|
அத்தியாயம்-78 ஸ_ரத்துந் நபா (பெரும் செய்தி) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 78:1. எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்? 78:2. மகத்தான அச்செய்தியைப் பற்றி, 78:3. எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி, 78:4. அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள். 78:5. பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள். 78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா? 78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா? 78:8. இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம். 78:9. மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம். 78:10. அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம். 78:11. மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம். 78:12. உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம். 78:13. ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம். 78:14. அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம். 78:15. அதைக் கொண்டு தானியங்களையும், தாவரங்களையும் நாம் வெளிப்படுத்துவதற்காக. 78:16. (கிளைகளுடன்) அடர்ந்த சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக). 78:17. நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. 78:18. ஸ_ர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். 78:19. இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். 78:20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும். 78:21. நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. 78:22. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. 78:23. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். 78:24. அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். 78:25. கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. 78:26. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். 78:27. நிச்சயமாக அவர்கள் கேள்வி கணக்கில் நம்பிக்கை கொள்ளாமலேயே இருந்தனர். 78:28. அன்றியும் அவர்கள் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறி பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள். 78:29. நாம் ஒவ்வொரு பொருளையும் பதிவேட்டில் பதிவு செய்திருக்கின்றோம். 78:30. ''ஆகவே சுவையுங்கள் - வேதனையைத் தவிர வேறு எதனையும் உங்களுக்கு நாம் அதிகப் படுத்த மாட்டோம்"" (என்று அவர்களுக்குக் கூறப்படும்). 78:31. நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு வெற்றிப் பாக்கியம் இருக்கிறது. 78:32. தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். 78:33. ஒரே வயதுள்ள கன்னிகளும். 78:34. பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). 78:35. அங்கு அவர்கள் வீணானவற்றையும், பொய்ப்பித்தலையும் கேட்கமாட்டார்கள். 78:36. (இது) உம்முடைய இறைவனிடமிருந்து (அளிக்கப் பெறும்) கணக்குப் படியான நன்கொடையாகும். 78:37. (அவனே) வானங்களுக்கும், பூமிக்கும் அவ்விரண்டிற்கும் இடையேயுள்ள வற்றிற்கும் இறைவன்; அர்ரஹ்மான் - அவனிடம் பேச எவரும் அதிகாரம் பெறமாட்டார்கள். 78:38. ரூஹ{ (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். 78:39. அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. 78:40. நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!"" என்று (பிரலாபித்துக்) கூறுவான். 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |