|
அத்தியாயம்-80 ஸ_ரத்து
அபஸ (கடுகடுத்தார்) அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 80:1.
அவர் கடுகடுத்தார், மேலும்
(முகத்தைத்) திருப்பிக்
கொண்டார். 80:2.
அவரிடம் அந்த
அந்தகர் வந்தபோது, 80:3.
(நபியே! உம்மிடம்
வந்த அவர்) அவர்
தூய்மையாகி விடக்கூடும்
என்பதை நீர் அறிவீரா? 80:4.
அல்லது அவர் (உம்
உபதேசத்தை) நினைவு
படுத்திக்கொள்வதன்
மூலம், (உம்முடைய)
உபதேசம் அவருக்குப்
பலனளித்திருக்கலாம். 80:5.
(உம் உபதேசத்தின்)
தேவையை எவன் அலட்சியம்
செய்கிறானோ- 80:6.
நீர் அவன்பாலே
முன்னோக்குகின்றீர். 80:7.
ஆயினும் (இஸ்லாத்தை
யேற்று) அவன் தூய்மையடையாமல்
போனால், உம் மீது
(அதனால் குற்றம்)
இல்லை. 80:8.
ஆனால், எவர் உம்மிடம்
விரைந்து வந்தாரோ, 80:9.
அல்லாஹ்வுக்கு
அஞ்சியவராக- 80:10.
அவரை விட்டும்
பராமுகமாய் இருக்கின்றீர். 80:11.
அவ்வாறல்ல! ஏனெனில்
(இத்திருக் குர்ஆன்
நினைவூட்டும்)
நல்லுபதேசமாகும். 80:12.
எனவே, எவர் விரும்புகிறாரோ
அவர் அதை நினைவு
கொள்வார். 80:13.
(அது) சங்கையாக்கப்பட்ட
ஏடுகளில் இருக்கிறது. 80:14.
உயர்வாக்கப்பட்டது, பரிசுத்தமாக்கப்பட்டது. 80:15.
(வானவர்களான) எழுதுபவர்களின்
கைகளால்- 80:16.
(லவ்ஹ{ல் மஹ்ஃபூளிலிருந்து
எழுதிய அவ்வானவர்கள்)
சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள். 80:17.
(நன்றி கெட்ட மனிதன்)
அழிவானாக! எவ்வளவு
நன்றி மறந்தவனாக
அவன் இருக்கின்றான்! 80:18.
எப்பொருளால்
அவனை (அல்லாஹ்)
படைத்தான்? (என்பதை
அவன் சிந்தித்தானா?) 80:19.
(ஒரு துளி) இந்திரியத்திலிருந்து
அவனைப் படைத்து, அவனை
(அளவுப்படி) சரியாக்கினான். 80:20.
பின் அவனுக்காக
வழியை எளிதாக்கினான். 80:21.
பின் அவனை மரிக்கச்
செய்து, அவனை
கப்ரில்" ஆக்குகிறான். 80:22.
பின்னர், அவன்
விரும்பும்போது
அவனை (உயிர்ப்பித்து)
எழுப்புவான். 80:23.
(இவ்வாறிருந்தும்
அல்லாஹ் மனிதனுக்கு)
எதை ஏவினானோ அதை
அவன் நிறைவேற்றுவதில்லை. 80:24.
எனவே, மனிதன் தன் உணவின்
பக்கமே (அது எவ்வாறு
பெறப்படுகிறது)
என்பதை நோட்டமிட்டுப்
பார்க்கட்டும். 80:25.
நிச்சயமாக நாமே
மழையை நன்கு பொழியச்
செய்கிறோம். 80:26.
பின், பூமியைப்
பிளப்பதாகப்
பிளந்து- 80:27.
பின் அதிலிருந்து
வித்தை முளைப்பிக்கிறோம். 80:28.
திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்- 80:29.
ஒலிவ மரத்தையும், போPச்சையையும்
- 80:30.
அடர்ந்த தோட்டங்களையும், 80:31.
பழங்களையும், தீவனங்களையும்- 80:32.
(இவையெல்லாம்)
உங்களுக்கும், உங்கள்
கால் நடைகளுக்கும்
பயனளிப்பதற்காக, 80:33.
ஆகவே, (யுக முடிவின்
போது காதைச் செவிடாக்கும்
பெருஞ் சப்தம்
வரும் போது - 80:34.
அந்த நாளில் மனிதன்
விரண்டு ஓடுவான்
- தன் சகோதரனை விட்டும்
- 80:35.
தன் தாயை விட்டும், தன் தந்தையை
விட்டும்; 80:36.
தன் மனைவியை விட்டும், தன் மக்களை
விட்டும்- 80:37.
அன்று ஒவ்வொரு
மனிதனுக்கும்
அவனவன் (அவல) நிலையே
போதுமானதாயிருக்கும். 80:38.
அந்நாளில் சில
முகங்கள் இலங்கிக்
கொண்டிருக்கும். 80:39.
சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும்
இருக்கும். 80:40.
ஆனால் அந்நாளில்
- (வேறு) சில முகங்கள், அவற்றின்
மீது புழுதி படிந்திருக்கும். 80:41.
அவற்றைக் கருமை
இருள் மூடியிருக்கும். 80:42.
அவர்கள்தாம், நிராகரித்தவர்கள,; தீயவர்கள். 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |