|
அத்தியாயம்-79 ஸ_ரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக- 79:2. (நல்லோர் உயிர்களை) இலோசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக- 79:6. பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்; 79:7. அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும். 79:8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும். 79:9. அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும். 79:10. ''நாம் நிச்சயமாக கப்ருகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?"" என்று கூறுகிறார்கள். 79:11. ''மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?"" 79:12. ''அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்"" என்றும் கூறுகின்றார்கள். 79:13. ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்- 79:14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள். 79:15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா? 79:16. 'துவா" என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து, 79:17. ''நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்."" 79:18. இன்னும் (ஃபிர்அவ்னிடம்; ''பாவங்களை விட்டும்) பரிசத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?"" என்று கேளும். 79:19. ''அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்"" (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்). 79:20. ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார். 79:21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான். 79:22. பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான். 79:23. அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான். 79:24. ''நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா"" என்று (அவர்களிடம்) கூறினான். 79:25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான். 79:26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது. 79:27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான். 79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான். 79:29. அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியையும் வெளியாக்கினான். 79:30. இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான். 79:31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான். 79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். 79:33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பலனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்). 79:34. எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால், 79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். 79:36. அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும். 79:37. எனவே, எவன் வரம்பை மீறினானோ - 79:38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ- 79:39. அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும். 79:40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ, 79,41. நிச்சயமாக
அவனுக்குச் சுவர்க்கம்தான்
தங்குமிடமாகும்.
79:42. (நபியே!
''மறுமையின்) நேரத்தைப்
பற்றி - அது எப்போது
ஏற்படும்?"" என்று
அவர்கள் உம்மைக்
கேட்கிறார்கள்.
79:43. அ(ந்நேரத்)தைப்
பற்றி நீர் குறிப்பிடுவதற்கு
என்ன இருக்கிறது?
79:44. அதன்
முடிவெல்லாம்
உம்முடைய இறைவனிடம்
(அல்லவா) இருக்கிறது.
79:45. அதை பயப்படுவோருக்கு,
நிச்சயமாக நீர்
எச்சரிக்கை செய்பவர்
தாம், 79:46. நிச்சயமாக
அதை அவர்கள் காணும்
நாளில், மாலையிலோ,
அல்லது காலையிலோ
ஒரு சொற்ப நேரமேயன்றி,
அவர்கள் (இவ்வுலகில்)
தங்கியிருக்கவில்லை
என்று தோன்றும்.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |