|
அத்தியாயம்-93 ஸ_ரத்துள்
ளுஹா (முற்பகல்)
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
93:1.
முற்பகல் மீது
சத்தியமாக 93:2.
ஒடுங்கிக் கொள்ளும்
இரவின் மீது சத்தியமாக-
93:3.
உம்முடைய இறைவன்
உம்மைக் கை விடவுமில்லை; அவன்
(உம்மை) வெறுக்கவுமில்லை.
93:4.
மேலும் பிந்தியது
(மறுமை) முந்தியதை
(இம்மையை) விட உமக்கு
மேலானதாகும்.
93:5.
இன்னும், உம்முடைய
இறைவன் வெகு சீக்கிரம்
உமக்கு (உயர் பதவிகளைக்)
கொடுப்பான்; அப்பொழுது
நீர் திருப்தியடைவீர்.
93:6.
(நபியே!) அவன் உம்மை
அநாதையாகக் கண்டு, அப்பால்
(உமக்குப்) புகலிடமளிக்கவில்லையா? 93:7.
இன்னும், உம்மை
வழியற்றவராகக்
கண்டு அவன், (உம்மை) நேர்வழியில்
செலுத்தினான்.
93:8.
மேலும், அவன்
உம்மைத் தேவையுடையவராகக்கண்டு, (உம்மைச்
செல்வத்தால்)
தேவையில்லாதவராக்கினான்.
93:9.
எனவே, நீர் அநாதையைக்
கடிந்து கொள்ளாதீர்.
93:10.
யாசிப்போரை விரட்டாதீர்.
93:11.
மேலும், உம்முடைய
இறைவனின் அருட்கொடையைப்
பற்றி (பிறருக்கு)
அறிவித்துக்
கொண்டிருப்பீராக. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |