|
அத்தியாயம்-56 ஸ_ரத்துல்
வாகிஆ (மாபெரும்
நிகழ்ச்சி) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 56:1.
மாபெரும் நிகழ்ச்சி(யான
இறுதிநாள்) ஏற்பட்டால் 56:2.
அந்நிகழ்ச்சியைப்
பொய்யாக்குவது
எதுவுமில்லை.
56:3.
அது (தீயோரைத்)
தாழ்த்தி விடும், (நல்லோரை)
உயர்த்தி விடும்.
56:4.
பூமி நடுக்கத்தால்
நடுக்கமடையச்
செய்யும் போது.
56:5.
இன்னும் மலைகள்
தூள் தூளாக ஆக்கப்படும்
போது, 56:6.
பின்னர், அது பரப்பப்பட்ட
புழுதி ஆகிவிடும்.
56:7.
(அப்போது) நீங்களும்
மூன்று பிரிவினர்களாகி
விடுவீர்கள்.
56:8.
(முதலாமவர்) வலது
பாரிசத்திலுள்ளோர்
- வலது பாரிசத்துக்காரர்
யார்? (என்பதை அறிவீர்களா?) 56:9.
(இரண்டாமவர்) இடது
பாரிசத்திலுள்ளோர்
- இடது பாரிசத்திலுள்ளோர்
யார்? (என அறிவீர்களா?) 56:10.
(மூன்றாமவர் நம்பிக்கையில்)
முந்தியவர்கள்
(மறுமையிலும்)
முந்தியவர்களே
யாவார்கள். 56:11.
இவர்கள் (இறைவனுக்கு)
அண்மையிலாக்கப்பட்டவர்கள்.
56:12.
இவர்கள் பாக்கியங்களுள்ள
(சுவனச்) சோலைகளில்
இருப்பர். 56:13.
முதலாமவரில்
ஒரு பெருங் கூட்டத்தினரும், 56:14.
பின்னவர்களில், ஒரு சொற்பத்தொகையினரும்
- 56:15.
(பொன்னிழைகளால்)
ஆக்கப் பெற்ற
கட்டில்களின்
மீது - 56:16.
ஒருவரையொருவர்
முன்னோக்கியவாகளாக, அவற்றின்
மீது சாய்ந்திருப்பார்கள்.
56:17.
நிலையான இளமையுடைய
இளைஞர்கள் (இவர்கள்
பணிக்காகச்) சுற்றிக்
கொண்டே இருப்பார்கள்.
56:18.
தெளிந்த பானங்களால்
நிறம்பிய கிண்ணங்களையும், கெண்டிகளையும், குவளைகளையும்
கொண்டு (அவர்களிடம்
சுற்றி வருவார்கள்).
56:19.
(அப்பானங்களைப்
பருகும்) அவர்கள்
அவற்றினால் தலை
நோய்க்காளாக
மாட்டார்கள், மதிமயங்கவுமாட்டார்கள்.
56:20.
இன்னும் அவர்கள்
தெரிந்தெடுக்கும்
கனி வகைகளையும்
- 56:21.
விரும்பும் பட்சிகளின்
மாமிசத்தையும்
(கொண்டு அவ்விளைஞர்கள்
வருவார்கள்). 56:22.
(அங்கு இவர்களுக்கு)
ஹ_ருல் ஈன் (என்னும்
நெடிய கண்களுடைய)
கன்னியர் இருப்பர்.
56:23.
மறைக்கப்பட்ட
முத்துக்களைப்
போல் அவர்கள்
(இருப்பார்கள்).
56:24.
(இவையாவும்) சுவர்க்க
வாசிகள் (இம்மையில்
செய்து கொண்டிருந்த)
செயல்களுக்கு
கூலியாகும். 56:25.
அங்கு இவர்கள்
வீணானதையும், பாவமுண்டாக்குவதையும்
(கொண்ட பேச்சுகளைச்)
செவியுற மாட்டார்கள்.
56:26.
'ஸலாம், ஸலாம்"
என்னும் சொல்லையே
(செவியுறுவார்கள்).
56:27.
இன்னும் வலப்புறத்தார்கள்
- வலப்புறத்தார்கள்
யார்? (என்பதை அறிவீர்களா?) 56:28.
(அவர்கள்) முள்ளில்லாத
இலந்தை மரத்தின்
கீழும்: 56:29.
(நுனி முதல் அடிவரை)
குலை குலையாகப்
பழங்களுடை வாழை
மரத்தின் கீழும்:
56:30.
இன்னும், நீண்ட
நிழலிலும், 56:31.
(சதா) ஒலித்தோடிக்
கொண்டிருக்கும்
நீரின் அருகிலும், 56:32.
ஏராளமான கனிவகைகளின்
மத்தியிலும்
- 56:33.
அவை அற்றுப் போகாதவை, (உண்ணத்)
தடுக்கப்படாதவை
- 56:34.
மேலும், உன்னதமான
விரிப்புகளில்
(அமர்ந்திருப்பர்).
56:35.
நிச்சயமாக (ஹ_ருல்
ஈன் என்னும் பெண்களைப்)
புதிய படைப்பாக, நாம்
உண்டாக்கி, 56:36.
அப்பெண்களைக்
கன்னிகளாகவும், 56:37.
(தம் துணைவர் மீது)
பாசமுடையோராகவும், சம வயதினராகவும், 56:38.
வலப்புறத்தோருக்காக
(ஆக்கி வைத்துள்ளோம்).
56:39.
முன்னுள்ளோரில்
ஒரு கூட்டமும், 56:40.
பின்னுள்ளோரில்
ஒரு கூட்டமும்
(வலப்புறத்தோராக
இருப்பார்கள்).
56:41.
இடது பாரிசத்திலுள்ளவர்களோ
இடது பாரிசத்திலுள்ளவர்கள்
யார்? (என்று அறிவீர்களா?) 56:42.
(அவர்கள்) கொடிய
அனல் காற்றிலும், கொதிக்கும்
நீரிலும் - 56:43.
அடர்ந்து இருண்ட
புகையின் நிழலிலும்
இருப்பார்கள்.
56:44.
(அங்கு) குளிர்ச்சியுமில்லை, நலமுமில்லை.
56:45.
நிச்சயமாக அவர்கள்
இதற்கு முன்னர்
(உலகத்தில்) சுகபோகிகளாக
இருந்தனர். 56:46.
ஆனால், அவர்கள்
பெரும் பாவத்தின்
மீது நிலைத்தும்
இருந்தனர். 56:47.
மேலும், அவர்கள், ''நாம்
மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும்
ஆகி விட்டாலும், நாம்
மீண்டும் நிச்சயமாக
எழுப்பப்படுவோமா?""
என்று
கேட்டுக் கொண்டு
இருந்தனர். 56:48.
''அல்லது, முன்னோர்களான
நம் தந்தையருமா? (எழுப்பப்படுவர்?""
என்றும்
கூறினர்.) 56:49.
(நபியே!) நீர் கூறும்:
''(நிச்சயமாக
உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்.
56:50.
''குறிப்பிட்ட
நாளின் ஒரு நேரத்தில்
(நீங்கள் யாவரும்)
ஒன்று கூட்டப்படுவீர்கள்.
56:51.
அதற்குப் பின்னர்:
''பொய்யர்களாகிய
வழி கேடர்களே!
நிச்சயமாக நீங்கள், 56:52.
ஜக்கூம் (என்னும்
கள்ளி) மரத்திலிருந்தே
நீங்கள் புசிப்பவர்கள்.
56:53.
ஆகவே, ''அதைக் கொண்டே
வயிறுகளை நிரப்புவீர்கள்.
56:54.
அப்புறம் அதன்மேல்
கொதிக்கும் நீரையே
குடிப்பீர்கள்.
56:55.
''பின்னும்
ஹீம் - தாகமுள்ள
ஒட்டகை குடிப்பதைப்
போல் குடிப்பீர்கள்.""
56:56.
இதுதான் நியாயத்
தீர்ப்பு நாளில்
அவர்களுக்கு
விருந்தாகும்.
56:57.
நாமே உங்களைப்
படைத்தோம். எனவே, (நாம்
கூறுவதை) நீங்கள்
உண்மையென்று
நம்ப வேண்டாமா? 56:58.
(கர்ப்பப் பையில்)
நீங்கள் செலுத்தும்
இந்திரியத்தைக்
கவனித்தீர்களா? 56:59.
அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது
நாம் படைக்கின்றோமா? 56:60.
உங்களுக்கிடையில்
மரணத்தையும்
நாமே ஏற்படுத்தியுள்ளோம், எனவே
நம்மை எவரும்
மிகைக்க முடியாது.
56:61.
(அன்றியும் உங்களைப்
போக்கி விட்டு)
உங்கள் போன்றோரை
பதிலாகக் கொண்டு
வந்து நீங்கள்
அறியாத உருவத்தில்
உங்களை உண்டாக்கவும்
(நாம் இயலாதவர்கள்
அல்ல). 56:62.
முதல் முறையாக
(நாம் உங்களைப்)
படைத்தது பற்றி
நிச்சயமாக நீங்கள்
அறிவீர்கள் - எனவே
(அதிலிருந்து
நினைவு கூர்ந்து)
நீங்கள் உணர்வு
பெற வேண்டாமா? 56:63.
(இப்பூமியில்)
விதைப்பதை நீங்கள்
கவனித்தீர்களா? 56:64.
அதனை நீங்கள்
முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது
நாம் முளைக்கச்
செய்கின்றோமா? 56:65.
நாம் நாடினால்
திட்டமாக அதனைக்
கூளமாய் ஆக்கிவிடுவோம்
- அப்பால் நீங்கள்
ஆச்சரியப்பட்டுக்
கொண்டு இருப்பீர்கள்.
56:66.
''நிச்சயமாக
நாம் கடன் பட்டவர்களாகி
விட்டோம். 56:67.
''மேலும், (பயிர்களிலிருந்து
எதுவும் பெற முடியாதவர்களாகத்)
தடுக்கப்பட்டு
விட்டோம்"" (என்றும்
கூறிக் கொண்டிருப்பீர்கள்).
56:68.
அன்றியும், நீங்கள்
குடிக்கும் நீரைக்
கவனித்தீர்களா? 56:69.
மேகத்திலிருந்து
அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது
நாம் இறக்குகிறோமா? 56:70.
நாம் நாடினால், அதைக்
கைப்புள்ள தாக்கியிருப்போம்; (இவற்றுக்கெல்லாம்)
நீங்கள் நன்றி
செலுத்த வேண்டாமா? 56:71.
நீங்கள் மூட்டும்
நெருப்பை கவனித்தீர்களா? 56:72.
அதன் மரத்தை நீங்கள்
உண்டாக்கினீர்களா? அல்லது
நாம் உண்டு பண்ணுகிறோமா? 56:73.
நாம் அதனை நினைவூட்டுவதாகவும், பயணிகளுக்கு
பயனளிக்கப்பதற்காகவும்
உண்டாக்கினோம்.
56:74.
ஆகவே, மகத்தான உம்முடைய
ரப்பின் திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹ{ செய்வீராக.
56:75.
நட்சத்திர மண்டலங்களின்
மீது நான் சத்தியம்
செய்கிறேன். 56:76.
நீங்கள் அறீவீர்களாயின்
நிச்சயமாக இது
மகத்தான் பிரமாணமாகும்.
56:77.
நீச்சயமாக, இது மிகவும்
கண்ணியமும் சங்கையும்
மிக்க குர்ஆன்
ஆகும். 56:78.
பாதுகாக்கப்பட்ட
ஏட்டில் இருக்கிறது.
56:79.
தூய்மையானவர்களைத்
தவிர (வேறெவரும்)
இதனைத் தொட மாட்டார்கள்.
56:80.
அகிலத்தாரின்
இறைவனால் இது
இறக்கியருளப்பட்டது.
56:81.
அவ்வாறிருந்தும், (குர்ஆனின்
மகத்தான) இச்செய்தி
பற்றி நீங்கள்
அலட்சியமாக இருக்கிறீர்களா? 56:82.
நீங்கள் பொய்ப்பிப்பதை
(இறைவன் தந்த) உங்கள்
பாக்கியங்களுக்கு
(நன்றியாக) ஆக்குகின்றீர்களா? 56:83.
மரணத் தறுவாயில்
ஒருவனின் (உயிர்)
தொண்டைக் குழியை
அடையும் போது
- 56:84.
அந்நேரம் நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
56:85.
ஆயினும், நாமோ
அவனுக்கு உங்களை
விட சமீபமாக இருக்கிறோம்.
எனினும் நீங்கள்
பார்க்கிறீர்களில்லை.
56:86.
எனவே, (மறுமையில்
உங்கள் செயல்களுக்கு)
கூலி கொடுக்கப்பட
மாட்டீர்கள்
என்று இருந்தால்
- 56:87.
நீங்கள் உண்மையாளராக
இருப்பின், (அவ்வுயிரை)
மீளவைத்திருக்கலாமே!
56:88.
(இறந்தவர் இறைவனுக்கு)
நெருக்கமானவர்களில்
நின்றும் இருப்பாராயின்.
56:89.
அவருக்குச் சுகமும், நல்லுணவும்
இன்னும் பாக்கியமுள்ள
சுவர்க்கமும்
உண்டு. 56:90.
அன்றியும், அவர்
வலப்புறத்துத்
தோழராக இருந்தால், 56:91.
''வலப்புறத்தோரே!
உங்களுக்கு ''ஸலாம்""
உண்டாவதாக"" (என்று
கூறப்படும்). 56:92.
ஆனால் அவன் வழிகெட்டுப்
பொய்யாக்குவோரில்
(ஒருவனாக) இருந்தால்
56:93.
கொதிக்கும் நீரே, அவனுக்கு
விருந்தாகும்.
56:94.
நரக நெருப்பில்
தள்ளப்படுவது
(விருந்தாகும்).
56:95.
நிச்சயமாக இதுதான்
உறுதியான உண்மையாகும்.
56:96.
எனவே (நபியே!) மகத்தான
உம்முடைய இறைவனின்
திருநாமத்தைக்
கொண்டு தஸ்பீஹ{ செய்வீராக.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |