அத்தியாயம்-91

_ரத்துஷ் ஷம்ஸ் (சூரியன்)

 

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)

 

91:1. சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக

 

91:2. (பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-

 

91:3. (சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-

 

91:4. (அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-

 

91:5. வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைந்திருப்பதின் மீதும் சத்தியமாக-

 

91:6. பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-

 

91:7. ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-

 

91:8. அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.

 

91:9. அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

 

91:10. ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

 

91:11. 'ஸமூது" (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.

 

91:12. அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,

 

91:13. அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: ''இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது, இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்"" என்று கூறினார்.

 

91:14. ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.

 

91:15. அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.

.பெருள் அடக்கம்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114