|
அத்தியாயம்-90 ஸ_ரத்துல் பலத் (நகரம்) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 90:1. இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன். 90:2. நீர் இந்நகரத்தில் (சுதந்திரமாகத்) தங்கியிருக்கும் நிலையில், 90:3. பெற்றோர் மீதும், (பெற்ற) சந்ததியின் மீதும் சத்தியமாக, 90:4. திடமாக, நாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். 90:5. 'ஒருவரும், தன் மீது சக்தி பெறவே மாட்டார்" என்று அவன் எண்ணிக் கொள்கிறானா? 90:6. ''ஏராளமான பொருளை நான் அழித்தேன்"" என்று அவன் கூறுகிறான். 90:7. தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா? 90:8. அவனுக்கு நாம் இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா? 90:9. மேலும் நாவையும், இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)? 90:10. அன்றியும் (நன்மை, தீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம். 90:11. ஆயினும், அவன் கணவாயைக் கடக்கவில்லை. 90:12. (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு எது அறிவிக்கும். 90:13. (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- 90:14. அல்லது, பசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும். 90:15. உறவினனான ஓர் அநாதைக்கோ, 90:16. அல்லது (வறுமை) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்). 90:17. பின்னர், ஈமான் கொண்டு, பொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும், கிருபையைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும். 90:18. அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள். 90:19. ஆனால், எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். 90:20. அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப்பட்ட நெருப்பு இருக்கிறது. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |