|
அத்தியாயம்-51 ஸ_ரத்து(த்)
தாரியாத் (புழுதியைக்
கிளப்பும் காற்றுகள்)
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
51:1. (புழுதிகளை
எழுப்பி) நன்கு
பரத்தும் (காற்றுகள்)
மீது சத்தியமாக!
51:2. (மழைச்)சுமையைச்
சுமந்து செல்பவற்றின்
மீதும், 51:3. பின்னர்
(கடலில்) இலேசாகச்
செல்பவற்றின்
மீதும், 51:4. (பூமியிலுள்ளோருக்கு
விதியானவற்றை
அல்லாஹ்வின்)
கட்டளைப்படி
பங்கிடுவோர்
மீதும் சத்தியமாக
51:5. நிச்சயமாக
நீங்கள் வாக்களிக்கப்
படுவதெல்லாம்
உண்மையேயாகும்.
51:6. அன்றியும்,
(நன்மை, தீமைக்குரிய)
கூலி வழங்குவதும்
நிச்சயமாக நிகழ்வதேயாகும்.
51:7. அழகு
நிரம்பிய வானத்தின்
மீது சத்தியமாக!
51:8. நீங்கள்
(குர்ஆனைப் பற்றி)
முரண்பட்ட பேச்சிலேயே
இருக்கின்றீர்கள்.
51:9. அ(வ் வேதத்)திலிருந்து
திருப்பப்பட்டவன்
(இப்பொழுதும்)
திருப்பப்படுகிறான்.
51:10. பொய்
சொல்பவர்கள்
அழிந்தே போவார்கள்.
51:11.அவர்கள்
எத்தகையோரென்றால்
மடமையினால் மறதியில்
இருக்கின்றனர்.
51:12. (நன்மை,
தீமைக்குக்) ''கூலி
கொடுக்கும் நாள்
எப்போது வரும்?""
என்று அவர்கள்
கேட்கின்றனர்.
51:13. நெருப்பிலே
அவர்கள் சோதிக்கப்படும்
நாளாகும் அது
(என்று நபியே! நீர்
கூறும்). 51:14. ''உங்களுடைய
சோதனையைச் சுவைத்துப்
பாருங்கள்,"" எதனை
நீங்கள் அவசரப்படுத்திக்
கொண்டிருந்தீர்களோ,
இதுதான். 51:15. நிச்சயமாக
பயபக்தியுடையவர்கள்,
(சுவர்க்கத்தின்)
சோலைகளிலும்,
நீரூற்றுகளிலும்
இருப்பார்கள்.
51:16. அவர்கள்
தங்களிறைவன்
அவர்களுக்கு
அளித்ததை (திருப்தியுடன்)
பெற்றுக் கொள்வார்கள்;
நிச்சயமாக அவர்கள்
இதற்கு முன்னர்
நன்மை செய்வோராகவே
இருந்தனர். 51:17. அவர்கள்
இரவில் மிகவும்
சொற்ப நேரமேயன்றித்
தூங்கமாட்டார்கள்.
51:18. அவர்கள்
விடியற் காலங்களில்
(பிரார்த்தனைகளின்
போது இறைவனிடம்)
மன்னிப்புக்
கோரிக் கொண்டிருப்பார்கள்.
51:19. அவர்களுடைய
செல்வத்தில்
இரப்போருக்கும்,
வசதியற்றோருக்கும்
பாத்தியதை உண்டு.
51:20. உறுதியாக
நம்பிக்கை கொண்டவர்களுக்கு
பூமியில் (பல) அத்தாட்சிகள்
இருக்கின்றன.
51:21. உங்களுக்குள்ளேயும்
(பல) அத்தாட்சிகள்
இருக்கின்றன,
(அவற்றை) நீங்கள்
உற்று நோக்க வேண்டாமா?
51:22. அன்றியும்
வானத்தில் உங்கள்
உணவும், (மற்றும்)
நீங்கள் வாக்களிக்கப்
பட்டவையும் இருக்கின்றன.
51:23. ஆகவே,
வானங்கள், பூமி
ஆகியவற்றின்
இறைவன் மீது ஆணையாக!
நீங்கள் பேசிக்
கொண்டிருப்பது
உங்கள் வார்த்தையாக
இருப்பது போன்று
இது பிரத்தியட்சமான
உண்மையாகும்.
51:24. இப்றாஹீமின்
கண்ணியம் மிக்க
விருந்தினர்களின்
செய்தி உமக்கு
வந்ததா? 51:25. அவர்கள்,
அவரிடம் பிரவேசித்த
போது, (அவரை நோக்கி;
''உங்களுக்கு) ''ஸலாம்"
என்று கூறினார்கள்;
(அதற்கவர்), ''(உங்களுக்கு)
''ஸலாம்"" என்று
கூறினார். ''இவர்கள்
(நமக்கு) அறிமுகமில்லா
சமூகத்தாராக
(இருக்கின்றார்களே""
என்று எண்ணிக்
கொண்டார்). 51:26. எனினும்
அவர் தம் குடும்பத்தாரிடம்
விரைந்து சென்று,
ஒரு கொழுத்த காளைக்
கன்றை(ப் பொறித்துக்)
கொண்டு வந்தார்.
51:27. அதை அவர்கள்
முன் வைத்து, ''நீங்கள்
புசிக்க மாட்டீர்களா?""
என்று கூறினார்.
51:28. (அவர்கள்
அதைப் புசிக்காததால்,)
அவருக்கு இவர்களைப்
பற்றி உள்@ர ஓர்
அச்சம் ஏற்படடது,
''(இதனை அறிந்த) அவர்கள்,
பயப்படாதீர்!""
எனக் கூறினார்;
அன்றியும், அவருக்கு
அறிவு மிக்க புதல்வர்
(பிறப்பார்) என்று
நன்மாராயங் கூறினர்.
51:29. பின்னர்
இதைக்கேட்ட அவருடைய
மனைவியார் சப்தமிட்டவராக
(அவர்கள்) எதிரில்
வந்து, தம் முகத்தில்
அடித்துக் கொண்டு
''நான் மலட்டுக்
கிழவியாயிற்றே!""
என்று கூறினார்.
51:30. (அறிவு
மிக்க புதல்வர்
பிறப்பார் என்று;)
''இவ்வாறே உம் இறைவன்
கூறினான், நிச்சயமாக
அவன் ஞானம் மிக்கவன்;
(யாவற்றையும்,)
நன்கறிந்தவன்""
என்று கூறினார்கள்.
51:31. (பின்னர்
இப்றாஹீம்;) ''தூதர்களே!
உங்களுடைய காரியம்
என்ன?"" என்று
வினவினார். 51:32. ''குற்றவாளிகளான
ஒரு சமூகத்தினர்
பால் நாங்கள்
நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கிறோம்""
என்று அவர்கள்
கூறினார்கள்.
51:33. ''அவர்கள்
மீது (சுட்ட) களிமண்
கற்களை எறிவதற்காக
(நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)-
51:34. ''வரம்பு
மீறியவர்களுக்காக
உங்கள் இறைவனிடம்
(அக்கற்கள்) அடையாள
மிடப்பட்டவை.""
51:35. ஆகவே
அவ்வூரில் இருந்த
முஃமின்களை (முதலில்)
நாம் வெளியேற்றி
விட்டோம். 51:36. எனவே,
அதில் முஸ்லிம்களிலிருந்து
ஒரு வீட்டாரைத்
தவிர, ஒருவரையும்
நாம் காணவில்லை.
51:37. நோவினை
தரும் வேதனையை
அஞசுகிறார்களே
அவர்களுக்கு
நாம் இதில் ஓர்
அத்தாட்சிளை
விட்டு வைத்தோம்.
51:38.மேலும்,
மூஸாவி(ன் வரலாற்றி)லும்
ஓர் அத்தாட்சி
இருக்கிறது நாம்
அவரைத் தெளிவான
ஆதாரத்துடன்
ஃபிர்அவ்னிடத்தில்
அனுப்பிய போது 51:39. அவன்
தன் (ஆட்சி, செல்வம்,
படைகள் ஆகியவற்றின்)
வல்லமையின் காரணமாக
(அவரைப்) புறக்கணித்து;
''இவர் ஒரு சூனியக்காரர்,
அல்லது பைத்தியக்காரர்""
என்று கூறினான்.
51:40. ஆகவே,
நாம் அவனையும்,
அவனுடைய படைகளையும்
பிடித்து அவர்களைக்
கடலில் எறிந்தோம்;
அவன் நிந்தனைக்கும்
ஆளாகி விட்டான்.
51:41. இன்னும்,
'ஆது" (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); நாம்
அவர்கள் மீது
(நாசம் விளைவிக்கக்
கூடிய) மலட்டுக்
காற்றை அனுப்பியN
போது 51:42.அ(க்காற்றான)து
தன் எதிரில் பட்டதையெல்லாம்
தூள் தூளாக்காமல்
விடவில்லை. 51:43. மேலும்
'ஸமூது" (சமூகத்தாரிலும்
ஒரு படிப்பினை
இருக்கிறது); ''ஒரு
காலம் சுகம் அனுபவியுங்கள்""
என்று அவர்களுக்குக்
கூறப்பட்டபோது 51:44. அவர்கள்
தங்கள் இறைவனுடைய
கடடளையை மீறினார்கள்;
அவர்கள் பார்த்துக்
கொண்டிருக்கும்
நிலையிலேயே (நில
நடுக்கம் பேரிடி
போன்ற) பயங்கரமான
பெரும் சப்தம்
அவர்களைப் பிடித்துக்
கொண்டது. 51:45. ஆகவே,
அவர்கள் நிற்கவும்
சக்தி பெற்றார்களில்லை
(எத்தகைய) உதவியும்
பெற்றுக் கொள்ள
முடியாதவர்களா(க
மடிந்து) போயினர்.
51:46. அன்றியும்,
இவர்களுக்கு
முன்னால் நூஹ{டைய
சமூகத்தாரையும்
(நினைவூட்டுவீராக);
நிச்சயமாக அவர்கள்
பாவம் செய்யும்
சமூகத்தாராகவே
இருந்தார்கள்.
51:47. மேலும்,
நாம் வானத்தை
(நம்) சக்திகளைக்
கொண்டு அமைத்தோம்;
நிச்சயமாக நாம்
விரிவாற்றலுடையவராவோம்.
51:48. இன்னும்,
பூமியை - நாம் அதனை
விரித்தோம்; எனவே,
இவ்வாறு விரிப்பவர்களில்
நாமே மேம்பாடுடையோம்.
51:49. நீங்கள்
சிந்தித்து நல்லுணர்வு
பெறுவதற்காக
ஒவ்வொரு பொருளையும்
ஜோடி ஜோடியாக
நாம் படைத்தோம்.
51:50. ஆகவே,
அல்லாஹ்வின்
பக்கம் விரைந்து
செல்லுங்கள்;
நிச்சயமாக, நான்
அவனிடமிருந்து
உங்களுக்குத்
தெளிவாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனாகவே
இருக்கின்றேன்
(என்று நபியே! நீர்
கூறுவீராக). 51:51. மேலும்,
அல்லாஹ்வுடன்
வேறு நாயனை (இணையாக)
ஆக்காதீர்கள்;
நிச்சயமாக, நான்
அவனிடமிருந்து
உங்களுக்குத்
தெளிவாக அச்சமூட்டி
எச்சரிக்கை செய்பவனாகவே
- இருக்கின்றேன்
(என்றும் கூறும்).
51:52. இவ்வாறே,
இவர்களுக்கு
முன்னிருந்தவர்களிடம்
(நம்) தூதர்களிலிருந்து
ஒருவர் வரும்
போதெல்லாம், அவர்கள்
(அவரை) சூனியக்காரர்,
அல்லது பைத்தியக்காரர்
என்று கூறாமல்
இருந்ததில்லை.
51:53. இவ்வாறுதான்
அவர்கள் தங்களுக்குள்
(நம் தூதர்களைப்
பழிக்க வேண்டுமென)
ஒருவருக்கொருவர்
உபதேசம் செய்து
கொண்டனரா? அன்று,
அவர்கள் அக்கிரமக்கார
சமூகத்தாராகவே
இருந்தனர். 51:54. ஆகவே
(நபியே!) நீர் அவர்களைப்
புறக்கணித்து
(விலகி) விடும்;
(அப்படி நீர் விலகிவிடுவீராயின்
அதற்காக) நீர்
பழிக்கப்படமாட்டீர்.
51:55. மேலும்,
நீர் நல்லுபதேசம்
செய்வீராக! ஏனெனில்,
நிச்சயமாக நல்லுபதேசம்
முஃமின்களுக்கு
நற்பயனளிக்கும்.
51:56. இன்னும்,
ஜின்களையும்,
மனிதர்களையும்
அவர்கள் என்னை
வணங்குவதற்காகவேயன்றி
நான் படைக்கவில்லை.
51:57. அவர்களிடமிருந்து
எந்த பொருளையும்
நான் விரும்பவில்லை.
எனக்கு அவர்கள்
உணவு அளிக்க வேண்டுமென்றும்
நான் விரும்பவில்லை.
51:58. நிச்சயமாக
அல்லாஹ்தான்
உணவு அளித்துக்
கொண்டிருப்பவன்;
பலம் மிக்கவன்;
உறுதியானவன்.
51:59. எனவே,
அநியாயம் செய்து
கொண்டிருப்போருக்கு,
அவர்களுடைய தோழர்களுக்கு
வேதனையிலிருந்து
ஒரு பங்கு இருந்தது
போல், ஒரு பங்கு
நிச்சயமாக உண்டு ஆகவே,
(தண்டனைக்காக)
அவர்கள் என்னை
அவசரப்படுத்த
வேண்டாம். 51:60. ஆகவே,
காஃபிர்களுக்கு
அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்ட
அவர்களுடைய நாளில்,
கேடுதான். 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |