|
அத்தியாயம்-94 ஸ_ரத்து
அலம் நஷ்ரஹ் (விரிவாக்கல்)
அளவற்ற
அருளாளனும் நிகரற்ற
அன்புடையோனுமாகிய
அல்லாஹ்வின்
திருப்பெயரால்(துவங்குகின்றேன்)
94:1.
நாம், உம் இதயத்தை
உமக்காக விரிவாக்கவில்லையா? 94:2.
மேலும், நாம்
உம்மை விட்டும்
உம் சுமையை இறக்கினோம்.
94:3.
அது உம் முதுகை
முறித்துக் கொண்டுடிருந்தது.
94:4.
மேலும், நாம்
உமக்காக உம்முடைய
புகழை மேலோங்கச்
செய்தோம். 94:5.
ஆதலின் நிச்சயமாகத்
துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது.
94:6.
நிச்சயமாக துன்பத்துடன்
இன்பம் இருக்கிறது.
94:7.
எனவே, (வேலைகளிலிருந்து)
நீர் ஓய்ந்ததும்
(இறைவழியிலும், வணக்கத்திலும்)
முயல்வீராக. 94:8.
மேலும், முழு
மனத்துடன் உம்
இறைவன் பால் சார்ந்து
விடுவீராக. . 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |