|
அத்தியாயம்-86 ஸ_ரத்துத் தாரிஃக் (விடிவெள்ளி) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக 86:2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது? 86:3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம். 86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. 86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும். 86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான். 86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது. 86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன். 86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். 86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது, (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை. 86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக, 86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக, 86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும். 86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல. 86:15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள். 86:16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன். 86:17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக, சொற்பமாக அவகாசம் அளிப்பீராக. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |