|
அத்தியாயம்-88 ஸ_ரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 88:1. சூழந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா? 88:2. அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். 88:3. அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். 88:4. கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும். 88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும். 88:6. அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை. 88:7. அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது, அன்றியும் பசியையும் தணிக்காது. 88:8. அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும். 88:9. தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும். 88:10. உன்னதமான சுவர்க்கச் சோலையில்- 88:11. அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை. 88:12. அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு. 88:13. அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு. 88:14. (அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும். 88:15. மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்- 88:16. விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு. 88:17. (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- 88:18. மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும், 88:19. இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும், 88:20. இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?) 88:21. ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக, நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம். 88:22. அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர். 88:23. ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ- 88:24. அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான். 88:25. நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது. 88:26. பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |