|
அத்தியாயம்-72 ஸ_ரத்துல்
ஜின்னு (ஜின்கள்)
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
72:1. நிச்சயமாக,
ஜின்களில் சில
(திருக் குர்ஆனை)
செவிமடுத்து(த்
தம் இனத்தாரிடம்
கூறினர்) ''நிச்சயமாக
நாங்கள், மிகவும்
ஆச்சரியமான ஒரு
குர்ஆனை கேட்டோம்""
என்று கூறினர்,
என எனக்கு வஹீ
அறிவிக்கப்பட்டதென்று
(நபியே!) நீர் கூறுவீராக.
72:2. ''அது நேர்மையின்
பால் வழிகாட்டுகிறது,
ஆகவே அதைக் கொண்டு
நாங்கள் ஈமான்
கொண்டோம்; அன்றியும்
எங்கள் இறைவனுக்கு
ஒருவனையும் நாங்கள்
இணையாக்கமாட்டோம்""
(என்று அந்த ஜின்
கூறலாயிற்று).
72:3. ''மேலும்
எங்கள் இறைவனுடைய
மகிமை நிச்சயமாக
மிக்க மேலானது,
அவன் (எவரையும்
தன்) மனைவியாகவோ
மகனாகவோ எடுத்துக்
கொள்ளவில்லை.
72:4. ''ஆனால்
நம்மில் மூடராகிவிட்ட
(சிலர்) அல்லாஹ்வின்
மீது தகாத வார்த்தைகளை
சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
72:5. மேலும்
''மனிதர்களும்
ஜின்களும் அல்லாஹ்வின்
மீது பொய் கூறவே
மாட்டார்கள்""
என்று நிச்சயமாக
நாம் எண்ணிக்
கொண்டிருந்தோம்.
72:6. ''ஆனால்,
நிச்சயமாக மனிதர்களிலுள்ள
ஆடவர்களில் சிலர்
ஜின்களிலுள்ள
ஆடவர்கள் சிலரிடம்
காவல் தேடிக்
கொண்டிருந்தனர்,
இதனால் அவர்கள்,
(ஜின்களிலுள்ள
அவ்வாடவர்களின்)
மமதையை பெருக்கிவிட்டனர்.
72:7. ''இன்னும்,
நிச்சயமாக அவர்களும்
நீங்கள் எண்ணியதைப்
போலவே, அல்லாஹ்
ஒருவரையும் (மறுமையில்
உயிர்ப்பித்து)
எழுப்பமாட்டான்
என்று எண்ணிக்
கொண்டு இருந்தனர்.
72:8. ''நிச்சயமாக
நாம் வானத்தைத்
தொட்டுப் பார்த்தோம்.
அது கடுமையான
காவலாளிகளாலும்,
தீப்பந்தங்களாலும்
நிரப்பப்பட்டிருப்பதை,
நாங்கள் கண்டோம்.
72:9. ''(முன்னர்
வானில் பேசப்படுவதைச்)
செவிமடுப்பதற்காக
(அதற்குள்ள சில)
இடங்களில் நாங்கள்
அமர்ந்திருப்போம்;
ஆனால் இப்பொழுதோ
எவன் அவ்வாறு
செவிமடுக்க முயல்கிறானோ,
அவன் தனக்காகக்
காத்திருக்கும்
தீப்பந்தத்தையே
கண்பான். 72:10. ''அன்றியும்,
பூமியிலிருப்பவர்களுக்குத்
தீங்கு நாடப்பட்டிருக்கிறதா,
அல்லது அவர்களுடைய
இறைவன் அவர்களுக்கு
நன்மையை நாடி
இருக்கிறானா
என்பதையும் நாங்கள்
நிச்சயமாக அறிய
மாட்டோம். 72:11. ''மேலும்,
நிச்சயமாக நம்மில்
நல்லோரும் இருக்கின்றனர்,
அப்படியல்லாதவர்களும்
நம்மில் இருக்கின்றனர்,
நாம் பல்வேறு
வழிகளையுடையவர்களாகவும்
இருந்தோம். 72:12. ''அன்றியும்,
நிச்சயமாக நாம்
பூமியில் அல்லாஹ்வை
இயலாமலாக்க முடியாது
என்பதையும், அவனை
விட்டு ஓடி (ஒளிந்து
) கொள்வதாலும்
அவனை (எங்கேயும்)
இயலாமலாக்க முடியாதென்பதையும்,
நாம் அறிந்து
கொண்டோம். 72:13. ''இன்னும்,
நிச்சயமாக நாம்
நேர்வழியை (குர்ஆனை)
செவிமடுத்த போது,
நாம் அதன் மீது
ஈமான் கொண்டோம்.""
எனவே எவன் தன்
இறைவன் மீது ஈமான்
கொள்கிறானோ, அவன்
இழப்பைப் பற்றியும்,
அநீதியைப் பற்றியும்
பயப்படமாட்டான்.
72:14. ''இன்னும்,
நிச்சயமாக, நம்மில்
முஸ்லிம்களும்
இருக்கின்றனர்.
நம்மில் அக்கிரமக்காரர்களும்
இருக்கின்றனர்
- எவர்கள் முஸ்லிம்களாகி
(வழிப்பட்டார்களோ)
அவர்கள் தாம்
நேர்வழியைத்
தேடிக் கொண்டனர்.
72:15. ''அக்கிரமக்காரர்களோ
நரகத்திற்கு
எரி விறகாய் விட்டனர்""
(என்று அந்த ஜின்
கூறிற்று). 72:16. ''(மானிடர்களோ,
ஜின்களோ) அவர்கள்
(நேர்) வழியின்
மீது, உறுதியுடன்
நிலைத்து நின்றால்,
நிச்சயமாக நாம்
அவர்களுக்கு
மிக அதிகமாகத்
தண்ணீர் புகட்டுவோம்.
72:17. ''அதைக்
கொண்டு நாம் அவர்களைச்
சோதிப்பதற்காக,
ஆகவே, எவன் தன்
இறைவனை நினைப்பதைப்
புறக்கணிக்கிறானோ,
அவனைக் கொடிய
வேதனையில் அவன்
புகுத்தி விடுவான்.
72:18. ''அன்றியும்,
நிச்சயமாக மஸ்ஜிதுகள்
அல்லாஹ்வுக்கே
இருக்கின்றன,
எனவே, (அவற்றில்)
அல்லாஹ்வுடன்
(சேர்த்து வேறு)
எவரையும் நீங்கள்
பிரார்த்திக்காதீர்கள்.
72:19. ''மேலும்,
நிச்சயமாக அல்லாஹ்வின்
அடியார் அவனைப்
பிரார்த்தித்தவராக
நின்றபோது, அவர்பால்
அவர்கள் கூட்டம்
கூட்டமாக (வந்து)
நெருங்கிவிடுகின்றனர்.""
72:20. (நபியே!)
நீர் கூறும்; ''நான்
பிரார்த்திப்பதெல்லாம்
என்னுடைய இறைவனைத்
தான்; அன்றியும்,
நான் அவனுக்கு
எவரையும் இணை
வைக்க மாட்டேன்.""
72:21. கூறுவீராக,
''நிச்சயமாக நான்
உங்களுக்கு நன்மையோ,
தீமையோ, செய்ய
சக்தி பெற மாட்டேன்.""
72:22. கூறுவீராக,
''நிச்சயமாக அல்லாஹ்வை
விட்டும் ஒருவரும்
என்னைப் பாதுகாக்க
மாட்டார்; இன்னும்,
அவனையன்றி ஒதுங்குந்
தலத்தையும் நான்
காணமுடியாது.
72:23. ''அல்லாஹ்விடமிருந்து
(வருவதை) எடுத்துச்
சொல்வதும், அவனுடைய
தூதுவத்துவத்தையும்
தவிர (எனக்கு வேறில்லை)
எனவே, எவர் அல்லாஹ்வுக்கும்
அவனுடைய தூதருக்கும்
மாறு செய்கிறாரோ
அவருக்கு நிச்சயமாக
நரக நெருப்புத்தான்.
அதில் அவர் என்றென்றும்
இருப்பர்"" என
(நபியே!) நீர் கூறும்.
72:24. அவர்களுக்கு
வாக்களிக்கப்பட்டதை
(வேதனையை) அவர்கள்
பார்க்கும் போது,
எவருடைய உதவியாளர்கள்
மிக பலஹீனமானவர்கள்
என்பதையும், எண்ணிக்கையில்
மிகக் குறைந்தவர்கள்
என்பதையும் விரைவில்
அறிந்து கொள்வார்கள்.
72:25. (நபியே!)
நீர் கூறும், ''உங்களுக்கு
வாக்களிக்கப்பட்டிருப்பது
(அவ்வேதனை) சமீபமா,
அல்லது என்னுடைய
இறைவன் அதற்குத்
தவணை ஏற்படுத்தியிருக்கிறானா
என்பதை நான் அறியேன்.
72:26. ''(அவன்தான்)
மறைவனாவற்றை
அறிந்தவன்; எனவே,
தான் மறைத்திருப்பவற்றை
அவன் எவருக்கும்
வெளியாக்கமாட்டான்.
72:27. ''தான்
பொருந்திக் கொண்ட
தூதருக்குத்
தவிர - எனவே அவருக்கு
முன்னும், அவருக்குப்
பின்னும் பாதுகாவலர்க(ளான
மலக்குக)ளை நிச்சயமாக
நடத்தாட்டுகிறான்.
72:28. ''தங்களுடைய
இறைவனின் தூதுத்துவச்
செய்திகளை, திட்டமாக
எடுத்துச் சொல்லிவிட்டார்களா?
என்று அறிவதற்காக
- இன்னும் அவர்களிடமுள்ளவற்றை
அவன் சூழ்ந்தறிந்து
கொண்டிருப்பதுடன்,
அவன் சகல பொருளையும்
எண்ணிக்கையால்
மட்டுப்படுத்தி
இருக்கிறான்.""
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |