மிக்கவன்;
(யாவரையும்) மிகைத்தவன்.
42:20. எவர்
மறுமையின் விளைச்சலை
விரும்புகிறாரோ
அவருடைய விளைச்சலை
நாம் அவருக்காக
அதிகப்படுத்துவோம்;
எவர் இவ்வுலகின்
விளைச்சலை மட்டும்
விரும்புகிறாரோ,
அவருக்கு நாம்
அதிலிருந்து
ஓரளவு கொடுக்கிறோம்
- எனினும் அவருக்கு
மறுமையில் யாதொரு
பங்கும் இல்லை.
42:21. அல்லது
அல்லாஹ் அனுமதிக்காததை
மார்க்கமாக்கி
வைக்கக்கூடிய
இணை(த் தெய்வங்)கள்
அவர்களுக்கு
இருக்கின்றனவா?
மேலும், (மறுமையில்
விசாரணைக்குப்
பிறகு தக்க கூலி
கொடுக்கப்படும்
என்னும் இறைவனின்)
தீர்ப்புப் பற்றிய
வாக்கு இல்லாதிருப்பின்
(இதுவரை) அவர்களுக்கிடையில்
தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்
- நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு
நோவினை செய்யும்
வேதனை உண்டு. 42:22. (அந்நாளில்)
அநியாயக்காரர்கள்
தாங்கள் சம்பாதித்த
(தீய)தைப் பற்றி
பயந்து கொண்டிருப்பதை
நீர் பார்ப்பீர்;
ஆனால் அது அவர்கள்
மீது நிகழவே செய்யும்;
ஆனால் எவர் ஈமான்
கொண்டு ஸாலிஹான
(நல்ல) அமல்கள்
செய்கிறார்களோ
அவர்கள் சுவர்க்கப்
பூங்காவனங்களில்
இருப்பார்கள்;
அவர்கள் விரும்பியது
அவர்களுடைய இறைவனிடம்
கிடைக்கும். அதுவே
பெரும் பாக்கியமாகும்.
42:23. ஈமான்
கொண்டு (ஸாலிஹான)
நல்ல அமல்கள்
செய்துவரும்
தன் அடியார்களுக்கு
அல்லாஹ் நன்மாராயங்
கூறுவதும் இதுவே
(நபியே!) நீர் கூறும்;
''உறவினர்கள் மீது
அன்பு கொள்வதைத்
தவிர, இதற்காக
நான் உங்களிடம்
யாதொரு கூலியும்
கேட்கவில்லை!""
அன்றியும், எவர்
ஒரு நன்மை செய்கிறாரோ,
அவருக்கு நாம்
அதில் பின்னும்
(பல) நன்மையை அதிகமாக்குவோம்;
நிச்சயமாக அல்லாஹ்
மன்னிப்பவனாகவும்,
நன்றியை ஏற்றுக்
கொள்பவனாகவும்
இருக்கின்றான்.
42:24. அல்லது
(உம்மைப் பற்றி)
அவர்கள்; ''அவர்
அல்லாஹ்வின்
மீது பொய்யை இட்டுக்
கட்டிக் கூறுகிறார்""
என்று சொல்கிறார்களா?
அல்லாஹ் நாடினால்
அவன் உம் இருதயத்தின்
மீது முத்திரையிட்டிருப்பான்;
அன்றியும் அல்லாஹ்
பொய்யை அழித்து,
தன் வசனங்களைக்
கொண்டு உண்மையை
உறுதிப்படுத்துகிறான்;
நிச்சயமாக நெஞ்சங்களிலிருப்பதை
அவன் மிக அறிந்தவன்.
42:25. அவன்தான்
தன் அடியார்களின்
தவ்பாவை - பாவ மன்னிப்புக்
கோறுதலை - ஏற்றுக்
கொள்கிறான்; (அவர்களின்)
குற்றங்களை மன்னிக்கிறான்.
இன்னும், நீங்கள்
செய்வதை அவன்
நன்கறிகிறான்.
42:26. அன்றியும்
ஈமான் கொண்டு
ஸாலிஹான (நல்ல)
அமல் செய்பவர்(களின்
பிரார்த்தனை)களையும்
ஏற்று அவர்களுக்குத்
தன் அருளை அதிகப்படுத்துகிறான்;
இன்னும், நிராகரிப்பவர்களுக்கு
கடுமையான வேதனையுண்டு.
42:27. அல்லாஹ்
தன் அடியார்களுக்கு,
உணவு (மற்றும்
வசதிகளை) விரிவாக்கி
விட்டால், அவர்கள்
பூமியியல் அட்டூழியம்
செய்யத் தலைப்பட்டு
விடுவார்கள்;
ஆகவே அவன், தான்
விரும்பிய அளவு
கொடுத்து வருகின்றான்;
நிச்சயமாக அவன்
தன் அடியார்களை
நன்கறிபவன்; (அவர்கள்
செயலை) உற்று நோக்குபவன்.
42:28. அவர்கள்
நிராசையான பின்னர்
மறையை இறக்கி
வைப்பவன் அவனே
மேலும் அவன் தன்
ரஹ்மத்தை (அருளை)ப்
பரப்புகிறான்;
இன்னும் அவனே
புகழுக்குரிய
பாதுகாவலன். 42:29. வானங்களையும்,
பூமியையும் படைத்திருப்பதும்,
அவையிரண்டிலும்
கால்நடைகள் (முதலியவற்றைப்)
பரப்பி வைத்திருப்பதும்,
அவனுடைய அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்
- ஆகவே, அவன் விரும்பியபோது
அவற்றை ஒன்று
சேர்க்க பேராற்றலுடையவன்.
42:30. அன்றியும்
தீங்கு வந்து
உங்களை அடைவதெல்லாம்,
அது உங்கள் கரங்கள்
சம்பாதித்த (காரணத்)தால்
தாம், எனினும்,
பெரும்பாலானவற்றை
அவன் மன்னித்தருள்கின்றான்.
42:31. இன்னும்,
நீங்கள் பூமியில்
(எங்கு தஞ்சம்
புகுந்தாலும்)
அவனை இயலாமல்
ஆக்குபவர்கள்
இல்லை மேலும்,
உங்களுக்கு அல்லாஹ்வைத்
தவிர, பாதுகாவலனோ,
உதவிபுரிபவனோ
இல்லை. 42:32. இன்னும்,
மலைகளைப் போல்
கடலில் செல்பவையும்,
அவனுடைய அத்தாட்சிகளில்
உள்ளவையாகும்.
42:33. அவன்
விரும்பினால்
காற்றை (வீசாமல்)
அமர்த்தி விடுகிறான்.
அதனால் அவை (கடலின்)
மேற்பரப்பில்
அசைவற்றுக் கிடக்கும்,
நிச்சயமாக இதில்,
பொறுமையாளர்,
நன்றி செலுத்துவோர்
யாவருக்கும்
அத்தாட்சிகள்
இருக்கின்றன.
42:34. அல்லது
அவர்கள் சம்பாதித்த
காரணத்தினால்
அவற்றை அவன் மூழ்கடிக்கச்
செய்து விடுவான்;
மேலும் அவன் பெரும்பாலானவற்றை
மன்னித்தருளுகிறான்.
42:35. அன்றியும்,
நம்முடைய வசனங்களைப்
பற்றித் தர்க்கம்
செய்து கொண்டிருப்போர்
- அவர்களுக்கு
(தப்பித்துக்
கொள்ள) புகலிடம்
ஏதுமில்லை என்பதை
அறிவார்கள். 42:36. ஆகவே,
உங்களுக்குக்
கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம்,
இவ்வுலக வாழ்ககையின்
(அற்ப) சுகங்களேயாகும்;
ஈமான் கொண்டு,
தங்கள் இறைவனையே
முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு,
அல்லாஹ்விடம்
இருப்பது மிகவும்
மேலானதும் நிலையானதுமாகும்.
42:37. அவர்கள்
(எத்தகையொரென்றால்)
பெரும் பாவங்களையும்,
மானக்கேடானவற்றையும்,
தவிர்த்துக்
கொண்டு, தாம் கோபம்
அடையும் பொழுதும்
மன்னிப்பார்கள்.
42:38. இன்னும்
தங்கள் இறைவன்
கட்டளைகளை ஏற்று
தொழுகையை (ஒழுங்குப்படி)
நிலைநிறுத்துவார்கள்
- அன்றியும் தம்
காரியங்களைத்
தம்மிடையே கலந்தாலோசித்துக்
கொள்வர்; மேலும்,
நாம் அவர்களுக்கு
அளித்தவற்றிலிருந்து
(தானமாகச்) செலவு
செய்வார்கள்.
42:39. அன்றியும்.
அவர்களுக்கு
அக்கிரமம் செய்யப்பட்டால்
(அதற்கு எதிராக
நீதியாகத் தக்க
முறையில்) பழி
தீர்ப்பார்கள்.
42:40. இன்னும்
தீமைக்கும் கூலி
அதைப் போன்ற தீமையே
யாகும்; ஆனால்,
எவர் (அதனை) மன்னித்துச்
சமாதானம் செய்கிறாரோ
அவருக்குரிய
நற்கூலி அல்லாஹ்விடம்
இருக்கிறது - நிச்சயமாக
அவன் அநியாயம்
செய்பவர்களை
நேசிக்க மாட்டான்.
42:41. எனவே,
எவரொருவர் அநியாயம்
செய்யப்பட்டபின்,
(அதற்கு எதிராக
நீதியாக) பழி தீர்த்துக்
கொள்கிறாரோ, அ(த்தகைய)வர்
மீது (குற்றம்
சுமத்த) யாதொரு
வழியுமில்லை.
42:42. ஆனால்
எவர்கள் மக்களுக்கு
அநியாயம் செய்து
நீதமின்றி பூமியில்
அட்டூழியம் செய்கிறார்களோ,
அவர்கள் மீது
தான் (குற்றம்
சுமத்த) வழியிருக்கிறது
- இத்தகையோருக்கு
நோவினை செய்யும்
வேதனையுண்டு.
42:43. ஆனால்,
எவரேனும் (பிறர்
செய்த தீங்கைப்)
பொறுத்துக் கொண்டு
மன்னித்து விட்டால்,
நிச்சயமாக, அது
மிக்க உறுதியான
(வீரமுள்ள) செயலாகும்.
42:44. ''இன்னும்
எவரை அல்லாஹ்
வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அதற்குப்பின்
அவனுக்குப் பாதுகாவலர்
எவருமில்லை, அநியாயம்
செய்தவர்கள்
வேதனையைக் காணும்
போது (இதிலிருந்து)
தப்பித்து மீள்வதற்கு
ஏதாகிலும் வழியுண்டா?""
என்று கூறும்
நிலையை நீர் காண்பீர்.
42:45. மேலும்,
சிறுமைப்பட்டுத்
தலை கவிழ்ந்தவர்களாகவும்,
(மறைவகாக்) கடைக்ககண்ணால்
பார்த்த வண்ணமாகவும்
அவர்கள் (நரகத்தின்
முன்) கொண்டவரப்
படுவதை நீர் காண்பீர்;
(அவ்வேளை) ஈமான்
கொண்டவர்கள்
கூறுவார்கள்;
''எவர் தங்களுக்கும்,
தம் குடும்பத்தாருக்கும்
நஷ்டத்தை தேடிக்
கொண்டார்களோ,
கியாம நாளில்
நிச்சயமாக அவர்கள்
முற்றிலும் நஷ்டவாளர்தாம்.""
அறிந்து கொள்க!
நிச்சயமாக அநியாயக்காரர்கள்
நிலையான வேதனையில்
இருப்பார்கள்.
42:46. (அந்நாளில்)
அல்லாஹ்வையன்றி
அவர்களுக்கு
உதவிபுரியும்
உபகாரிகளில்
எவரும் இருக்கமாட்டார்கள்;
அன்றியும், அல்லாஹ்
எவரை வழிகேட்டில்
விட்டுவிடுகிறானோ
அவருக்கு வேறுவழியொன்றுமில்லை.
42:47. அல்லாஹ்வை
விட்டும் தப்பித்துச்
செல்ல போக்கில்லாத
(கியாம) நாள் வருவதற்கு
முன், உங்கள் இறைவனுடைய
(ஏவலுக்கு) பதிலளியுங்கள்
- அந்நாளில் உங்களுக்கு
ஒதுங்குமிடம்
எதுவும் இராது
(உங்கள் பாவங்களை)
நீங்கள் மறுக்கவும்
முடியாது. 42:48. எனினும்
(நபியே!) அவர்கள்
புறக்கணித்து
விட்டால் (நீர்
கவலையுறாதீர்);
நாம் உம்மை அவர்கள்
மீது பாதுகாவலராக
அனுப்பவில்லை
(தூதுச் செய்தியை
எடுத்துக் கூறி)
எத்திவைப்பது
தான் உம்மீது
கடமையாகும்; இன்னும்,
நிச்சயமாக நம்முடைய
ரஹ்மத்தை - நல்லருளை
மனிதர்கள் சுவைக்கும்படிச்
செய்தால், அது
கண்டு அவர்கள்
மகிழ்கிறார்கள்;
ஆனால் அவர்களுடைய
கைகள் முற்படுத்தியுள்ள
(பாவத்தின காரணத்)தால்
அவர்களுக்குத்
தீங்கு நேரிட்டால்
- நிச்சயமாக மனிதன்
நன்றி கெட்டு
மாறு செய்பவனாக
இருக்கின்றான்.
42:49. அல்லாஹ்வுக்கே
வானங்களுடையவும்
பூமியுடையவும்
ஆட்சி சொந்தமாகும்;
ஆகவே தான் விரும்பியவற்றை
அவன் படைக்கின்றான்;
தான் விரும்புவோருக்குப்
பெண் மக்களை அளிக்கிறான்;
மற்றும் தான்
விரும்புவோருக்கு
ஆண் மக்களை அளிக்கின்றான்.
42:50. அல்லது
அவர்களுக்கு
அவன் ஆண்மக்களையும்,
பெண் மக்களையும்
சேர்த்துக் கொடுக்கின்றான்;
அன்றியும் தான்
விரும்பியோரை
மலடாகவும் செய்கிறான்
- நிச்சயமாக, அவன்
மிக அறிந்தவன்;
பேராற்றலுடையவன்.
42:51. அல்லாஹ்
எந்த மனிதரிடத்திலும்
வஹீயாகவோ அல்லது
திரைக்கப்பால்
இருந்தோ அல்லது
தான் விரும்பியதைத்
தன் அனுமதியின்
மீது வஹீயை அறிவிக்கக்
கூடிய ஒரு தூதரை
அனுப்பியோ அன்றி
(நேரிடையாகப்)
பேசவதில்லை நிச்சயமாக
அவன் உயர்ந்தவன்;
ஞானமுடையவன்.
42:52. (நபியே!)
இவ்வாறே நாம்
நம்முடைய கட்டளையில்
ஆன்மாவானதை (குர்ஆனை)
வஹீ மூலமாக உமக்கு
அறிவித்திருக்கிறோம்;
(அதற்கு முன்னர்)
வேதம் என்பதோ
ஈமான் என்பதோ
என்னவென்று நீர்
அறிபவராக இருக்கவில்லை
- எனினும் நாம்
அதை ஒளியாக ஆக்கி,
நம் அடியார்களில
நாம் விரும்பியோருக்கு
இதைக் கொண்டு
நேர்வழி காட்டுகிறோம்
- நிச்சயமாக நீர்
(மக்களை) நேரான
பதையில் வழி காண்பிக்கின்றீர்.
42:53. (அதுவே)
அல்லாஹ்வின்
வழியாகும்; வானங்களில்
இருப்பவையும்,
பூமியில் இருப்பவையும்
(யாவும்) அவனுக்கே
சொந்தம் - அறிந்து
கொள்க! அல்லாஹ்விடமே
எல்லாக் காரியங்களும்
மீண்டு வருகின்றன.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |