|
அத்தியாயம்-96 ஸ_ரத்துல் அலஃக் (இரத்தக்கட்டி) அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 96:1. (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. 96:2. 'அலக்" என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். 96:3. ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. 96:4. அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். 96:5. மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். 96:6. எனினும் நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான். 96:7. அவன் தன்னை (இறைவனிடமிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது, 96:8. நிச்சயமாக அவன் மீளுதல் உம்முடைய இறைவன்பாலே இருக்கிறது. 96:9. தடை செய்கிறானே (அவனை) நீர் பார்த்தீரா? 96:10. ஓர் அடியாரை - அவர் தொழும்போது, 96:11. நீர் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும், 96:12. அல்லது அவர் பயபக்தியைக் கொண்டு ஏவியவாறு இருந்தும், 96:13. அவரை அவன் பொய்யாக்கி, முகத்தைத் திருப்பிக் கொண்டான் என்பதை நிர் பார்த்தீரா, 96:14. நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? 96:15. அப்படியல்ல: அவன் விலகிக் கொள்ளவில்லையானால், நிச்சயமாக நாம் (அவனுடைய) முன்னெற்றி ரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம். 96:16. தவறிழைத்து பொய்யுரைக்கும் முன்னெற்றி ரோமத்தை, 96:17. ஆகவே, அவன் தன் சபையோரை அழைக்கட்டும். 96:18. நாமும் நரகக் காவலாளிகளை அழைப்போம். 96:19. (அவன் கூறுவது போலல்ல) அவனுக்கு நீர் வழிபடாதீர்; (உம் இறைவனுக்கு) ஸ{ஜூது செய்து (வணங்கி அவனை) நெருங்குவீராக. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 |